உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நாய் கடித்தால் பதற்றம் தேவையில்லை: சோப் கொண்டு கழுவினால் போதும்

நாய் கடித்தால் பதற்றம் தேவையில்லை: சோப் கொண்டு கழுவினால் போதும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'நாய் கடித்தால் பதற்றமடையாமல் சோப் கொண்டு, நீரில் காயத்தை நன்றாக கழுவினாலே போதும்' என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.'வீட்டுக்கு இவன் தான் காவலே, மனிதரை காட்டிலும் தேவலே' நன்றியுள்ள ஜீவன் என்பதால் இன்று மனிதர்களுக்கு இணையாக நாய்களுக்கு இடம் உள்ளது. குழந்தைகளாகவே அவை பாவிக்கப்பட்டு வளர்க்கப்படும் வீடுகளும் உள்ளன.ஆனால், இன்று பல பகுதிகளிலும் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள், ரோட்டில் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடித்து குதறி விடுவதால் அவை அபாயகரமான விலங்காக மாறியுள்ளது.நாய்கள் கடித்த உடன், பதற்றமடைந்து, உடனடியாக டாக்டரை தேடி செல்வோர் அதிகளவில் உள்ளனர். ஆனால், நாய்கள் கடித்த உடன் எவ்வித பதற்றமும் தேவையில்லை. ஓடும் நீரில் சோப் போட்டு கழுவினால் போதும் என்கின்றனர் டாக்டர்கள்.கோவை அரசு மருத்துவமனை பொது மருத்துவத் துறை பேராசிரியர் சிவகுமார் கூறியதாவது:பொதுவாக வீட்டு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டிருக்கும். அதனால், அவை கடித்தால் பதற்றமடைய தேவையில்லை.தெரு நாய்கள் கடித்தாலும் எவ்வித பதற்றமும் அடைய கூடாது. நீரில், சோப் போட்டு, 10 - 15 நிமிடங்கள் நன்றாக கழுவினாலே போதும். எவ்வித பாதிப்பும் ஏற்படாது.அவ்வாறு கழுவினாலே, ரேபிஸ் கிருமிகள் அழிந்து விடும். அதனால், பதற்றப்படத் தேவையில்லை. கிருமிநாசினிகளும் பயன்படுத்தலாம். அதன்பின் மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.டாக்டரின் அறிவுரைப்படி, மூன்று டோஸ்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கண்களில் கடித்தால் மட்டும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி