உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அசமஞ்ச ஒப்பந்ததாரரால் இதுவரை வீண் ரூ.1,400 கோடி!

அசமஞ்ச ஒப்பந்ததாரரால் இதுவரை வீண் ரூ.1,400 கோடி!

சென்னை: தமிழக அரசு, 12 கூட்டுறவு மற்றும் அரசு சர்க்கரை ஆலைகளில், சர்க்கரை மட்டுமின்றி மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய இணைமின் நிலையங்கள் அமைக்கும் பணியை, 2010ல் துவக்கியது.திட்ட செலவான, 965 கோடி ரூபாயை, இந்திய புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து, மின் வாரியம் கடன் வாங்கி உள்ளது; 18 மாதங்களில் மின் உற்பத்தி துவங்க திட்டம். இதுவரை, ஏழு துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, உற்பத்தி துவக்கப்பட்டு உள்ளது.நாமக்கல்லில் உள்ள சேலம் கூட்டுறவு; தர்மபுரி, சுப்ரமணிய சிவா; கள்ளக்குறிச்சி 1, கள்ளக்குறிச்சி 2, மதுரை தேசிய கூட்டுறவு ஆகிய ஆலைகளில், இணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி துவக்கப்படவில்லை.

திட்டத்திற்கென வாங்கிய தொகைக்கு, இதுவரை, 13 ஆண்டுகளாக, 1,400 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டுஉள்ளது. ஒப்பந்தம் செய்துள்ள, 'வால்சந்த்' நிறுவனம், திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளதால், அரசு பணம் வீணாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அஆ
ஜன 05, 2024 10:41

ஏன் என்று எளிதாக கண்டுபிடித்துவிடலாம். ஒவ்வொரு யூனிட் மின்சாரம் விற்கும்போது 10 ரூபாய் குறையுதா என்று பாருங்கள்?


r.sundaram
ஜன 04, 2024 14:22

ஒப்பந்ததாரர் எப்படி வேலையை கிடப்பில் போட முடியும்? ஏன் இந்த வட்டி தொகையை அவரிடமிருந்து வசூலிக்க கூடாது? ஒப்பந்தம் போடும்போதே இத்தனை காலத்துக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்ற ஷரத்து இல்லையா என்ன?


Kundalakesi
ஜன 04, 2024 13:01

மக்களுக்கு இலவசமாக சோலார் பேனல் மற்றும் பேட்டரி இந்த வட்டி பணத்தில் தந்திருக்கலாம்


Ramesh Sargam
ஜன 04, 2024 07:46

அந்த அசமஞ்ச ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டு, வேறு ஒருவரிடம் பணியை ஒப்படைக்கவேண்டும். மேலும் அந்த அசமஞ்சத்திடமிருந்து நஷ்டஈடு பெறவேண்டும்.


கிருஷ்ணதாஸ்
ஜன 04, 2024 07:32

'அசமந்த' என்பதே இலக்கண ரீதியாகச் சரி!


அப்புசாமி
ஜன 04, 2024 09:35

சமைந்த என்பதன் இடை, இறுதிப் போலிச் சொல்தான் சமஞ்ச அதாவது தகுதியான எனப் பொருள்படும். அ சமஞ்ச என்றால் தகுதியடையாத தகுதி எனப்பொருள்படும்.


அப்புசாமி
ஜன 04, 2024 07:08

வால்சந்த் நிறுவனத்துக்கிட்டே காண்டிராக்ட் குடுக்கும்.முன்னாடியே கமிஷன் வாங்கியிருப்பானுக நம்ம திருட்டு திராவிடனுங்க.


Varadarajan Nagarajan
ஜன 04, 2024 06:55

தமிழக மின் வாரியம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது. அதுபோல் மின் வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய ஒழுங்குமுறை ஆணையமும் வாங்கிய கடனுக்கு தெண்டமாக வாரியம் கட்டும் வட்டியையும் கண்டுகொள்ளாமல் உள்ளது. இந்த தீண்ட வட்டியையும் கணக்கில் கொண்டு வாரியம் கழட்டத்தில் இயங்குவதாக கணக்கில்கொண்டு ஆணையமும் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கின்றது.


raja
ஜன 04, 2024 06:21

Iythukellaam தானே முன்வந்து நீதி துறை விசாரிக்க வேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள் ..


Mani . V
ஜன 04, 2024 05:19

மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் இது போன்ற பொறுப்பற்ற, சமூகவிரோத அதிகாரிகளை, ஒப்பந்ததாரர்களை சுட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை