உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஐ.எஸ்.,க்கு ஆள் சேர்த்த பேராசிரியர், மாணவர்கள்: விசாரணையில் அம்பலம்

ஐ.எஸ்.,க்கு ஆள் சேர்த்த பேராசிரியர், மாணவர்கள்: விசாரணையில் அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி உள்ள, அரபிக்கல்லுாரி பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க ரகசிய வகுப்புகள் நடத்தியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ல் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4iygvx65&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சமீபத்தில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த சையது அப்துல் ரகுமான் உமரி, 52, கோவை பொன்விழா நகரை சேர்ந்த முகமது உசேன் பைசி, 38, குனியமுத்துாரை சேர்ந்த இர்ஷாத், 22 மற்றும் ஜமீல் பாஷா உமரி, 30, ஆகியோரை கைது செய்தனர். இவர்களில், சையது அப்துல் ரகுமான் உமரி, கோவை அரபிக் கல்லுாரியில் பேராசிரியராகவும், மற்றவர்கள் இவரிடம் மாணவர்களாகவும் இருந்துள்ளனர்.

இதுகுறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள், ஏற்கனவே உடற்பயிற்சி கூடங்கள் நடத்துவது போல ஆயுத பயிற்சி அளித்து வந்தது கண்டறியப்பட்டது. தற்போது, அரபிக் கல்லுாரி பேராசியர் மற்றும் முன்னாள் மாணவர்கள், மாநிலம் முழுதும் ரகசிய கூட்டங்கள் நடத்தி, ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை சேர்த்துள்ளனர். நிதி திரட்டுதல், வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பாகவும் வகுப்புகளை எடுத்துள்ளனர்.ஒரு ஊருக்கு ஐவர்; அதில் ஒருவரை வழிநடத்தும் லீடராக நியமித்துள்ளனர். தொடர்புக்கு சங்கேத மொழியை பயன்படுத்தி வந்துள்ளனர். ஐ.எஸ்., அமைப்பு ரகசிய கூட்டங்கள், அரபிக் கல்லுாரியில்தான் நடந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து விரிவான விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

V GOPALAN
பிப் 17, 2024 20:53

DMK and ADMK for getting vote, they may even collide with terror group.


raja
பிப் 17, 2024 20:16

ச்சே ச்சே இவனுவோ இந்த படைக்கு பயிற்சியும் ஆளும் சேர்தானுவி என்று திருட்டு திராவிடம் சொல்லும்...


NicoleThomson
பிப் 17, 2024 20:04

அன்று கோவையில் தொடர் குண்டு வைத்து வெடி விழா கொண்டாடிய தீவிரவாதிக்கு புலிகேசி அரசு வந்தவுடன் விடுதலை கொடுத்தார்கள் , இப்போ உமருக்கு இன்னமும் அதிகமா கொடுப்பாங்க இல்லையா உடன்பிறப்புகள்?


MARUTHU PANDIAR
பிப் 17, 2024 19:51

இந்த பே............. ராசியாருக்கெல்லாம் சம்பளம் அரசா கொடுக்கிறது? அப்படியானால் உடனே நிறுத்த திராணியிருக்கானு பேசிக்கறாங்க.


veeramani
பிப் 17, 2024 18:44

இவர்களது ஆதார், பாண், பேங்க் கணக்குகள் உடனடியாக நீக்கவேண்டும். இந்தியாவிலிருந்து நாடுகடத்தவேண்டும்.


krishna
பிப் 17, 2024 16:57

EN FRIEND DOCTOR ORUVARUKKU 15 CHILDREN.AACHARYAM AAGA KETTAL BADHIL ILLAI.


Yaro Oruvan
பிப் 17, 2024 16:48

அய்யகோ.. என்ன கொடுமை இது.. சிலிண்டர் வெடிப்பு.. அதுவும் நோம்பு கஞ்சி காச்ச்சும்போது எதிர்பாக்காம நடந்த விபத்து .. இதுக்கு போயி NIA அது இதுன்னு விசாரணை..


N.Purushothaman
பிப் 17, 2024 15:32

இப்போதெல்லாம் படித்தவர்கள் தான் தேச விரோத துரோக செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர் ....மதம் என்கிற போர்வையில் இவர்களை போன்றோர்கள் தேசிய நீரோட்டத்தில் இருந்து இவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதன் உள்நோக்கம் இதற்காகத்த்தான் என்பது புலப்படுகிறது ....


Suppan
பிப் 17, 2024 14:39

இந்த அழகில் விடியல் அரசு பாஷா உட்பட பல பயங்கரவாதிகளை சிறையிலிருந்து விடுவித்துள்ளது. சிறுபான்மையினர் மனம் நோகக்கூடாதாம். அதற்கு பல் மக்கள் செத்தால் பரவாயில்லை. சிறுபான்மை ஓட்டுக்கள்தான் முக்கியம். நாடு எக்கேடு கெட்டுப் போனால் என்ன?


shakti
பிப் 17, 2024 14:22

அவனுங்க தடையில்லாமல் தமிழனுக்கு புரியாமல் பேசிக்கொள்ளத்தான் ஹிந்தி தடை பண்ணி வச்சிருக்கானுங்க... புரிஞ்சிட்டா தெரிஞ்சிடும்ல ???


மேலும் செய்திகள்









புதிய வீடியோ