உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூட்டணிக்கு பழனிசாமி அழைப்பு தி.மு.க., கூட்டணி கட்சிகள் பதிலடி

கூட்டணிக்கு பழனிசாமி அழைப்பு தி.மு.க., கூட்டணி கட்சிகள் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'எங்கள் கூட்டணியில், பிரமாண்டமான கட்சி இணையப் போகிறது' என கூறியதுடன், 'கூட்டணிக்கு வரும் கட்சிகளை, ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்த நிலையில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளன.பழனிசாமியின் அழைப்பு குறித்து, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், ''இண்டி கூட்டணியை எவராலும் தகர்க்க முடியாது,'' என்றார்.வி.சி., தலைவர் திருமாவளவன் கூறுகையில், ''தி.மு.க., கூட்டணியில் இருந்து, எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என பழனிசாமி அழைப்பு விடுப்பது, அவராக சொல்கிற ஒரு கருத்தாக தெரியவில்லை. யாரோ சொல்வதை, அவர் திருப்பி சொல்கிறார் என்றுதான் தோன்றுகிறது,'' என்றார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன் கூறுகையில், ''பழனிசாமி கூறுவது நல்ல நகைச்சுவை. பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு அழைப்பது, ரத்தினம் கம்பளம் அல்ல; ரத்தம் படிந்த கம்பளம். தி.மு.க., கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த, பழனிசாமி முயற்சி செய்கிறார்,'' என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் கூறுகையில், ''பழனிசாமி காலையில் ஒரு பேச்சு, அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு; லோக்சபா தேர்தலில் ஒரு பேச்சு. அதற்கு நேர்மாறாக இப்போது பா.ஜ.,வோடு கூட்டணி. கடந்த வாரம் கம்யூனிஸ்டுகளையே காணோம் என்றார்; இந்த வாரம் அழைக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கு அவர் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல; வஞ்சக வலை என்பதை அறிந்தே வைத்துள்ளோம். ஆர்.எஸ்.எஸ்., எனும் புதை குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல், அ.தி.மு.க., சிக்கிக் கொண்டிருக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

M Ramachandran
ஜூலை 19, 2025 01:15

காளைமாட்டில் பால்கறக்க கம்மிகளும் திருட்டு திருமாவும் முயற்சி. மூட்டைய்ய கிடைத்தால் எதையும் அடகு வைப்பார்கள். எது செய்ய சொன்னாலும் ரெடி யேனென்றால் இது தான் அவர்கள் கடைசியாக கிடைய்யக்கும் பிச்சை. ஒருத்தர் தன்மான திலகம் எனக்கு பிளாஸ்டிக் சேர் முக்கியமில்லை. பிச்சைய்யென முக்கியம் என்று அழைப்பிற்கு வழி மேல் விழி வைத்து பிச்சையய் பாத்திரம் ஏந்தி வந்தென் என்று பாடிக்கொண்டு காத்திருக்கிறார். .


Anand
ஜூலை 18, 2025 19:08

இந்த மொகரக்கட்டைகளை பார்த்தாலே...


SIVA
ஜூலை 18, 2025 18:13

சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா என்ற நிலை வந்ததால் அன்று தீமூகவுடன் கூட்டணி வைத்தோம் இன்றும் சாப்பாடு மட்டுமே முக்கியம் என்பதால் எங்கள் நிலையில் மாற்றமில்லை .....


theruvasagan
ஜூலை 18, 2025 16:06

அங்க போன மரியாதையாக நடந்துவாங்க. இங்க மரியாதை பூஜியம் ஆனால் சோத்துக்கு கவலையில்லை. தன்மானமா சோறா. ஐயோ பாவம். இருதலைக்கொள்ளி எறும்பு போல் தவிக்கறாங்க


Mecca Shivan
ஜூலை 18, 2025 15:40

முத்தரசன் ஒரு திராவிட கம்யூனிஸ்ட்


ஆரூர் ரங்
ஜூலை 18, 2025 13:47

உங்களையெல்லாம் திமுக துரத்தியடிக்கும் முன் நீங்களாகவே வெளியேறினா கவுரவமாயிருக்கும். அப்புறம் எதிரணியில் சேர்வதை பற்றி யோசிக்கலாம்.


Anand
ஜூலை 18, 2025 11:14

பழனிசாமி இவனுங்களை கூட்டணிக்கு சேர்த்துக்கொள்வது வேதாளத்தை முதுகில் சுமப்பது போல.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 18, 2025 10:59

பல்லு படாம சேவை செய்யிறவங்களை எங்க கூட்டணிக்கு வா, மரியாதையா நடத்துறோம் ன்னு ஈ பி எஸ் கூப்பிட்டது ஒரு தப்பாய்யா >>>>


Yes your honor
ஜூலை 18, 2025 10:56

அதெல்லாம் சரி, பேட்டியெல்லாம் குடுத்தாச்சு. பேட்டி குடுப்பதற்கு முன்பும், பேட்டி கொடுத்தற்கு பின்பும் பழனிச்சாமியிடம் பேசிய டீல்கள் என்ன?


அரவழகன்
ஜூலை 18, 2025 10:54

ஐய்யோ பாவம்.. இப்போ அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க.இல்லை என்றால் அ.தி.மு.க.பாய விடியல் கூட்டணி கட்சிகள் தயாராக உள்ளன..புரிந்து பேசுங்க


புதிய வீடியோ