உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஸ்டாலினை எதிர்த்து வளர்மதி; உதயநிதிக்கு எதிராக ஆதிராஜாராம்.. களமிறக்க பழனிசாமி திட்டம்

ஸ்டாலினை எதிர்த்து வளர்மதி; உதயநிதிக்கு எதிராக ஆதிராஜாராம்.. களமிறக்க பழனிசாமி திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொளத்துார் தொகுதியில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்டால், அவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் வளர்மதியையும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து மாவட்டச் செயலர் ஆதிராஜாராமையும் களமிறக்க, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி முடிவெடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதியும் போட்டியிட வேண்டும் என, தி.மு.க.,வினர் விரும்புகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6hvpb77n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி காரணமாக, முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதியில் ஒரு லட்சத்து, 3,812; துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், 89,241 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். இதனால், இருவரும் தொகுதி மாறி போட்டியிடுவரா அல்லது அதே தொகுதியில் போட்டியிடுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொளத்துார் தொகுதியில் ஸ்டாலின் மீண்டும் போட்டியிட்டால், அவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மகளிர் அணி செயலருமான வளர்மதியை போட்டியிட வைக்க பழனிசாமி முடிவெடுத்துள்ளார். ஆனால், ஆயிரம்விளக்கு மற்றும் மயிலாப்பூர் தொகுதிகளில் போட்டியிட வளர்மதி விருப்ப மனு கொடுத்துள்ளார். இதையடுத்து, கொளத்துார் தொகுதிக்கு விருப்ப மனு கொடுக்குமாறு அவரிடம் கட்சி மேலிடம் வலியுறுத்தியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் துணை முதல்வர் உதயநிதி, சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால், அவரை எதிர்த்து அ.தி.மு.க., தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்டச் செயலர் ஆதிராஜாராமை நிறுத்த பழனிசாமி முடிவெடுத்துள்ளார். ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட, ஆதிராஜாராம் விருப்ப மனு வழங்கியுள்ளார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கொளத்துார் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து ஆதிராஜாராம் போட்டியிட்டார். தற்போது, கொளத்துார் தொகுதிக்கு அவர் விருப்ப மனு கொடுக்கவில்லை. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பாலாஜி
ஜன 02, 2026 13:15

ஸ்டாலினை எதிர்த்து வளர்மதி தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பது உறுதி.


mindum vasantham
ஜன 02, 2026 12:11

ஒரே ஒரு சின்ன மாற்றம் செய்ய விரும்புகிறேன் உதயநிதியை எதிர்த்து வளர்மதியை இறக்கலாம் , பின்னி விடுவார்


Vasan
ஜன 02, 2026 11:52

ஸ்டாலினை எதிர்த்து எடப்பாடி நிற்கணும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜன 02, 2026 10:48

துறைமுகம் தொகுதியில் கருணாநிதி தோற்ற போது எம்ஜிஆர் 700 வாக்குகள் அதிகமாக வர ஓட்டு சீட்டுகள் மாற்றி போட்டு கருணாநிதியை வெற்றி பெற வைத்தவர்.


என்னத்த சொல்ல
ஜன 02, 2026 10:42

வளர்மதியம்மா முகராசிக்கே ஓட்டு விழ வாய்ப்பிருக்கிறது..


R.PERUMALRAJA
ஜன 02, 2026 10:10

இத்தனை நாட்கள் இவர்கள் ஒரு போஸ்டர் கூட சென்னையில் ஒட்டவில்லை ஆ தி மு க சார்பாக. தி மு க விடம் காசு வாங்கி ஆ தி மு க விற்கு எதிராக வேலை பார்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை


V RAMASWAMY
ஜன 02, 2026 09:49

வெறும் காழ்ப்பு உணர்ச்சியுடன் சொதப்பல் எதிர்ப்பு போதாது. மக்கள் மனதில் பதியும்படி அவர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உறைக்கும்படி இருக்கவேண்டும் தேர்தல் போர் பேச்சுக்கள்.


mindum vasantham
ஜன 02, 2026 09:29

எடப்பாடி நகர்த்தும் காய்கள் கச்சிதமாக உள்ளன இரண்டும் போராளிகள்


Sun
ஜன 02, 2026 05:20

அப்படியென்றால் வளர்மதி, ஆதி ராஜாராம் இருவருக்கும் மந்திரிசபையில் இடமில்லை என எடப்பாடி முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது.


Haja Kuthubdeen
ஜன 02, 2026 10:41

அப்படி அல்ல... உப்பு சப்பில்லாதவரை களத்தில் இறக்கினால் தோல்வியை ஒப்புக் கொண்டதாக போயிடும். இரண்டு தொகுதிகளிலும் 2 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதால் தொகுதிமாற ஆலோசனை நடக்குது. உதயநிதி திருவாரூரில் போட்டியிடப்போவதாக இங்கே பேச்சுக்கள் உலவுது..


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ