உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராமர் கோவில் கும்பாபிஷேகம்; ஸ்டாலின் மனைவி பங்கேற்பு?

ராமர் கோவில் கும்பாபிஷேகம்; ஸ்டாலின் மனைவி பங்கேற்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தியில், வரும் 22ல் நடக்கவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அனைத்து மாநில கவர்னர்கள், முதல்வர்கள், எதிர்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதற்காக, முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி ஆகியோரை சந்திக்க ஹிந்து அமைப்பினர் அனுமதி கேட்டுள்ளனர். கூடவே, கும்பாபிஷேக அழைப்பிதழை வீடு, வீடாகச் சென்று வழங்கும் பணியையும் மேற்கொண்டு உள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள, சென்னை கோபாலபுரத்தில் வேணுகோபால்சாமி கோவில் உள்ளது.அக்கோவிலில் கும்பாபிஷேக அழைப்பிதழை வைத்து ஹிந்து அமைப்பினர் பூஜை செய்துள்ளனர். அதன்பின், அந்த ஏரியாவில் வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் வழங்கினர். இதற்கிடையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, ஆன்மிகவாதியாகவும்; தீவிர ஹிந்து பற்றாளராகவும் இருக்கிறார். அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்குச் செல்ல விரும்புகிறார்.உதயநிதியின் சனாதன ஒழிப்புப் பேச்சைத் தொடர்ந்து வட மாநிலங்களில் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புணர்வு, இதனால் குறையும் என்றும் நினைப்பதால், ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் துர்கா பங்கேற்கக்கூடும். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

Swaminathan Chandramouli
ஜன 07, 2024 12:45

தந்தை , தனயன் , தனயன் மனைவி மூவரும் தாங்கள் கிறித்துவ மதத்தை தழுவியவர்கள் என்று நிரூபித்து விட்டார்கள் ஆனால் ஸ்டாலின் மனைவி தான் ஹிந்து தான் என்று நாடகமாடுகிறார்


J.V. Iyer
ஜன 07, 2024 07:34

இந்த அம்மா தன் வீட்டில் உள்ள முதலில் திருத்தட்டும். இவர் ஊரை ஏமாற்றலாம். ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது.


konanki
ஜன 06, 2024 13:06

அப்பன் ,பிள்ளை பேச்சை ஊட்ல கூட எவனும்/எவலும் மதிக்கல


M Ramachandran
ஜன 02, 2024 21:27

இதற்கு சைகோவின் பதில் என்ன? எல்லா பக்கமும் அடைப்பு., காத்து கூட வெளி வராது


M Ramachandran
ஜன 02, 2024 21:25

ராமர் கோவிலை இடிக்கும் கும்பல் தலைவி ராமர் கோயில் திறப்பிற்க்கா கலியுகம் நல்ல வேலை செய்யுது. புத்தி சாலி பெட்ரா பில்லிய நான் கிருஸ்துவன் சனாதனிக்கலிய்ய கொள்ளுவேன் என்கிறது இது கும்பாஷிபத்திற்கா யாருக்கும் வெட்கமில்லை


ngopalsami
ஜன 02, 2024 10:58

கட்டுமர குடும்பத்தில் ஒரு பகுதி நாத்திகம், சனாதன எதிர்ப்பு. ஒரு பகுதி தீவிர பக்தி மார்க்கம், கோவில்களை தேடி, தேடி விஜயம். இந்த நாடகத்தை என்னவென்று சொல்வது. மக்களை கோமாளிகளாக்குவது.


Matt P
ஜன 02, 2024 03:22

கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை எந்த கோயிலுக்கும் போனதில்லை. அந்த ஆணடவனுக்கு அவ்வளவு பயம் இருந்திருக்கிறது.. கடவுள் மனிதர்களை விட் உயர்ந்தவன் என்று நினைப்பவன் தான் உண்மையான பக்தன்.


Mohan das GANDHI
ஜன 02, 2024 00:12

SHE IS BELONGS ALLELUIYA CHRISTIAN AND DOING DRAMA AS HINDU LADY TO ATTRACT THE TAMIL PEOPLE FOR VOTES ? THIS LADY THAT THE RAMA TEMPLE TRUSTY SHOULD NOT ALLOW INSIDE THE TEMPLE AS THIS ANTI SANADHAN UDHAYANIDHI'S STALIN MOTHER AND NO GOD STALIN'S WIFE DURGA STALIN SHOULD NOT TO BE INVITED BY THE SRI RAM MANDHIR AYODHYA. SHE IS DOING DRAMA ONLY. DMK IS ANTI HINDUS PARTY ANTI SANADHAN DHARMAM IS REVELED ALL OVER INDIA. THIS MP ELECTION IS APPROACH SHR DURGA STARTED HER CINEMA AS HINDU DEVOTTEE ALL ARE NOT REAL. DMK FAKE PEOPLE.


Vijay D Ratnam
ஜன 01, 2024 23:24

அடேங்கப்பா, ராசாத்தி அம்மாளை விட பெரிய ஆட்டக்காரியா இருப்பாய்ங்க போல இந்த துர்கா. புருஷனுக்கும் மவனுக்கும் ஹிந்து மதம்னா புடிக்காது. சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்பார் மவன். ஹிந்து சடங்குகள் மந்திரங்கள் அருவறுப்பானவை, கேவலமானவை என்பார் புருஷன். ஹிந்து என்றால் திருடன் என்பார் மாமனார். இவருக்கு பக்திமான் ஸ்டிக்கர் ஒட்டி திருவாட உடுவாய்ங்க. சொம்மா சொல்ல கூடாதுப்பா. 35 வருசமா அக்காயி நின்னு வெளையாடுது.


Sivagiri
ஜன 01, 2024 22:43

தெலுங்கர்கள் பெரும்பாலும் பெருமாளை வணங்குபவர்கள்தான் - வெங்கடாசலபதி - மற்றும் ராமர் - ஹனுமான் - பக்தர்கள் -


மேலும் செய்திகள்









புதிய வீடியோ