உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நடிப்பைதான் மக்கள் பார்க்கிறார்கள்; அரசியலுக்கு வந்தால் எடுபடாது

நடிப்பைதான் மக்கள் பார்க்கிறார்கள்; அரசியலுக்கு வந்தால் எடுபடாது

மதுரை:மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு நடக்கவுள்ள நிலையில் அதற்கான அலுவலகத்தை வண்டியூரில் மதுரை ஆதினம் திறந்து வைத்தார்.

பின் அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் இருக்கும் ஆட்சி குறித்து, நான் குறை கூற முடியாது. நெல்லையில் பள்ளி மாணவனை சக மாணவன் வெட்டிய சம்பவத்தில் அரசை நாம் குறை சொல்ல முடியாது. முதலில் பெற்றோர் தங்களது குழந்தைகளை கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும். அதிகமாக கண்டித்தால் மாணவர்கள் தற்கொலை செய்து விடுகிறார்கள். இதற்கு காரணம் சினிமா தான். சினிமாவில் அனைத்து வன்முறைகளையும் காட்டுவதை, மாணவர்கள் உள்வாங்கிக் கொள்கின்றனர். சினிமாவை அரசு வரைமுறை செய்ய வேண்டும். சினிமா மோகத்தில் இன்றைய இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களை திருத்த முடியாது. சிவாஜி கணேசன் எப்பேர்ப்பட்ட நடிகர். அவர் அரசியலில் பெரிதாக வளர முடியவில்லை. நடிப்பைதான் மக்கள் பார்க்கிறார்களே தவிர, அரசியலுக்கு வந்தால் எடுபடாது. சினிமாவும் அரசியலும் எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் எடுபட்டது. அமைச்சர் பொன்முடியின் பேச்சு அரசியல் சட்டத்தை மீறுவது போன்று உள்ளது. அவர் பதவியில் இருக்கக்கூடாது. எந்த சமயத்தையும் பிறர் மனம் புண்படும் வகையில் பேசக்கூடாது என்று அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரை கூற வேண்டும். நான் 1960 முதல் ஒன்பது வயதிலிருந்து ஹிந்து அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். 1973ல் மிசா சட்டத்தை எதிர்த்து போஸ்டர் ஒட்டி இருக்கிறேன். சிறு வயதிலேயே மிசா சட்டத்தை பார்த்து விட்டு தான், இங்கே வந்து அமர்ந்துள்ளேன். மக்களை நெறிப்படுத்தும் பணிகளை சைவ சமயம் செய்கிறது. திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கும் கடமை, உரிமை நமக்கு உள்ளது. கோயில் நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள் குத்தகை பணம் செலுத்துவதில்லை. தமிழக அரசு குத்தகை பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநியில், தமிழக அரசு நடத்திய முருகன் மாநாட்டில் அரசியல்வாதிகள் பங்கேற்றதால் அது அரசியல் மாநாடாக நடந்தது. மதுரையில் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாடு ஆன்மிகவாதிகள் மட்டுமே பங்கேற்பதால், ஆன்மிக மாநாடாக நடைபெறும். பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஏப் 17, 2025 22:23

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் எல்லோரும் MGR ஆகிவிடமுடியாது.


vijai hindu
ஏப் 17, 2025 09:47

எவன் ஒருவன் இந்து இந்து மதத்துக்கு எதிராக செயல்படுகிறானோ இந்துக்களில் முதல் எதிரி இந்துக்கள் ஓட்டு இல்லாமல் திமுக ஜெயிக்க முடியுமா அதே மாதிரி ஜோசப் விஜய் யோசித்துப் பேச வேண்டும் சினிமாவில் நடிக்கும் போது மட்டும் விபூதி குங்குமம் வைத்து நடிக்கிறாய் ஏன் உங்கள் மதத்தோட சார்ந்த படங்களை நடித்துவிட்டு போ. காசு கோசுரம் இந்து வேஷம் போடாதே சினிமாவில்


Oviya Vijay
ஏப் 17, 2025 07:34

இவருக்கென்று என்ன வரலாறு இருக்கிறது. ஒரு புண்ணாக்கும் இல்லை... வேலை வெட்டி என்று எதற்கும் செல்லாமல் கடவுளின் காப்பாளன் என்பது போல் தன்னைத் தானே உருவகப்படுத்திக் கொண்டு அதனால் சுற்றி ஜால்ரா தட்டும் மற்ற சங்கிகள் மூலமாக கிடைக்கும் பணத்தில் நோகாமல் நொங்கு தின்று சொகுசு வாழ்க்கை வாழும் ஒரு ஜீவன்... அவ்வளவே... அந்த காலத்தில் வாழ்ந்த ஆன்மீக பெரியவர்கள் என்றால் அவர்களது கனிவான பேச்சுக்களும் அவர்களது அருமையான உபதேசங்களும் மனம் குளிர கேட்டு உளம் மகிழ்ந்தோம். அதற்கு மிகப்பெரிய உதாரணம் கிருபானந்த வாரியார். அவரையும் இவரையும் ஒப்பிடக் கூட முடியுமா??? இவரைப் போன்ற ஆதீனங்கள் இப்போது அரசியல் பேசுபவர்களாக மாறிவிட்டனர். ஆன்மீகப் பெரியவர்கள் என்ற போர்வையில் வலம் வரும் இவரைப் போன்றோர்களை மக்கள் புறந்தள்ள வேண்டும்...


ஆரூர் ரங்
ஏப் 17, 2025 09:10

அல்லேலூயா திராவிஷ அரசு ஹிந்து மத விவகாரங்களில் அத்துமீறி தலையிடும் போது மதத்தலைவர்கள் எதிர்வினையாற்றுவது இயற்கை. ஹிந்துக்களை இனியும் இழிவுபடுத்தி ஆளும் திமுக ஒழிக்கப்படும்.


pmsamy
ஏப் 17, 2025 06:37

இதெல்லாம் உனக்கு தேவையா உன் வேலையை மட்டும் பாரு ஒழுங்கா


Padmasridharan
ஏப் 17, 2025 05:45

"சினிமாவை அரசு வரைமுறை செய்ய வேண்டும்.. " இது ஒழுங்கா நடந்தா.. "புகை பிடித்தல் & மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு" என்று வாக்கியங்களை காட்டிக்கொண்டே குடித்தவன் பாட்டு ஏன். பாடி ஆடனும் சாமி. முக்கால்வாசி மனி நேர படத்தையும் கெட்டதை காண்பிச்சி, கடைசியில் சில நிமிஷம் நல்லதா சொல்றாங்க. சமீபத்துல வந்த விக்ரமன் படம் பாருங்க. தேவை இல்லாத கதை. போலீஸ்_திருடன் விளையாட்டை பார்க்க வைத்து மக்களை முட்டாள்கள் ஆக்கி வைத்துள்ளனர். MGR மட்டுமல்ல இன்னும் நிறைய நடிகர்_நடிகைகளை சேர்த்து வெச்சி ஆட்சி நடக்கிறதே, கவனிக்கவும் சாமி. அங்கே பவன் இங்கே விஜய் அரசியல் நண்பர்கள் ஆக நினைக்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டும் சாமி.


முக்கிய வீடியோ