உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆளுங்கட்சியிலிருந்து பா.ஜ.,வுக்கு வருவர்: நயினார் நாகேந்திரன்

ஆளுங்கட்சியிலிருந்து பா.ஜ.,வுக்கு வருவர்: நயினார் நாகேந்திரன்

விழுப்புரம்: முருக பக்தர்கள் மாநாட்டை விளம் பரத்துக்காக நடத்த வில்லை எனவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் கூட பங்கேற்கலாம் எனவும் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி:

நாங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்; விரைவில், கூட்டணியை பேசி முடிப்போம். அமித் ஷா கூறியது போல, தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர் பழனிசாமி தான். மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பைக்கில் செல்ல கூட, தி.மு.க., அரசு அனுமதி மறுக்கிறது. முதல்வர் என்றால், அனைத்து கட்சியினருக்கும் சமமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் நடப்பது, ஒருதலை பட்சமான ஆட்சி. மாநாட்டிற்கே அனுமதி தர முதல்வர் மறுக்கிறார். அவரை அழைக்கச் சென்றால், பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. இந்த மாநாட்டில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என நினைக்கிறார் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. மாநாட்டை விளம்பரத்திற்காக பா.ஜ., பயன்படுத்துவதாக சீமான் சொல்கிறார்.ஆனால், என்னுடைய கடவுளே முருகன் தான் என்று சொல்லி வந்தார். இப்போது, பா.ஜ., முருகனுக்கு மாநாடு நடத்துகிறது என்றதும், கொந்தளிக்கிறார். எங்களை பொறுத்தவரை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் கூட இந்த மாநாட்டில் பங்கேற்கலாம். முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள, அனைத்து கட்சியினரையும் அழைக்கிறோம்; அவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். தமிழகம் ஆன்மிக பூமியாக மாறியுள்ளது. நடிகர் விஜய்க்கும் பா.ஜ.,விற்கும் எந்த தொடர்பும் கிடையாது. தேர்தல் வருவதற்குள், தி.மு.க.,வில் இருந்தே நிறைய பேர் பா.ஜ.,வை நோக்கி வருவர். அதற்காக, எங்களோடு பலரும் பேசி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

alagu uae
ஜூன் 16, 2025 17:33

ஹிந்து முன்னணி, பாஜகக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லையென்று சொன்னார்கள். இப்போ இவங்க எல்லாத்தையும் naanga தான் நடத்துறோம் என்று சொல்றாங்க. RSS = BJP ஒன்று தானே? நீங்க BJP நடத்துறதுனு சொல்ல வேண்டியது தானே? அப்புறம் எதுக்கு ஹிந்து முன்னணி என்று உருவாக்கினீங்க?"


madhesh varan
ஜூன் 16, 2025 12:57

நாயனாருக்கு 20 தொகுதிக்கு மேல நிக்க நாதி இல்லாம இருக்குது, இதுல கூட்டணி ஆசையாம், அதிமுக காரன் உனக்கு kuduppa


P. SRINIVASAN
ஜூன் 16, 2025 11:49

இவரு ஒரு காமெடியன்


புரொடஸ்டர்
ஜூன் 16, 2025 11:12

சீமான் பனை மரத்தில் ஏறி கள் இறக்கி குடித்து தள்ளாடிக்கொண்டு இருக்கிறார்


vivek
ஜூன் 16, 2025 08:13

பாவம் உன் நிலைமை மோசம்....


Oviya Vijay
ஜூன் 16, 2025 07:10

ஆக மொத்தத்துல உங்க கட்சியில ஆளுங்க இல்லைன்னு ஒத்துக்கிறீங்க. அப்படித் தானே... வெளியில இருந்து தான் ஆளுங்க வருவாங்க அப்படின்னு வழி மேல விழி வெச்சு காத்துக்கிட்டு இருக்கீங்க... பாவம்யா நீர்... எப்படியும் தோக்கத்தான் போறீங்க... தேர்தலுக்கு அப்புறம் உங்களோட மாநிலத் தலைவர் பதவி காணாமப் போகப் போகுது... ஜெயிச்சு தான் ஒரு பதவியும் வாங்கப் போறதில்லன்னு தெரிஞ்சு போச்சு. தலைமை கொடுத்த பதவியையாவது தக்க வெச்சுக்கோங்க...


vivek
ஜூன் 16, 2025 08:12

ஹி. ஹி


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 16, 2025 10:09

கனவுகளுக்கு எல்லைகள் இல்லை. யார் வேண்டுமானாலும் கனவு காணலாம் எப்படி வேண்டுமானாலும் கனவு காணலாம்.


புதிய வீடியோ