உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இயற்கை எரிவாயு பைப்லைன் திட்டம்: கிருஷ்ணகிரியில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு

இயற்கை எரிவாயு பைப்லைன் திட்டம்: கிருஷ்ணகிரியில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - கோவை இயற்கை எரிவாயு பைப்லைன் திட்டத்தை, மத்திய அரசு துவக்கி வைத்துள்ளது. இத்திட்டத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பல பேருக்கு, வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.நாட்டின் எரிசக்தி தேவையில், இயற்கை எரிவாயு பங்கீட்டை உயர்த்தி, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது.கடந்த, 2ல் பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தை திறந்து வைத்ததுடன், 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிந்த திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தும் வைத்தார்.அதன்படி, கெயில் எனப்படும் இந்திய எரிவாயு ஆணையத்தால், கே.கே.பி.எம்.பி.எல்., திட்டத்தில், கோவை முதல் கிருஷ்ணகிரி வரை, 294 கி.மீ., நீள இயற்கை எரிவாயு பைப்லைன் அமைக்கப்படுகிறது.தேசிய எரிவாயு கட்ட விரிவாகத்தின் படி கொச்சி, கூட்டநாடு, பெங்களூரு, மங்களூரு குழாய் வழி திட்டத்தின் ஒரு பகுதி. இதற்காக, 2,187 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் இந்த பைப்லைன் திட்டத்தால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்கள் பயன்பெற உள்ளன.இந்த மாவட்டங்கள் வழியாக செல்லும், இயற்கை எரிவாயு பைப்லைன், தேசிய எரிவாயு கட்டமைப்புடன் இணையும். இதன் மூலம், இப்பகுதிகளிலுள்ள நகரங்கள், அதனுடன் இணைந்த கிளை பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களுக்கு, சி.என்.ஜி., மற்றும் வீடுகளுக்கான பி.என்.ஜி., இயற்கை எரிவாயுக்களும் கிடைக்கும்.இதன் கட்டுமான பணிக்காக, 6.50 லட்சம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களின் தொழிற்சாலைகளிலும், பல ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கிருஷ்ணகிரி - கோவை பைப்லைன் திட்டத்தால், தமிழகத்தில், 9 மாவட்டங்களுக்கு இயற்கை வாயு எந்நேரமும் கிடைக்கும் வசதி பெறும்.மேலும், 2.70 லட்சம் டன் கரியமில வாயுவின் உமிழ்வும் குறையும். இதன் மூலம், 59.20 லட்சம் நுகர்வோர்களுக்கு பி.என்.ஜி., 1,198 நிலையங்களுக்கு சி.என்.ஜி., இயற்கை எரிவாயுக்களும் வழங்கப்பட உள்ளன. இப்பணிகள், வரும் நவ., மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Vel
ஜன 10, 2024 18:05

நாட்டின் வளர்ச்சிக்கும்,மக்களின் வளர்ச்சிக்கும் உருப்படாத திட்டம். இதனால் பயன்பெற போவது அரசியல் வாதிகளும்,கார்பரேட் முதலாளிகளும் மட்டுமே,விவசாய நிலங்களின் நிலமை?


Alagarasan
ஜன 10, 2024 05:34

அப்பாசாமி சொல்வதனைத்தும் உண்மையே ஹரி.... இந்தத் திட்டத்தில் மக்களுக்கு எந்த பயனும் இல்லை... டெல்டா பகுதியை வறண்ட பூமி ஆக்கும் செயல்தான் இது


N.K
ஜன 09, 2024 19:19

திமுக ஆட்சியில் இல்லாவிட்டால், இதே திட்டம் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும். தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டதாக ஸ்டாலின் கூறுவார்.


Kundalakesi
ஜன 09, 2024 13:21

Recruitment epadi irukum. Veli maanila aatkal velaiku serpeergala


Jai
ஜன 09, 2024 12:42

இது கொச்சியில் இருந்து பெங்களூர் செல்லும் எரிபொருள் செல்லும் பாதை. இதில் கிருஷ்ணகிரியில் எரிவாயு எடுக்க வழி செய்யப்பட்டு அதன்மூலம் உரத்தொழிற்சாலை, ஸ்டீல் தொழிற்சாலை ஏற்படுத்த முடியும். சென்ற ஆட்சியில் இந்த திட்டத்திற்கு பலத்த எதிர்ப்புக் குரல் வந்தது, அவர்கள் இப்போது எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை.இதன் முலம் திமுகவிற்கு எவ்வளவு வாடகை வாய்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ளலாம்


Selvakumar Krishna
ஜன 09, 2024 12:24

Kochi-Koottanad KKBMPL ப்ராஜெக்ட் - இதில் தமிழ்நாட்டுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லை, கோவை முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள நீளத்தில் எந்த விவரமும் தெரியப்படுத்த படுவதில்லை.


அப்புசாமி
ஜன 09, 2024 10:32

படத்தில்.இருக்கிற நாலு வால்வுகளை திறக்க நாலு பேர். மூட நாலுபேர். மூணு ஷிஃப்ட். 24 பேர் இதுக்கே தேவை. இதுமாதிரி லட்சக்கணக்கில் வேலை வந்து கொட்டப்போகுது.


hari
ஜன 09, 2024 11:39

அப்புசாமி யாருனு இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும்.... கிண்டளுக்குக்கே பொறந்தவர் போல......


Duruvesan
ஜன 09, 2024 09:56

கனி எங்கு இருந்தாலும் வந்து போராட்டம் பண்ணி நிறுத்திடுவாங்க


Ramesh Sargam
ஜன 09, 2024 09:15

இந்த வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது திமுக என்றும், ஸ்டாலின்தான் என்றும் ஸ்டிக்கர் அடித்து மக்களை ஏமாற்றும் ஒரு கும்பல்.


Bala
ஜன 09, 2024 08:06

போலி பசுமை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு போராட்டம் துவங்கி விடுவார்களே. அதுவும் இது தேர்தல் சமயம். கேரளா விழிஞ்சம் துறைமுகம் போல் மத ரீதியாகவும் போராட்டத்தை தூண்டி விடுவார்களே....


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை