உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருப்பதியில் நேரு அன்னதானம்: அமலாக்கத்துறை புகாருக்கா... பிறந்த நாள் ஏற்பாடா?

திருப்பதியில் நேரு அன்னதானம்: அமலாக்கத்துறை புகாருக்கா... பிறந்த நாள் ஏற்பாடா?

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை காப்பாற்ற, திருப்பதி வெங்கடாஜலபதியிடம் அமைச்சர் நேரு வேண்டிக் கொண்டு, 44 லட்சம் ரூபாய் நேர்த்திக்கடன் செலுத்தியதாக சமூக வலைதளங்களில் பரப்பரப்பான விவாதமாகி உள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப்பிரசாதம் அறக்கட்டளை சார்பாக மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதான சேவைக்காக, ஒரு நாள் முழு செலவான 44 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lcaudb4l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காலை 10 லட்சம், மதியம் 17 லட்சம் மற்றும் இரவு 17 லட்சம் ரூபாய் என மூன்று வேளைக்கான செலவை தேவஸ்தானத்திடம் முன்கூட்டியே செலுத்தி விட்டால், நன்கொடையாளர் பெயரில், குறிப்பிட்ட நாள் முழுதும் அன்னதானம் அளிக்கப்படுகிறது. நன்கொடை அளித்தவர் பெயர், கோவிலை சுற்றியுள்ள டிஜிட்டல் போர்டுகளில் ஒளிர்ந்து கொண்டு இருக்கும். அந்த வகையில் நேற்று முன்தினம் தி.மு.க.,வின் முதன்மை செயலரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான நேரு, 44 லட்சம் ரூபாய் செலுத்தி, திருப்பதி கோவிலில் அன்னதானம் வழங்கி உள்ளார். அவரது பெயரும், வழங்கிய தொகையும் கோவிலை சுற்றி டிஜிட்டல் போர்டுகளில் ஒளிபரப்பானது. நேற்று முன்தினம் நேருவின் பிறந்த நாள் என்பதால், அதற்காக அன்னதான நன்கொடை அளிக்கப்பட்டதாக, நேரு ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அமலாக்கத்துறை புகாரில் சிக்கியிருக்கும் அவர், அதில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வெங்கடாஜலபதியிடம் வேண்டிக் கொண்டு, அன்னதான நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார் என, சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசுகின்றனர். இது குறித்து அமைச்சர் நேருவிடம் கேட்டபோது, ''எங்கள் குடும்பம் சார்ந்த நிறுவனத்தின் சார்பில் என் பிறந்த நாளுக்காக, ஓராண்டுக்கு முன்பே அன்னதானத்துக்காக திருப்பதி கோவிலுக்கு தொகை செலுத்தி இருந்தனர். ''அந்த வகையில் தான், அன்னதானம் அளிக்கப்பட்டது. அதை கோவில் டிஜிட்டல் போர்டில் போட்டுள்ளனர். மற்றபடி, வேறு எதற்காகவும் அன்னதானம் செய்யவில்லை,'' என்றார். திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று முன்தினம் அன்னதான செலவு 44 லட்சம் ரூபாயை அமைச்சர் நேரு வழங்கியதால், கோவிலின் டிஜிட்டல் போர்டில் அவரது பெயர் ஒளிபரப்பானது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Muralidharan S
நவ 11, 2025 12:31

எங்க... நீங்க கொடுத்தது, திருப்பதி பெருமாளை பற்றி கமெண்ட் அடித்த கனிமொழி அக்காவிற்கு தெரியுமா.. தன்னையே காத்துக்கொள்ள முடியாத பெருமாள் என்று அக்கா கமெண்ட் அடித்தார்.. இப்பொழுது அமலாக்கத்துறையிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள உங்கள் கட்சியினர், பெருமாள் காலில் விழுந்து சரணடைய போகின்றார்களே.. இதுதான் கர்மா என்பது.. விதி வலியது.. கடவுளை தாண்டி இங்கு ஒருவரும் கிடையாது.. கடவுளின் இயக்கத்தில்தான் நீங்கள்.. வயதான கடைசி காலம் நிம்மதியாக இருக்க.. இப்பொழுதாவது புரிந்து கொண்டு திருந்த முயலுங்கள்...


Kulandai kannan
நவ 11, 2025 12:22

ஈன, இழி பிறவி. அடிப்பது கொள்ளை, செய்வது அன்னதானம்.


அப்பாவி
நவ 11, 2025 12:17

இவனை மாதிரி ஆளையெல்லாம் காப்பாத்தி உட்டாதான்.


V RAMASWAMY
நவ 11, 2025 11:52

ஆட்டை போட்ட பணத்திலிருந்துதானே?


ரங்கா
நவ 11, 2025 11:39

தகுதி உள்ள பட்டதாரிகளின் வயிற்றில் அடித்வனுக்கு ஏழேழு ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சாபம் சும்மா விடாது


ராமகிருஷ்ணன்
நவ 11, 2025 11:35

உழைத்த காசில் அன்னதானம் செய்தால் தான் நல்ல பலன் கிடைக்கும். திருடிய ஊழல் காசில் அன்னதானம் செய்தால் பாவம் பல மடங்கு பெருகும்.


திகழ் ஓவியன்
நவ 11, 2025 10:25

உபதேசமெல்லாம் ஊருக்கு மட்டும் தானா


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 11, 2025 09:29

ஏனுங்க, நம்ம தனபாலு அண்ணாச்சிக்கு கொஞ்சம் டவுட்டு வந்துட்டாம். இந்த 44 லட்சத்தை தெலுங்கு மாநிலக்கோவிலுக்குத்தான் கொடுக்கணுமா , தமிழ்நாட்டில் இருக்குற கோவிலுக்கு கொடுத்தா ஆகாதா ன்னு கேக்காக. அப்படிக்கொடுத்தாலும் அதுலே 40 சதவீதம் ஆட்டைய போட்டுடுவாங்கன்னுதான் அவரு அவரோட தாய்மொழி மாநிலக் கோவிலுக்கு கொடுத்தாங்களான்னும் கேக்காக.


Muralidharan S
நவ 11, 2025 12:24

ஹா.. ஹா... ஹா... தமிழ்நாட்டிலே ஆட்டைய போட்டு சம்பாதிக்கும் கர்மா வினையை போக்கிக்கொள்ள ஆந்திரா கோவிலுக்கு ....


சின்னப்பா
நவ 11, 2025 09:03

ஏழைகள் எதிர்காலத்தைப் பாழாக்கி சம்பாதித்த காசு!


theruvasagan
நவ 11, 2025 08:19

இதுதான் திராவிட மாடல் பகுத்தறிவு. எல்லா புகழும் ஈர வெங்காயத்துக்கே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை