உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஒரே கூட்டணியில் பா.ம.க., - வி.சி.,; செல்வப்பெருந்தகை ஆசைக்கு எதிர்ப்பு

ஒரே கூட்டணியில் பா.ம.க., - வி.சி.,; செல்வப்பெருந்தகை ஆசைக்கு எதிர்ப்பு

சென்னை : 'ஒரே கூட்டணியில் பா.ம.க., - வி.சி., கட்சிகள் இருப்பது நல்லது' என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு, வி.சி., மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சட்டசபை தேர்தலில் கூட்டணியில் உள்ள கட்சிகளை தக்க வைக்க, தி.மு.க., தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் வி.சி., தலைவர் திருமாவளவன், அவ்வப்போது அரசை விமர்சித்து கருத்துகளை தெரிவித்து வருகிறார். பா.ம.க., இடம்பெறும் கூட்டணியில் வி.சி., இருக்காது என திருமாவளவன் திரும்ப திரும்பக் கூறி வருகிறார். இந்த சூழ்நிலையில் பா.ம.க., நிறுவனர் ராமதாசை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்தார். அன்புமணி, ராமதாஸ் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், நடந்த இந்த சந்திப்பையடுத்து, ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,வை, தி.மு.க., பக்கம் இழுக்கவே, இந்த சந்திப்பு நடந்ததாக தகவல் பரவி வருகிறது. சந்திப்பு குறித்து செல்வப்பெருந்தகையிடம் கேட்டபோது, 'பா.ம.க., - வி.சி., கட்சிகள் ஒரே கூட்டணியில் இருப்பது தான் நல்லது; 2011 தேர்தலில் இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்தன' என்றார்.செல்வப்பெருந்தகையின் கருத்து, வி.சி., கட்சியினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெறுவதை, அவர்கள் விரும்பவில்லை. அவ்வாறு நடந்தால், வி.சி., ஓட்டு வங்கி முழுதும் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு மாற வாய்ப்பு உள்ளது. எனவே, செல்வப்பெருந்தகைக்கு வி.சி., தரப்பு கடும் பதிலடி கொடுத்து வருகிறது. வி.சி., தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'தி.மு.க., - பா.ஜ., கட்சிகள், 2001 தேர்தலில் ஒரே கூட்டணியில் இருந்தன. வரும் 2026 தேர்தலிலும், அதுபோல மீண்டும் கூட்டணி அமைக்கலாமா; அப்படி அமைத்தால், காங்கிரஸ் எந்த கூட்டணியில் இருக்கும்' என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், 'செல்வப்பெருந்தகை கடந்து வந்த பாதை' என்ற பெயரில், அவர் இதுவரை இருந்த கட்சிகளின் பெயர்களை பட்டியலிட்டு அவரது புகைப்படத்துடன் கிண்டலடித்து வருகின்றனர்.தி.மு.க., கூட்டணியில் இருந்து வி.சி.,யை வெளியேற்றிவிட்டு, பா.ம.க.,வை கொண்டு வரும் வேலையை, செல்வப்பெருந்தகை துவக்கி உள்ளதாக கூறப்படுவதால், தி.மு.க., தலைமை தலையிட வேண்டும் என வி.சி., தரப்பில் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Siva Balan
ஜூலை 01, 2025 15:37

விசிக ஒரு ஜாதி வெறி பிடித்த கட்சி.


Kjp
ஜூலை 01, 2025 13:52

கண்டிப்பாக திமுக கூட்டணி அதிமுக கூட்டணி இவைகில் மாற்றம் ஏற்படும் இம்முறை கண்டிப்பாக திமுக ஆட்சியை இழக்கும்.


saravan
ஜூலை 01, 2025 10:57

காங்கிரஸ் நாட்டுக்கே கேடு


theruvasagan
ஜூலை 01, 2025 10:53

ஏற்கனவே பந்தியில உக்காந்திருக்கிறவனுக்கே இலையை போடலியாம். அவன் வெளியே இருக்கிற எவனுக்கோ என் பக்கத்துல இலைையை போடு என்கிறது போல இருக்கு.


ஆரூர் ரங்
ஜூலை 01, 2025 09:59

கீரியையும் பாம்பையும் ஒரே பெட்டியில் அடைத்தால்? சின்னக் கட்சிகள் ஒழிந்தால் திராவிட கட்சிகள் நிம்மதியடையும். ஆனா சாதி அரசியல் செய்வது கடினமாகிவிடும்.


அப்பாவி
ஜூலை 01, 2025 09:54

ஜாதி வெறி சாவுற வரைக்கும் போகாது.


Oviya Vijay
ஜூலை 01, 2025 07:34

பாமக இல்லாமலேயே 2026 தேர்தலில் திமுக கூட்டணி ஜெயிக்கும். பாமக கோஷ்டி சண்டையில் அந்தக் கட்சி தானாகவே பலமிழந்து போகும். ஆகையால் வெளி நபர்கள் எதுவும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. பாமகவை மட்டும் அல்ல தேமுதிகவையும் கண்டு கொள்ளாமல் விட்டாலே போதும். அவர்களாகவே அடங்கி விடுவர். என்னாஆஆஆ பேச்சு... முடியல டா சாமி... எனக்குத் தெரிந்து திமுக கூட்டணி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டு விட்டது... ஆகையால் இனிமேலும் ஒரு கட்சியை அதற்குள் சேர்த்துக் கொள்ள முற்படாமல் தேர்தல் பிரச்சாரத்துக்கு வேண்டிய வேலைகளை ஆரம்பிக்கலாம்... முரண்பாடுள்ள எதிர்க்கட்சிகள் பொருமியே சாகட்டும்...


பேசும் தமிழன்
ஜூலை 01, 2025 08:25

நீங்கள் என்ன தான் முட்டு கொடுத்தாலும்.... கடைசி நேரத்தில் திமுக உங்களை கழற்றி விட்டு.... பாமக கட்சியை உள்ளே கொண்டு வருவது உறுதி.


sridhar
ஜூலை 01, 2025 20:57

ரூ 200 கூலிக்கு ரெண்டு லைன் போதும் , ரொம்ப ஓட்டாதீங்க .


Raj S
ஜூலை 02, 2025 00:20

இந்த திருட்டு திமுக வ யாரும் கண்டுக்காம ஒரு தேர்தல்ல விட்டா, முக்கால்வாசி இடங்கள்ல இவனுங்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை