உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பிரியங்காவை செயல் தலைவராக்க தமிழக காங்., நிர்வாகிகள் கடிதம்

பிரியங்காவை செயல் தலைவராக்க தமிழக காங்., நிர்வாகிகள் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மஹாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட சில மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க, காங்கிரசின் இடைக்கால தலைவர் அல்லது செயல் தலைவராக பிரியங்காவை நியமிக்குமாறு, மேலிடத்திற்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர்.இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு முன், காங்கிரஸ் தலைவர் கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, வட மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரசார் விரும்பவில்லை. தற்போது, காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், வயது முதிர்வு காரணமாக கார்கேவால் திறம்பட செயல்பட முடியாது. அதனால், கட்சியின் இடைக்கால தலைவர் அல்லது செயல் தலைவராக பிரியங்காவை நியமிக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள மஹாராஷ்டிரா, ஹரியானா போன்ற சில மாநிலங்களின் சட்டசபை தேர்தலை, கார்கே தலைமையில் சந்தித்தால், அம்மாநிலத்தில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, இடைக்கால தலைவர் அல்லது செயல் தலைவராக பிரியங்காவை நியமித்து தேர்தலை சந்தித்தால், அம்மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.ராகுல் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால், வட மாநிலங்களில் அவரது தலைமையிலும், தென் மாநிலங்களில் பிரியங்கா தலைமையிலும் கட்சியை வழிநடத்த முடியும் என, தமிழக காங்கிரசைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர், சோனியா, ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ethiraj
ஜூலை 28, 2024 05:12

Congress is Nehru family property. All others are faithfully slaves to the family


Swaminathan L
ஜூலை 27, 2024 15:53

அப்போ, தென் மாநிலங்களில் ராகுல் தலைமையில் கட்சி வளராது என்று முடிவாகத் தெரிந்து விட்டது போலிருக்கிறது.


Swaminathan L
ஜூலை 27, 2024 15:52

ஆக மோத்தம் கார்கேவை டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு பேக்அப் செய்து சித்தராமையா, சிவகுமார் ஜோடிக்கிடையில் தள்ளி வேடிக்கை பார்க்க ஏற்பாடாகிறதோ?


சந்திரன்
ஜூலை 27, 2024 08:56

நாளைக்கு தலைவரா ஆக்கலாம்


ராமகிருஷ்ணன்
ஜூலை 27, 2024 06:21

கார்க்கே தலைமைக்கு சரியில்லையா, ஜால்ரா அடிக்கவில்லையா.


S. Gopalakrishnan
ஜூலை 27, 2024 02:26

இந்தம்மா படத்தை குளோஸ் அப்பில் போடாதீர்கள். அந்தக் காலத்து விட்டலாச்சார்யா படங்களில் வரும் வெள்ளை பூதம் போல் தெரிகிறது !


vijai
ஜூலை 27, 2024 13:46

நீங்க சொன்னதுல இருந்து பயமா இருக்கு


S. Gopalakrishnan
ஜூலை 27, 2024 02:24

கொத்தடிமைகள் !


A Viswanathan
ஜூலை 27, 2024 10:47

ஏன் பிரியங்கவோட நிறுத்தி விட்டீர்கள். அவருடைய இரண்டு மக்களுக்கும் ஏதாவது பதவி கொடுக்கலாம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை