உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதுரை டங்ஸ்டன் சுரங்க பணியால் சுற்றுச்சூழல் பாதிக்காது: நிபந்தனை பின்பற்றப்படும் என மத்திய அரசு விளக்கம்

மதுரை டங்ஸ்டன் சுரங்க பணியால் சுற்றுச்சூழல் பாதிக்காது: நிபந்தனை பின்பற்றப்படும் என மத்திய அரசு விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி, 'டங்ஸ்டன்' சுரங்க ஒப்பந்தப் பணியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்பட அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும் என, மத்திய சுரங்க அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.தமிழகத்தில் மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி பகுதியில், டங்ஸ்டன் சுரங்க பணி மேற்கொள்வதற்கான குத்தகை, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, 'ஹிந்துஸ்தான் ஜிங்க்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பணியால், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு கூறியுள்ளது.இதற்கு பதிலளித்து மத்திய அரசின் சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி விபரம்: 'சுரங்கம் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம் - 1957' திருத்தப்பட்டு, புதிய திருத்தச் சட்டம், 2023ல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, முக்கியமான மற்றும் ராணுவத்துக்கு தேவைப்படும் கனிமங்கள் வகைப்படுத்தப்பட்டு, அதன் சுரங்கங்கள் குத்தகை மற்றும் வெட்டி எடுப்பதற்கான முழு அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.அந்த வகையில், 24 சுரங்க தொகுதிகள், நான்கு கட்டங்களாக இதுவரை வெற்றிகரமாக குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான், தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கம். இது, 20.16 சதுர கி.மீ., பரப்புளவு உள்ளது. இதை ஏலத்தில் விடுவதற்கான அறிவிப்பு, இந்தாண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசின் கருத்துக்களும் கோரப்பட்டன.மேலுார் மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில், 47.37 ஹெக்டேர் நிலமானது, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாமின் நிறுவனத்துக்கு, கிரானைட் சுரங்க ஒப்பந்தத்திற்காக வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2008ல், 30 ஆண்டுக்கு இது வழங்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த குத்தகையை ஒப்படைப்பதாக டாமின் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதுதவிர, ஆரிப்பட்டி மற்றும் மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமங்களில், சில குறிப்பிட்ட பகுதிகள், பல்லுயிர் பாரம்பரிய பகுதிகளாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த, 1.93 சதுர கி.மீ., பகுதிகள், டங்ஸ்டன் சுரங்க குத்தகையில் சேர்க்கப்படவில்லை.இந்தாண்டு பிப்ரவரியில் துவங்கி நவம்பர் 7ம் தேதி சுரங்க குத்தகை தொடர்ச்சி 5ம் பக்கம்

'தி.மு.க., நாடகம் இனியும் எடுபடாது'

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் அறிக்கை:மத்திய அரசின் சுரங்கத்துறை, நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் '2024 பிப்ரவரியில் மதுரையில் 'டங்க்ஸ்டன்' கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் சுரங்கம் அமைக்க, ஒப்பந்த புள்ளி அறிவிப்பதற்கு முன், தமிழக அரசு கொடுத்த குறிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஒப்பந்த புள்ளி வெளியிட்ட, பிப்ரவரி முதல் ஒப்பந்தம் வழங்கப்பட்ட நவம்பர், 7ம் தேதி வரை, தமிழக அரசு இந்த ஒப்பந்தம் குறித்தோ, சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவோ மத்திய அரசை தொடர்பு கொள்ளவில்லை.டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க, மத்திய அரசை கோரியது, தி.மு.க., அரசு தான். சுரங்க ஒப்பந்தம் வெளியிட குறிப்புகள் கொடுத்ததும் தி.மு.க., அரசு தான். கடந்த பத்து மாதமாக, இதை மறைத்து வைத்திருந்த தி.மு.க., அரசு, தற்போது எதிர்ப்பு வருவதால், எதுவும் தெரியாதது போல நாடகமாடுகிறது.மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில் தமிழக அரசின் 'டாமின்' நிறுவனம் 2008 முதல் 30 ஆண்டுகளுக்கு, 117 ஏக்கர் நிலத்தில் கிரானைட் சுரங்கம் அமைப்பதற்கான, குத்தகை உரிமத்தை திருப்பி கொடுத்துள்ளது. மதுரை அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில், மொத்தம் உள்ள 20.16 சதுர கி.மீ., நில அளவில், 1.93 சதுர கி.மீ., அளவே பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபரங்களை தி.மு.க., அரசு, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தில், தெரியாமல் கையெழுத்து போட்டு விட்டேன் என, பத்து ஆண்டுக்கு முன் அரங்கேற்றிய அதே நாடகத்தை, தற்போது மீண்டும் அரங்கேற்ற, முதல்வர் ஸ்டாலின் துடிக்கிறார். தி.மு.க., நாடகம் இனியும் பொதுமக்களிடம் எடுபடாது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பல்லவி
டிச 02, 2024 16:28

எப்படியோ தமிழ் நாட்டு கனிமங்களை கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்


hari
டிச 02, 2024 17:04

yes TN ministers are doing it....


சம்பா
டிச 02, 2024 12:33

ஒவ்வெண்ணுக்கும் ஒருத்தன் கிளம்பிடுறானுக


Saai Sundharamurthy AVK
டிச 02, 2024 09:32

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று, The New Indian Express ஊடகத்தில் வெளிவந்த செய்தியின்படி, மதுரையில் டங்ஸ்டன் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சுரங்கம் அமைக்க, தமிழக அரசு, மத்திய அரசின் அனுமதி கோரி இருப்பதாகவும், தமிழக கனிம வளத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. மத்திய அரசின் சுரங்கத் துறை நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2024 பிப்ரவரி மாதம், மதுரையில் டங்ஸ்டன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் சுரங்கம் அமைக்க ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பதற்கு முன்பாக, தமிழக அரசு கொடுத்த குறிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்றும், ஒப்பந்தப் புள்ளி வெளியிட்ட பிப்ரவரி மாதம் முதல், ஒப்பந்தம் வழங்கப்பட்ட நவம்பர் 7, 2024 வரையிலான பத்து மாதங்கள், தமிழக அரசு இந்த ஒப்பந்தத்தைக் குறித்தோ, சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவோ மத்திய அரசைத் தொடர்புகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதும் திமுக அரசு தான். சுரங்க ஒப்பந்தம் வெளியிடக் குறிப்புகள் கொடுத்ததும் திமுக அரசு தான். கடந்த பத்து மாதங்களாக இது குறித்து வெளியில் தெரியாமல் மறைத்து வைத்திருந்த திமுக அரசு..... தற்போது எதிர்ப்பு வந்ததும், இது குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாதது போல நாடகமாடுகிறது. இதே மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில், தமிழக அரசின் டாமின் நிறுவனம், 2008 முதல் 30 ஆண்டுகளுக்கு, 47.37 ஹெக்டேர் நிலத்தில் கிரானைட் சுரங்கம் அமைக்கக் குத்தகை பெற்றுள்ளதையும், தற்போது டாமின் நிறுவனம் தனது குத்தகை உரிமத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளதையும், மதுரை அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில், மொத்தமுள்ள 20.16 சதுர கி.மீ. நில அளவில், 1.93 சதுர கி.மீ அளவே பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் திமுக அரசு, மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தில் தெரியாமல் கையெழுத்து இட்டுவிட்டேன் என்று, சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேற்றிய அதே நாடகத்தை, தற்போது மீண்டும் அரங்கேற்றத் துடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவின் நாடகம், பொதுமக்களிடம் இனியும் எடுபடாது....


அப்பாவி
டிச 02, 2024 07:55

எப்புடி? நிலத்தில்.ஓட்டை போட்டு டங்ஸ்டனை மட்டும் உறிஞ்சி எடுத்துறீவளா?


ghee
டிச 02, 2024 10:45

உனக்கு சொன்னா புரியுமா..


புதிய வீடியோ