உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எஸ்.சி., பெயரில் கடன்; இதர பிரிவினர் பயனாளி தாட்கோவில் புதுவித முறைகேடு

எஸ்.சி., பெயரில் கடன்; இதர பிரிவினர் பயனாளி தாட்கோவில் புதுவித முறைகேடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ஆதிதிராவிட மக்களின் மேம்பாட்டிற்காக தாட்கோ நிறுவனம் வழங்கும் கடன்களை, பட்டியலின மக்கள் பெற்று இதர பிரிவினருக்கு வழங்குவது, கிராமங்களில் அதிகரித்துள்ளது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகமான, தாட்கோ நிறுவனம் சார்பில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மக்கள் பொருளாதார ரீதியாக உயர, பல்வேறு திட்டங்களின் வழியே, 35 சதவீதம் மானியத்துடன் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்களை, இடைத்தரகர்கள், ஆளும் கட்சியினர் மற்றும் ஊராட்சி தலைவர்கள் சிபாரிசு இருந்தால் எளிதாக பெறலாம். சிபாரிசு இல்லாத பலரும், கடன் பெற முடியாமல் திண்டாடி வருகின்றனர்; அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆளும் கட்சி ஆதரவுடன், எஸ்.சி., பயனாளி பெயரில் பெறப்படும் கடன் தொகையை, இதர ஜாதியினருக்கு வழங்குவது கிராமங்களில் அதிகரித்துள்ளது. இதற்கு, கடன் தொகையில் நான்கு சதவீதத்தை, தாட்கோ அதிகாரிகள் லஞ்சமாக பெறுவதாக, கடன் பெற விண்ணப்பித்தும் கிடைக்காத சிலர் கூறுகின்றனர்.

இதுகுறித்து, அம்பேத்கர் மக்கள் கழகம் தலைவர் இளையபாபு கூறியதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளாக, தாட்கோவில் உரிய நபர்களுக்கு கடன் கிடைப்பதில்லை. மாறாக, அரசியல் ஆதரவுடன் செல்வோருக்கு மட்டுமே கடன் கிடைக்கிறது. வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில், ஏழ்மை நிலையில் உள்ள எஸ்.சி., மக்களிடம் ஆசை வார்த்தை கூறும் இதர வகுப்பினர், அவர்கள் பெயரில் கடன் பெறுவது அதிகரித்துள்ளது. இதற்கு உதவும் அதிகாரிகளுக்கு, கடன் தொகையில் நான்கு சதவீதம் லஞ்சம், பயனாளிக்கு மானியத்தில் பாதி மற்றும் மாதாந்திர தொகையும் வழங்கப்படுகிறது. இதனால், உண்மையில் தொழில் துவங்க கடன் கேட்கும் பலருக்கு கடன் கிடைப்பதில்லை. சென்னை தவிர பிற மாவட்டங்களில், இந்த நடைமுறை அதிகரித்துள்ளதால், உண்மையான பயனாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே, இது போன்ற தவறுகளை தடுக்க, தாட்கோ இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடில் ஈடுபடும் அதிகாரி மற்றும் பயனாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Saai Sundharamurthy AVK
மே 27, 2025 11:33

இடஒதுக்கீட்டு, சலுகை எல்லாம் கிறிஸ்துவ மெசினரிகள் ஆட்டை போடுகின்றன.


அப்பாவி
மே 27, 2025 08:16

எப்புடியும் பெரும்பாலோனோர் கடனைத் திரும்பக் கட்டப் போவதில்லை. யாருக்குக் குடுத்தா என்ன?


முக்கிய வீடியோ