உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பொருட்கள் விலை அதிகரித்ததாக பொய் பிரசாரம்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பொருட்கள் விலை அதிகரித்ததாக பொய் பிரசாரம்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: ''சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., அமலான பிறகு, பொருட்களின் விலை அதிகரித்ததாக, பொய் பிரசாரம் செய்கின்றனர்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.சென்னை சிட்டிசன்ஸ் போரம் சார்பில், மத்திய பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்தது.

இதில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

பிரதமர் மோடி மூன்றாவது முறை வெற்றி பெற்ற பிறகு, முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'வளர்ச்சி அடைந்த பாரதம்' 2047ல் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள மாவட்டம்

தற்போது அமெரிக்காவில் அரசு மாறி உள்ளது. அவர்கள் நம் நாட்டு பொருட்களை வாங்க முன் வருகின்றனர். வர்த்தகத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா பக்கபலம். சீனாவில் எலக்ட்ரிக் வாகனங்கள், சோலார் பேனல்கள் உள்ளிட்டவை அதிகமாக உள்ளன. அவற்றை அமெரிக்காவுக்கு அனுப்பினால், நமக்கு பிரச்னை ஏற்படுமா என்பதை எல்லாம் மனதில் வைத்து, பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் சில மாவட்டங்கள் சிறப்பாக முன்னேறிய நிலையில், சில மாவட்டங்கள் பின் தங்கிய நிலையில் உள்ளன. இவற்றை மாற்றவே, 'ஆர்வமுள்ள மாவட்டங்கள்' திட்டத்தை மோடி துவக்கி உள்ளார். பின் தங்கிய மாவட்டமே இருக்கக் கூடாது என, பிரதமர் நினைக்கிறார். தமிழகத்துக்கு கடந்த, 10 ஆண்டுகளில், ஜன்தன் திட்டத்தில் 1.7 கோடி பேருக்கு வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில், 89 லட்சம் வீடுகளுக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் உள்ள ஒட்டுமொத்த ரயில்வே வழித்தடம், தமிழகத்தில் அமைக்கப்பட்டுஉள்ளது.

அதிக வரிப்பணம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 63,246 கோடி ரூபாயில், 60 சதவீதம் மத்திய அரசு வழங்குகிறது. தெரு வியாபாரிகள் துவங்கி, விவசாயிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி என, தமிழகத்துக்கு ஏகப்பட்ட திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.தமிழகத்தில் இருந்து வரிப்பணம் அதிகம் தருகிறோம். ஒரு ரூபாய் தந்தால், 7 பைசா தான் திரும்புகிறது என்கின்றனர். மற்ற சலுகைகள் எல்லாம் எங்கிருந்து வருகிறது. அனைத்துக்கும் முக்கியத்துவம் தந்து வருகிறோம். ஜனரஞ்சகமாக இவர்கள் விவாதிப்பதே தப்பு.தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய போதும், மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு வாயிலாக, அரசியல் கட்சியினர், மத்திய அரசின் பட்ஜெட்டின் சிறப்புகளை, திசை திருப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உழைக்க, மத்திய அரசு கட்டுப்பட்டுள்ளது. இங்கு நடக்கும் ஊழல் குறித்து பேச விரும்பில்லை. இவ்வாறு அவர் பேசினார்.மாணவியர் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது, ''பெண்கள் அரசியலுக்கு வந்தால், அரசியல் சுத்தமாகும். அனைத்து விஷயங்களிலும், குறை கூறுவதை கண்டு கொள்வதில்லை. ''ஜி.எஸ்.டி., வந்த பிறகு பொருட்கள் விலை அதிகரித்ததாக, பொய் பிரசாரம் செய்கின்றனர். வரி விதிப்பு முடிவை, அனைத்து மாநிலங்களும் இணைந்தே எடுக்கின்றன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Mahendran Puru
மார் 26, 2025 13:32

விலைவாசி விவகாரமெல்லாம் எனக்கு தெரியாது. நான் கடையில் சாமான் வாங்க போவது கிடையாது என்று சொன்னாலும் சொல்லுவார்


Ashokan Ramalingam
மார் 24, 2025 19:43

டேய் ஊபீஸ்களா 2014 காங்கிரஸ் ஆட்சியில் எல்லா விதமான பருப்பு வகைகளின் விலையும் அதன்பின் பின்னர் பிஜேபி யின் பத்து ஆண்டு ஆட்சியில் பருப்பு விலையையும் ஒப்பிட்டு பாருங்க தெரியும். அன்றைய காலத்திலே 200 ரூபாய்க்கு மேல் தான் அனைத்து பருப்பு வகைகளின் விலையும் இருந்தது. காங்கிரஸ் ஆட்சி இழக்க முக்கிய காரணமே விலைவாசி உயர்வு காரணமாகத்தான் அதற்கு முக்கிய பங்கு வகித்தவர் அன்றைய ஒன்றிய நிதி அமைச்சர் சிதம்பரம் தான் அதன் பிறகு பிஜேபி ஆட்சியில் வந்த பிறகு அருண் ஜெட்லி நிதி அமைச்சர் ஆன பிறகு விலைவாசி குறைக்க என்னற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்பட்டது. இது அரிசி பருப்பு விலை பற்றி பேசாதீர்கள்


அப்பாவி
மார் 23, 2025 19:46

பத்துரூவா டீ 12 ரூவா. காப்பி 15 ரூவா. அம்மையாருக்கு இதெல்லாம் தெரியவே தெரியாதா?


Sakthi,sivagangai
மார் 23, 2025 21:31

அப்படியே அந்த பாஞ்சி லட்சத்தையும் கேளுங்க


ஆரூர் ரங்
மார் 23, 2025 21:52

அவை உயர்ந்தது பால் மின்சார விலை சொத்து வரி கூடியதாலதான். ஜிஎஸ்டி விகிதம் மாறவில்லை. பாலுக்கு ஜிஎஸ்டி கிடையாது. 20 லட்சத்துக்கு குறைவான விற்றுமுதல் உள்ள டீ காப்பி கடைகளுக்குப் ஜிஎஸ்டி கிடையாது.


ராஜ்
மார் 23, 2025 14:34

வருடத்தில் வருமானம் கூடியிருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. அன்றாடம் காட்சிகளைப் பற்றி யோசியுங்கள். நீங்கள் எல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு குடும்பத்துடன் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவீர்கள். அந்தக் கேட்டகிரி அல்ல நாங்கள்.


nv
மார் 23, 2025 10:58

பத்து வருடத்தில் வருமானம் எவ்வளவு கூடி இருக்கு.. அதை பற்றி ஒருத்தனும் கமெண்ட் பண்ணல?


Kamal
மார் 23, 2025 10:28

whoever is supporting the fm, I am not sure whether you are born rich. if u r too much money then keep quiet. The people who are commenting here are facing problems because of day to day increase in cost of living because of gst. year on year inflation is more and salary is not getting increased.


अप्पावी
மார் 23, 2025 09:05

தங்கம் வாங்குங்கோ.. வாங்கக் காசில்லேன்னா நிர்மலாஜி யிடம் கடன் வாங்கிக்கோங்கோ. திருப்பி தர வாணாம். வாராக்கடன் வங்கில அவரே கட்டிருவாரு.


RAAJ68
மார் 23, 2025 08:08

நான்கு மாதங்களுக்கு முன்பு கோல்டு வின்னர் 113 ரூபாய் கிடைக்கிறது இப்போது 145 சில இடங்களில் 150 ரூபாய். இதற்கு பதில் சொல்லுங்கள். கடையில் பொருட்கள் வாங்கும் போதெல்லாம் உங்களை வசை பாட தோன்றுகிறது


ஆரூர் ரங்
மார் 23, 2025 12:55

சூரியகாந்தி எண்ணெய் பெரும்பாலும் உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கிருந்து சப்ளை இல்லை. இறக்குமதி பொருட்களின் விலை நிர்ணயம் நமது கையிலில்லை.


venugopal s
மார் 23, 2025 08:06

ஆமாம் அமைச்சர் சொல்வது போல் விலைவாசி குறைந்து அரிசி கிலோ ஐந்து ரூபாய்க்கும் பருப்பு வகைகள் கிலோ பத்து ரூபாய்க்கும் கிடைக்கிறது!


சிவம்
மார் 23, 2025 07:43

உங்களுடைய தொலைகாட்சி தூர்தர்ஷன் தான் இருக்கிறதே! அவர்கள் சொல்லும் பொய் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லலாமே! உண்மையை சொல்லாத வரை பொய்கள் தான் உண்மையானவை.


சமீபத்திய செய்தி