உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காங்கிரஸ், பா.ம.க.வை விமர்சிக்க கட்சியினருக்கு பழனிசாமி திடீர் தடை

காங்கிரஸ், பா.ம.க.வை விமர்சிக்க கட்சியினருக்கு பழனிசாமி திடீர் தடை

லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைப்பதற்கு வசதியாக, தி.மு.க., - பா.ஜ.,வை தவிர, மற்ற கட்சிகளை விமர்சிக்காமல் காத்திருக்கும்படி, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்றும், அ.தி.மு.க., தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்றும் பழனிசாமி அறிவித்துள்ளார். அதனால், தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்துப் பேசும்படி, மாவட்ட செயலர்கள், 'டிவி' விவாதங்களில் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைதள அணி நிர்வாகிகளுக்கு, அவர் உத்தரவிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=esbw4quj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., சேருமானால், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறி, அ.தி.மு.க., பக்கம் வர வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொகுதி பங்கீட்டில் அதிருப்தி உருவானால் அணி மாறும் நிலை வரலாம்.பா.ம.க., எடுக்க போகும் முடிவை பொறுத்து தான் அணி மாற்றத்திற்கு வழி கிடைக்கும். எனவே, அக்கட்சியின் முடிவு தெரியும் வரை, தி.மு.க., - பா.ஜ., தவிர, மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என, கட்சியினருக்கு பழனிசாமி தடை விதித்துள்ளார்.இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில் தி.மு.க., அணியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றாலும், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன் நடிகர் விஜய் கட்சி துவக்க திட்டமிட்டிருப்பதால், தமிழக அரசியலில் நிச்சயம் அணி மாற்றம் நடக்கும். எனவே, தற்போது தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளை, எதிரிகளாக கருத வேண்டாம் என்கிறார் பழனிசாமி. காரணம், 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன், தி.மு.க., கூட்டணியில் எப்படியும் பிளவு இருக்கும் என கணக்குப் போடுகிறார். அதற்கு முன்பாக, தேவையின்றி தி.மு.க., கூட்டணி கட்சிகளை விமர்சிப்பதால், எதிர்காலத்தில் அ.தி.மு.க.,வை நோக்கி அக்கட்சிகள் வருவதற்கு நாமே கதவடைத்தது போலாகிவிடும்.அதனால், இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதே பழனிசாமியின் நிலைப்பாடாக இருக்கிறது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி மீண்டும் மலர வேண்டும் என, த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, ஜ.ஜே.கே., உள்ளிட்டவை விரும்புகின்றன. அதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், இந்த கட்சிகளும் விரைவில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பும் பழனி சாமியிடம் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை