உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஏப்ரலில் சொத்து வரி 6 சதவீதம் உயர்கிறது!

ஏப்ரலில் சொத்து வரி 6 சதவீதம் உயர்கிறது!

தமிழகத்தில் வரும் 2025 - 26ம் நிதியாண்டில், சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த, தமிழக அரசிடம் நகராட்சி நிர்வாகத்துறை அனுமதி கேட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதிகளில், 1998லும்; சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதிகள் மற்றும் பிற மாநகராட்சிகளில், 2008லும் சொத்து வரி உயர்த்தப்பட்டது.

அறிவுறுத்தல்

மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, 2022 - 23ம் நிதியாண்டில், உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது, 600 சதுரடிக்கு குறைவான குடியிருப்புகளுக்கு, 25 சதவீதமும்; 601 - 1,200 சதுரடி வரை என்றால், 50 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. மேலும், 1,201 - 1,800 சதுரடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 75 சதவீதமும்; 1,800 சதுரடிக்கு மேலாக இருந்தால், 100 சதவீதமும் சொத்து வரி உயர்ந்தது. அதேபோல, வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 100 சதவீதமும்; தொழிற்சாலை, கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 75 சதவீதமும் உயர்த்தப்பட்டது.சென்னை மாநகராட்சியில் பிரதான பகுதிகளில், வணிக பயன்பாட்டுக்கு, 150 சதவீதமும்; தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு, 100 சதவீதமும் உயர்த்தப்பட்டது. சொத்து வரி உயர்வுக்காக வெளியிடப்பட்ட அரசாணையில், 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி, ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்படும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

உயர்த்தவில்லை

சென்னை, திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்கள் கடந்த 2023ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். அதனால், 2024 - 25ம் நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், 2025 - 26ம் நிதியாண்டில் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், 2025ல் உள்ளாட்சி தேர்தல்; 2026ல் சட்டசபை தேர்தல் உள்ளிட்டவை வர உள்ளதால், சொத்து வரி உயர்வால், ஆளுங்கட்சிக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

ரூ.110 கோடி கூடுதல் வருவாய்

நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், ஒவ்வொரு நிதியாண்டிலும் சொத்து வரி உயர்த்தப்படும் என, அரசாணை வெளியிடப்பட்டது. கடந்தாண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், சொத்து வரியை உயர்த்த அரசு அனுமதிக்கவில்லை. நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால், வரும் நிதியாண்டில் சொத்து வரியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்படும். சொத்து வரி உயர்வு அரசின் கொள்கை முடிவை சார்ந்தது என்பதால், அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தால் சென்னை மாநகராட்சிக்கு, ஆண்டுக்கு 110 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வருவாய் கிடைக்கும். இதேபோல, மற்ற உள்ளாட்சிகளிலும், உட்கட்டமைப்பு வசதிக்கான கூடுதல் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
செப் 17, 2024 15:24

பேனா சிலை வைத்து மாலை போட்டு அவர் காட்டிய வழியில் பேக்கேஜ் போட வேண்டாமா? மகன் மருமகன் பில் கேட்ஸ் ஆக வேண்டாமா?


K B Janarthanan
செப் 17, 2024 13:26

எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், தனி நபர் எதிர்ப்பு தெரிவிப்பதால், எந்த பயனும் இல்லை.


karthik
செப் 17, 2024 09:21

வளர்ச்சிக்கேற்ற படி உயர்த்த சொன்னால்... இவர்கள் இஷ்டத்திற்கு ஊசி குடுத்து வருஷம் 12 ஆயிரம் கோடியை வீணடித்து.. எந்த வளர்ச்சியும் இல்லாமல் சொத்து வரியை உயர்த்தி நடுத்தர மக்களை வாட்டி வதைக்க்கிறார்கள்...கேடுகெட்ட நிர்வாகம் அரசியல்..


Nandakumar Naidu.
செப் 17, 2024 08:16

ஏத்துங்கடா ஏத்துங்கடா, உங்களுக்கு வேற என்ன வேலை?


அருமயான விடியல்
செப் 17, 2024 08:07

நாளை நமதே 234 லும் நமதே


chennai sivakumar
செப் 17, 2024 17:56

200 ரூபாய்க்கு மாற்றாக 500 கொடுத்தால் 234 நமது என்பது நிச்சயம்


முக்கிய வீடியோ