உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அப்ரோஸ் அரெஸ்ட் வீடியோ ராகுல் கடும் அப்செட்

அப்ரோஸ் அரெஸ்ட் வீடியோ ராகுல் கடும் அப்செட்

காங்கிரஸ் ஆர்.டி.ஐ., பிரிவு நிர்வாகி அப்ரோஸ் கைது செய்யப்பட்ட வீடியோவை பார்த்த, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் 'அப்செட்' ஆன தகவல் வெளியாகி உள்ளது. தமிழக காங்., ஆர்.டி.ஐ., பிரிவு மாநிலச் செயலர் அப்ரோஸ் கைது செய்யப்பட்டதை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி, நேற்று முன்தினம் கடுமையாக கண்டித்தார். அப்ரோஸ் தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், டில்லி மேலிடத் தலைவர்களிடம், தொலைபேசியில் புகார் தெரிவித்தனர். அப்ரோசை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தது தொடர்பான ஆறு வீடியோக்களை, நேற்று முன்தினம் ராகுலுக்கு அனுப்பி வைத்தனர். அந்த வீடியோவை பார்த்த ராகுல், 'அப்செட்' ஆகியுள்ளார். அவர், தி.மு.க., மூத்த எம்.பி.,யை தொடர்பு கொண்டு, 'அப்ரோஸ் விவகாரத்தை, முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்' என, அறிவுறுத்தி உள்ளார். தமிழக காங்., துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: அப்ரோஸ் கைது தொடர்பான வீடியோக்கள் ராகுலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்ரோஸ் விவகாரம் குறித்து பேச, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் தலைவர்கள், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அளவிற்கு, அப்ரோஸ் எதுவும் செய்யவில்லை. சாலை வசதிக்காக, மாநராட்சி உதவி பொறியாளரை சந்தித்து மனு கொடுத்தார். போலீஸ் உயர் அதிகாரிக்கு கருப்பு கொடி காட்டியுள்ளார். குண்டர் சட்டத்தில் அடைக்கும் அளவுக்கு, அது பெரிய தவறா? கூட்டணியில் இருந்தாலும், காங்கிரசாரை ஒடுக்கிப் பார்க்க நினைத்தே, தி.மு.க., இப்படிப்பட்ட காரியங்களை செய்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

கத்தரிக்காய் வியாபாரி
ஆக 06, 2025 19:15

தமிழக காங்கிரஸ்–ல இருந்த 341 பேருல இப்ப ஒருத்தர் குறைவு.


JaiRam
ஆக 06, 2025 17:16

ராகுலுக்கு வீடியோ அனுப்புவதை விட பிரச்சனையை நயன்தாராவிடம் கொண்டு சென்றால் ஒரு போன் போதும் ரிலீஸ்


lana
ஆக 06, 2025 13:10

தமிழக காங்கிரஸ் தலைவர் பெருந் தொகை வாங்கி திருட்டு திராவிட கழக த்தில் உறுப்பினர் அல்லாத உ.பி ஆகி விட்டது


SRIPADAM
ஆக 06, 2025 11:15

தமிழக காங்கிரஸ் தலைவர் இதை பற்றி வாய் திறக்காதது ஏன்?


R.MURALIKRISHNAN
ஆக 06, 2025 11:51

இன்னும் அவரை காங்கிரஸ் தலைவர் என்று நம்புகிறீர்களா? அவர் திமுக உளவாளி


Anand
ஆக 06, 2025 10:57

அதை விடுங்க, இவனை கைது செய்யும் நாள் கூடிய சீக்கிரம் வரும் அப்போது இதைவிட கட்ட்ட்டும் அப்செட் ஆவான்..


Arjun
ஆக 06, 2025 10:26

தமிழகத்தில் எந்த அநீதி நடந்தாலும் மக்களை பற்றி கவலைபடாமல் காவடி தூக்குவதில் சிறப்பாக செயல்பட்டார்கள் இப்ப தனக்கு வந்தால் ரத்தம் மக்களுக்கு வந்தால் தக்காளி சட்னி.


theruvasagan
ஆக 06, 2025 08:33

பப்புவிடம் புகார். அந்தகட்சிக்கு அகில இந்திய தலைமை என்று ஒருத்தர் இருக்காராமே. அவரை கடைக்கோடி கட்சிக்காரன் கூட மதிக்கமாட்டேங்கிறானே. அந்த பதவியே ஒப்புக்கு சப்பாணியா இருக்கிறதால் தானே.


suresh Sridharan
ஆக 06, 2025 08:33

இப்பொழுதாவது புரிந்ததா வலி வரும்பொழுது தான் தெரியும்


theruvasagan
ஆக 06, 2025 08:28

யாரும் ஒண்ணுத்தையும் கிழிக்கப் போறதில்லை. நாலஞ்சு சீட்டுக்காக அகில இந்திய கட்சியை அடமானம் வச்சுட்டு இப்ப போர்வாள் ஏந்தி படையெடுக்கப் போறாங்களா. உள்ளூர் தலைவனுக எல்லாருமே அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு தூக்கி எறிவதை சாப்பிட்டுவிட்டு வாசல் கேட்டில் வாலாட்டிக் கொண்டு திரியும் பிறவிகள். அம்மஞ்சல்லிக்குக்கூட பிரயோசனமில்லை.


Subburamu Krishnasamy
ஆக 06, 2025 08:01

khancross is a bonded labourers in Tamizhagam and it's leaders are the most obedient slaves to Stalin


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை