உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓரணியில் தமிழகத்துக்கு புதிய நடைமுறை: தி.மு.க.,

ஓரணியில் தமிழகத்துக்கு புதிய நடைமுறை: தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை: தி.மு.க.,வின் 'ஓரணியில் தமிழகம்' பிரசாரத்தை எப்படியாவது தடுக்க முடியாதா என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தவம் கிடந்தார். 'ஓ.டி.பி.,' மட்டும் கேட்காமல், வழக்கம் போல் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள, நீதிமன்றம் அனுமதித்துள்ளது. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையை, எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற பழனிசாமியின் பதற்றமே, 'ஓரணியில் தமிழகம்' பிரசாரம், எந்த அளவுக்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 'சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்' என்ற வகையில், 'ஓ.டி.பி.,' பெறுவதை தடுத்து விட்டோம் என, அடிமைகள் கூட்டம் கூப்பாடு போடுகின்றனர். 'ஓ.டி.பி.,'க்கு மாற்றாக, உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய வழிமுறைகளை, தி.மு.க., நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டும்.

அதன் விபரம்:

மக்களுடன் ஸ்டாலின் செயலியை, அனைவரும் 'அப்டேட்' செய்து கொள்ளுங்கள். ஓ.டி.பி., கேட்கும் முறை தற்போது இல்லை. மொபைல் எண் கட்டாயம். தற்போதைக்கு, ஒரு குடும்பத்துக்கு ஒரு போன் நம்பரில், நான்கு பேரை உறுப்பினர்களாக சேர்க்கலாம். ஒரு குடும்பத்திற்கு, ஒரு மொபைல் போன் எண் என்ற முறை வந்துள்ளது. மொபல் எண் தவறாகவோ அல்லது அந்த குடும்பத்தில் இல்லாத நபரின் எண்ணாகவோ இருந்தால், உறுப்பினர் சேர்க்கையில் மேற்கொண்ட அனைத்து தரவுகளையும் நீக்க வேண்டும். இப்பணியை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து துவங்க வேண்டும் என்பதால், பெறப்படும் மொபைல் எண்ணின் உண்மைத்தன்மையை உறுதிசெய்து கொள்வது அவசியம். மொபைல் எண்ணை பதிவிட்டு சமர்ப்பித்தால், உறுப்பினர் சேர்க்கை முடிவடையும். அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து, முழுமையாக கணக்கெடுப்புகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அஜய் இந்தியன்
ஜூலை 23, 2025 23:34

மானம் ரோசம் உள்ள தமிழன் ஒரு தெலுங்கு மாநிலத்தில் இருந்து வந்து ஆட்சி அதிகாரத்தை செய்யும் திமுக கட்சியில் இணைய மாட்டான்


செயலி மாடல்
ஜூலை 23, 2025 18:52

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர் 234 –ம் நமதே என ஆணவத்துடன் சொன்னார் அப்பா...? இப்போ என்னடான்னா உறுபினர் சேர்க்கை, வாக்காளர் சேர்க்கை செயலி...அப்போ இதெல்லாம் சும்மா டுபாக்கூரா ...?


RAMESH
ஜூலை 23, 2025 13:33

ஓரணியில் திமுகாவே இல்லை...பல வதந்திகள் உலா வருகிறது...உதயநிதி தாக்கு பிடிப்பாரா.....பிரச்சாரத்தில் எடப்பாடி முந்துகிறார் என்கிறது சர்வே.... கூட்டணி கட்சிகளையே திருப்தி படுத்த முடியவில்லை .... சிரமம்...


Rathinasabapathi
ஜூலை 23, 2025 18:53

ஹா ஹா ஹா kamadi


RAAJ68
ஜூலை 23, 2025 11:39

ஓர் அணியில் தமிழகம் என்றால் திமுக கொள்ளையடித்து வைத்திருக்கும் லட்சோப லட்சம் கோடிகளை மக்களுக்கு பகிர்ந்து அளியுங்கள். உங்களுக்கு ஓட்டு போடணும் நாங்க எல்லாம் நடுத்தரங்களை நிக்கணும் நீங்க மட்டும் ராஜபோக வாழ்வை அனுபவிப்பீர்கள்.


Bhaskaran
ஜூலை 23, 2025 10:58

எப்படியும் விலை கொடுத்து வாங்கிவிட கடும் முயற்சி செய்வார்கள்


krishna
ஜூலை 23, 2025 10:01

KONJAM KOODA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI D4AVIDA MODEL KUMBAL.


Chandru
ஜூலை 23, 2025 09:22

கேடு கேட்ட government வெக்கம் கெட்ட government


D Natarajan
ஜூலை 23, 2025 07:41

பட்டா வாங்க லஞ்சம் . உறுப்பினராக ஆவதற்கு எவ்வளவு லஞ்சம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 23, 2025 07:35

நாடு போற்றும் நல்லாட்சி நடத்தி இருந்தால் இப்போது எதற்கு இந்த உறுப்பினர் சேர்க்கை. நல்லாட்சி நடத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருந்தால் எல்லோரும் அவர்களாகவே திமுகவிற்கு ஓட்டு போடுவார்களே. சீப்பை ஒளித்து வைத்து திருமணத்தை நிறுத்தி கள்ளத் தனமாக தேர்தலில் வெற்றி பெறவே தானே இந்த ஓரணியில் திமுக. இந்த திமுக உறுப்பினர் சேர்க்கை என்பதே எவ்வளவு நபர்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்று கணக்கெடுத்து அவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டி இருக்கும் என்று பட்ஜெட் தயாரிக்கவே இந்த உறுப்பினர் சேர்க்கை நாடகம். இதில் திமுக மாவட்டம் மற்றும் வட்டங்கள் ஏமாற்றி விடுவார்கள் என்பதால் அரசு அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகள் வைத்து கணக்கெடுப்பு அரசு செலவில் நடத்தப்படுகிறது.


மனி
ஜூலை 23, 2025 06:43

கழிசடைக்கு சிறந்த உதாரணம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை