உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாகிஸ்தான் கழுதைக்கு டிமாண்ட் ரூ.2 லட்சமாக விலை உயர்வு

பாகிஸ்தான் கழுதைக்கு டிமாண்ட் ரூ.2 லட்சமாக விலை உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கராச்சி: கழுதைத் தோலில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துக்காக சீனா அவற்றை அதிகளவு வாங்குவதால், பாகிஸ்தானில் தேவை அதிகரித்து கழுதை ஒன்றின் விலை 2 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

எஜியாவ் மருந்து

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் கழுதை வண்டி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதை பயன்படுத்தி பொருட்களை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றனர். செங்கல் சூளைகள், சலவை தொழில், விவசாயம் போன்றவற்றிலும் கழுதைகள் பயன்பாடு உள்ளது.உலகில் எத்தியோப்பியா மற்றும் சூடானுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானில் தான் கழுதைகள் எண்ணிக்கை அதிகம். இங்கு 56 லட்சம் கழுதைகள் உள்ளன. இந்நிலையில், சீனாவில் கழுதைத் தோலில் இருந்து 'எஜியாவ்' என்ற பாரம்பரிய மருந்து தயாரிப்பது அதிகரித்துள்ளது. இந்த மருந்து புற்றுநோயை குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இதனால் கழுதை தோலுக்காக அவற்றை, பாகிஸ்தானில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்கின்றனர்.

அதிர்ச்சி

இதனால் கழுதைக்கான தேவை அதிகமாகி அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இது குறித்து கழுதை வளர்த்து வந்த கராச்சியின் அப்துல் ரஷீத் கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன் 30,000 ரூபாய்க்கு ஒரு கழுதையை வாங்கி தொழில் செய்தேன். அது இறந்துவிட்டது. புதிதாக கழுதை வாங்க சந்தைக்கு சென்ற போது விலையை கேட்டு மயங்கி விழாத குறை. தற்போது கழுதை ஒன்றின் விலை 2 லட்சம் ரூபாயாக உள்ளது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Guru
ஜூன் 09, 2025 12:18

ஆகவே பாகிஸ்தான் ஒரு கழுதைகள் நிறைந்த நாடு என்பது தெரிகிறது.


கண்ணன்
ஜூன் 09, 2025 11:46

அந்நாட்டின் பொருளாதாரம இனி கழுதைகளை நம்பி மட்டுமே இருக்கும். ஏற்கனவே அவர்களுக்கு முறையான படிப்பறிவு இல்லை படிக்கவும் விருப்பமில்லை. இனி எல்லோரும் கழுதைகளை மேய்த்து வாழலாம்


Karthik
ஜூன் 09, 2025 10:25

அதனால என்ன? பாகிஸ்தான்ல இருக்கவே இருக்கு ரெண்டு கால் கழுதைங்க லட்சக்கணக்குல. சில ஆயிரம் கொடுத்தாலே போதும் உங்க பின்னாடியே வந்துடும்.


Hariharan S
ஜூன் 09, 2025 09:47

இப்பாவாவது புரிஞ்சுதே பாக்கிகள் யார் அவர்களது புத்தி அளவு - சாரி —விலை உயர்வு மிருகம் (கழுதை)என்ற உழைப்பாளிக்குத்தான்


ருத்ரன்
ஜூன் 09, 2025 09:26

கழுதை வண்டி வைத்து பிழைப்பு நடத்தி கொண்டிருக்கும் இவர்கள், தங்களை விட இந்தியா 10 வருடங்கள் பின் தங்கி இருக்கிறதாம், பக்கி கிரிக்கெட் வீரர் சையத் அப்ரிடி சொல்கிறான்.


தியாகு
ஜூன் 09, 2025 09:26

பாகிஸ்தான் கழுதைக்கு டிமாண்ட் அதிகம். எனக்கென்னமோ அர்த்தம் வேறமாதிரி தெரியுது. எனக்கு மட்டும்தானா? ஹி ...ஹி ...ஹி


புதிய வீடியோ