உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காங்கிரசை மூழ்கடிக்கும் ராகுல்!

காங்கிரசை மூழ்கடிக்கும் ராகுல்!

காங்கிரசின் தேசிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தாலும், அனைத்து முக்கிய முடிவுகளையும் ராகுல் தான் எடுக்கிறார். இதன் விளைவு, 'கட்சியில் குழப்பம்' என்கின்றனர் சில சீனியர் தலைவர்கள்.'ஹிமாச்சல பிரதேசத்தில் காங்., ஆட்சி நடந்தாலும், ராஜ்யசபா தேர்தலில் தோற்றுப் போனது. இதற்கு காரணம், ராகுல் தான்' என, ஹிமாச்சல காங்., பிரமுகர்கள் கூறுகின்றனர்.இங்கு, ராஜ்ய சபா சீட்டை உள்ளூர் தலைவருக்கு தராமல், வெளியூர்காரரும், பிரபல வக்கீலுமான அபிஷேக் மனு சிங்விற்கு கொடுத்தார்; விளைவு காங்., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர் பா.ஜ.,விற்கு ஓட்டளித்தனர்.அதே போல, 'ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் கட்சி தோற்றதற்கும் ராகுலின் முடிவு தான் காரணம்' என, ராஜஸ்தான் காங்., தொண்டர்கள் குமுறுகின்றனர்.'சச்சின் பைலட் தான் முதல்வர்' என, கடந்த சட்டசபை தேர்தலில் சச்சினுக்கு சத்தியம் செய்யாத குறையாக சொன்னார் ராகுல்; ஆனால், கெலாட் முதல்வரானார். இதனால், பதவிக் காலம் முடியும் வரை கோஷ்டி அடிதடிகள் அரங்கேறின.இந்த முறையாவது சச்சின் பைலட் முதல்வர் என, சொல்லியிருக்கலாம்; ஆனால், ராகுல் அமைதி காத்தார். இப்படி ராகுல் எடுத்த பல முடிவுகள், கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதித்துள்ளன' என்கின்றனர்.'காங்கிரஸ் நிச்சயம் வீறு கொண்டு எழும்; ஆனால், அதற்கு ராகுல் சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும்' என்பதே தொண்டர்களின் ஆதங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

M Ramachandran
மார் 17, 2024 21:15

இன்னும் சிறு பிள்ளையாகாவே இருக்கிறார்


venugopal s
மார் 17, 2024 19:44

இப்படியே தேர்தல் முடிவுகள் வரும் வரை புலம்பிக் கொண்டே இருங்கள், மக்கள் பாஜகவுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கின்றனர்!


Godfather_Senior
மார் 17, 2024 17:43

பாஜக அவருக்கு நிறையவே கடமை பட்டிருக்கிறது ராகா பாஜகவின் உந்துவிசை , பாஜக வளர்வதும் மட்டுமின்றி அதன் கொள்கையான காங்கிரஸ் இல்லா உன்னத பாரதம் காணவும் கடுமையாக உழைக்கிறார்


duruvasar
மார் 17, 2024 16:06

ஆள் கிடைக்கவில்லை என்பதால் பரம்பரையாக திருடனாக இருப்பவனை ராஜா வேஷம் கட்ட சொன்னால் அவன் முடியே காட்டி கொடுத்துவிடும் என்பார்கள். குழந்தைகளுக்கான கதையில் படித்தது.


Srinivasan Ramabhadran
மார் 17, 2024 14:12

காங்கிரஸ் தலைவர் திரு மல்லிகார்ஜுன் கார்கே, ராஜ்ய சபா M P., அவர் மகன் கர்நாடகா M L A. இப்போது பாராளுமன்ற தேர்தலில் அவரது மருமகன் M P பதவிக்கு போட்டியிட போகிறாராம். என்ன தான் கட்சிக்கு உழைத்தவர் என்று கூறிக் கொண்டாலும், காங்கிரஸ் கட்சியில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களே பதவிகளை ஆக்கிரமித்தால், மற்ற தொண்டர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும், கட்சி எப்போது வளரும்.


ஆரூர் ரங்
மார் 17, 2024 12:43

அப்படியே ராகுல் திமுக வையும் கொஞ்சம் கவனிப்பது நல்லது. ????கைராசி சூப்பர்.


jaya
மார் 17, 2024 14:23

போன முறை இங்கிருப்பவர் ராகுல் தான் பிரதமர் என்றார், ஊத்திக்கொண்டது . ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை .


ஆரூர் ரங்
மார் 17, 2024 12:41

காங்கிரசை ஒழித்து போகிற வழிக்கு புண்ணியம் தேடுகிறார் ????பப்பு.


Meevin
மார் 17, 2024 12:10

ராகுல் இந்தியாவிற்கு கிடைத்த வரம். அவர் இப்படியே நெடுங்காலம் வாழ வேண்டும். இந்தியா விரைவில் முன்னேறி வல்லரசாகி விடும்.


பேசும் தமிழன்
மார் 17, 2024 13:54

வஞ்சக புகழ்ச்சியில்... சும்மா வச்சி செய்கிறீர்கள்.... ஆனால் பப்பு ஏதோ நம்மை பாராட்டுகிறார்கள் என்று நினைத்தாலும் நினைப்பார்... ஏனென்றால் ... LKG படிக்கும் பிள்ளை அளவுக்கு தான் அறிவு இருக்கிறது !!!


சி.முருகன்.
மார் 17, 2024 15:46

எங்கோ உட்கார்ந்தது கதைதான்.


நரேந்திர பாரதி
மார் 17, 2024 11:57

"'காங்கிரஸ் நிச்சயம் வீறு கொண்டு எழும் ஆனால், அதற்கு ராகுல் சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும்"... சரியான கணிப்பு...வீறு கொண்டு எழுமா, விழுமா என்பது ராகுலின் கையில்தான் உள்ளது


Natarajan Ramanathan
மார் 17, 2024 11:29

ராகுல் ஒரு .....


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை