வாழ்விடங்களை பாதுகாத்தால் வரையாடுகளை பாதுகாக்கலாம்
கூடலுார்: நீலகிரி மாவட்டம், முதுமலை முக்கூர்த்தி தேசிய பூங்கா, ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில், நம் மாநில விலங்கான வரையாடுகள் அதிகளவில் உள்ளன. முக்கூர்த்தியில், 2018ல் நடந்த கணக்கெடுப்பு படி, 568 வரையாடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. புல்வெளி பகுதிகளை வாழ்விடமாக கொண்ட இவை, தற்போது அழியும் பட்டியலில் உள்ளன.புல்வெளிகள் பகுதிகள் ஆக்கிரமிப்பு; வெளிநாட்டு களைச் செடிகள் அதிகரிப்பு; வனத்தீ, போன்ற காரணங்களால் இவற்றின் வாழ்விடம் சுருங்கி விட்டது. அழிவின் விளிம்பில் உள்ள இவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ரூ. 25.14 கோடி
வரையாடுகளை பாதுகாக்க, 2022ல் மாநில அரசு, 25.14 கோடி ரூபாய் ஒதுக்கியது. திட்டத்தின் கீழ், வரையாடுகள் குறித்து ஆய்வு செய்தல், நோய் கண்டறிதல், வரையாடு வாழ்விடமான புல்வெளிகளை மீட்டெடுத்தல், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர்.