உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை சேர்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்

யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை சேர்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் சேர்க்கப்பட்டதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் விதமாக, அது தொடர்பான ஆவணங்களை அடையாளம் கண்டு, அதனை பாதுகாப்பதற்காக யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேடு உருவாக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0g97hqcz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்தாண்டு ராம்சரித்மனாஸ், பஞ்சதந்திரம், சஹ்ருதயலோக-லோகனா ஆகிய 3 இந்திய இலக்கிய படைப்புகள், யுனெஸ்கோவின் உலக ஆசிய-பசிபிக் பிராந்தியப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டன. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில், ஹிந்துக்களின் புனித நூலக கருதப்படும் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், சர்வதேச அங்கீகாரம் இந்திய படைப்புகளின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.இது குறித்த தகவலை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவிலான இந்த கவுரவம் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலை படைப்புகளையும் போற்றும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், 'உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கு பெருமையான தருணம் இது. யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டிருப்பது, நமது உயரிய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும். பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை பல நூற்றாண்டுகளாக நமது நாகரீகத்தையும், உணர்வுகளையும் வளர்த்துள்ளன,' என பெருமிதம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

கிஜன்
ஏப் 18, 2025 20:38

தகுதியானவர்களுக்கு விருது வழங்க யுனெஸ்கோ தவறுவதே இல்லை .... இதற்கு முன் ...தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்று தத்துவ மேதை தந்தை பெரியாரை கவுரவித்தது .... என ஏடுகள் கூறுகின்றன ...


Rasheel
ஏப் 18, 2025 18:33

கீதை, தன்னம்பிகையையும், உயர்ந்த வாழ்கை முறையையும் போதிக்கிறது. சரியான உணவு முறை, தர்மத்தை காப்பாற்ற வாள் எடுப்பது தவறில்லை. கல்வியின் அவசியம், கேள்வி கேட்பதின் அவசியம், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நல்ல வாழ்கை முறை, குடும்பத்தார்கள் கடைபிடிக்க வேண்டிய நல்ல வாழ்கை முறை, சமுதாயம் நல்ல சமுதாயக இருக்க வேண்டும் அனைத்தையும் கீதை போதிக்கிறது. ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய உண்மையான பொக்கிஷம்.


Saai Sundharamurthy AVK
ஏப் 18, 2025 17:45

யுனெஸ்கோவே விருது வழங்கி விட்டதாக கூறி பொய் தம்பட்டம் அடித்த கூட்டத்திற்கு ஒரு பே பே !!!


Thetamilan
ஏப் 18, 2025 14:35

இந்து மதவாத .........


vivek
ஏப் 18, 2025 15:57

பைசாக்கு தேறாத கொத்தடிமை தெதமிலோ


Kasimani Baskaran
ஏப் 18, 2025 13:31

இதன் மூலம் இன்னும் கூடுதலாக உலகில் பலருக்கு முக்தி கிடைக்க பகவான் கிருஷ்ணனை பிரார்த்திக்கிறேன்..


Palanisamy T
ஏப் 18, 2025 13:20

பாரதப் போர் அன்று தமிழகத்தில் நடந்தது உண்மை. கீதையில் கீதை உபதேசம் என்ற சம்பவம் வெறும் கற்பனை. கற்பனையாக வடிவமைக்கப் பட்ட சம்பவம். நடைமுறைக்கு ஏற்றதாகயில்லை. இருந்தாலும் கோடான கோடி இந்துக்களின் புனித நூலாக உள்ளத்திலும் உணர்விலும் இருப்பதை மதிக்கின்றேன். யானும் ஒரு ஹிந்துதான். அதுவும் சைவ சமயத்தை நேசிக்கும் ஹிந்து.


உண்மை கசக்கும்
ஏப் 18, 2025 12:50

தெய்வசிகாமணிக்கு அதாங்க பொன் க்கு விருது இல்லையா


sankaranarayanan
ஏப் 18, 2025 12:49

பெரியார் சரித்திரம் இடம் பெறுமா என்றுதான் திராவிட மாடல் அரசு ஏங்கிக்கொண்டிருக்கிறது


Ramesh Sargam
ஏப் 18, 2025 12:43

தமிழக அரசு டாஸ்மாக் சரக்குக்கு அங்கீகாரம் கேட்டு போராட்டம் நடத்தும்.


ஆரூர் ரங்
ஏப் 18, 2025 11:57

தென்கிழக்காசிய சாக்ரட்டீஸ் பட்டம் கொடுத்த விவரமும் இருக்கணுமே. பெரியார் மட்டும் இல்லாட்டா உலகத்துக்கு யுனஸ்கோ பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை