உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உங்க படத்தை பெரிதாக போடாதீங்க: கட்சியினருக்கு பழனிசாமி கட்டுப்பாடு

உங்க படத்தை பெரிதாக போடாதீங்க: கட்சியினருக்கு பழனிசாமி கட்டுப்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தை, ஜூன் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்' என, மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலர்களுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று முன்தினமும், நேற்றும் நடந்த ஆலோசனை கூட்டங்களில், 82 மாவட்டங்களை சேர்ந்த செயலர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

உயரும் செல்வாக்கு

அதில், பழனிசாமி பேசியுள்ளதாவது:

பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தில் தொய்வு ஏற்படக் கூடாது. ஜூன் 15ம் தேதிக்குள் நிர்வாகிகள் நியமன பட்டியலை ஒப்படைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக திகழ்ந்தனர். அவர்களுக்கான ஓட்டு வங்கி இருந்தது. ஆனால், நாம் உழைத்தால் தான் ஓட்டு வங்கியை அதிகரிக்க முடியும். நான் உழைக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் தான் என்னோடு சேர்ந்து வேகமாக உழைக்க முன்வர வேண்டும்.தி.மு.க., ஆட்சியின் மீது உள்ள அதிருப்தியால், பொதுமக்களிடம் அ.தி.மு.க.,வின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்சி பேனர், போஸ்டர்களில், மாவட்டச் செயலர்கள் தங்கள் படங்களை பெரிதாக போட்டுக் கொள்ளக்கூடாது. பேனர்களில், மாவட்டச் செயலர்கள் நிற்கும் வகையிலான புகைப்படங்கள் அச்சிடப்படக் கூடாது; அதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகைப்படங்கள் தான் பெரியதாக இருக்க வேண்டும்.

நடவடிக்கை பாயும்

சில மாவட்டச் செயலர்கள், தாங்கள் போட்டியிட விரும்பும் சட்டசபை தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். தேர்தலை மனதில் வைத்து, குறிப்பிட்ட ஒரு தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தி, கட்சி பணிகளை கவனிக்காத மாவட்டச் செயலர்கள் நீக்கப்படுவர். மண்டல பொறுப்பாளர்களாக நியமிக்கப்படும் நிர்வாகிகளுக்கு, ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தால், மாவட்ட செயலர்கள் மீது நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

முருகன்
மே 31, 2025 23:07

இவர் யார் என்று மக்கள் நன்றாக அறிவார்கள் தோல்வி பரிசாக கிடைக்கும்


madhesh varan
மே 31, 2025 17:43

கூவத்தூரில் பலருக்கு மா வேலை பார்த்து வாங்கிய முதல்வர் பதவி, நீ என்னமோ யோக்கியன் மாதிரி பேசுற ?


Haja Kuthubdeen
மே 31, 2025 12:39

ஓவியா 26எலக்சனில் பார்ப்போம்..யார் ஓடி ஒளிய போறான்னு...கட்டாயம் நீங்க ஓடி ஒளியக்கூடாது..


Oviya Vijay
மே 31, 2025 09:03

இதுநாள் வரையில் மனதில் எம் ஜீ ஆர் மற்றும் ஜெயலலிதா நினைப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார்... ஆனால் தான் ஒரு டம்மி பீஸ் என்பதே தேர்தலுக்குப் பின் இவரே உணரப் போகிறார்.


Haja Kuthubdeen
மே 31, 2025 12:37

பின்புலம் அரசியல் வாரிசு பில்டப் திணிப்பு சினிமா பின்புலம் இல்லாமல் சாதாரண நிலையில் இருந்து ஒருவர் வந்துள்ளார்.பிறப்பால் வரவில்லை..அதான் உபிக்களுக்கு எரியுது...நான் எம் ஜி ஆர் அம்மா போல மாஸ் தலைவர் அல்ல என்பதை ஒப்புக் கொள்ள எவனுக்கு மனசு வரும் ஓவியா??உதயநிதி இன்பநிதி போல ராஜாவவீட்டு கன்னுகுட்டி அல்ல எடப்பாடி....அட்லீஸ்ட் விஜய் போலவாவது சொந்த காலில் நிக்க பாருங்க...


சேகர்
மே 31, 2025 22:02

விஜயே டம்மி தான். at least கமலுக்காவது பேசுறது புரியுதோ இல்லையோ paper பாக்காம peas தெரியுது. யாரோ எழுதி கொடுப்பதை அறிக்கை என கொடுப்பது. சினிமா ரீ ரிக்கார்டிங் நினைப்பில் மேடையில் பேசுவது தவிர விஜய்யிடம் ஒன்றுமில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை