உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சேவை செய்வதில் மக்கள் நம்பிக்கையை ஆர்.எஸ்.எஸ்., பெற்றுள்ளது: வாசன்

சேவை செய்வதில் மக்கள் நம்பிக்கையை ஆர்.எஸ்.எஸ்., பெற்றுள்ளது: வாசன்

சென்னை: 'சமூக மாற்றத்திற்காக பாடுபடும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.,' என, த.மா.கா., தலைவர் வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவையொட்டி, அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது: சமூக மாற்றத்திற்காக பாடுபடும் உலகின் மிகப்பெரிய தன்னார்வ இயக்கம் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்துக்களை ஒன்றிணைத்து, மற்றவர்களுக்காகவும் சேவை செய்வதில், மக்கள் நம்பிக்கையை பெற்ற இயக்கம். கருத்து வேறுபாடுகளை தீர்க்க; இயற்கையோடு இணக்கமாக வாழ; விளிம்பு நிலை மக்களுக்கு சேவை செய்ய உதவிக்கரம் நீட்டுகிறது. ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதால், சமூக, சமத்துவம் நிலவும் என ஆர்.எஸ்.எஸ்., நம்புகிறது. 'இந்திய தேசிய கொடியை மதிப்போம். வெளிப்படையாக செயல்படுவோம். அமைதி வழிமுறைகளில் ஈடுபடுவோம். அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி நிற்போம்' என்கிறது, ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவில் ஏழைகளுக்கு சேவை செய்ய பல அமைப்புகளை, ஆர்.எஸ்.எஸ்., உருவாக்கியுள்ளது. அவற்றில், கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் இருப்பதும், முக்கியமான பதவிகளில் இருப்பதும் பொருத்தமான ஒன்று. பழங்குடியினரின் நலனுக்காகவும், 'ஏகல் வித்யாலயா' வாயிலாக, சிறப்பான கல்வி பணியிலும் ஈடுபடுகிறது. உடற்பயிற்சி, விளையாட்டு, ஆன்மிகம், அறிவுசார் சொற்பொழிவு ஆகியவை வாயிலாக தன்னார்வலர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி அளிக்கிறது. நெருக்கடி மற்றும் இயற்கை பேரிடர்களின்போது, மறுவாழ்வு பணிகளில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ்., பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

வல்லவன்
அக் 25, 2025 17:18

அடடே....


abdul kareem
அக் 25, 2025 17:04

எப்படி வேணா வாழலாம்


முருகன்
அக் 25, 2025 16:30

பதவி சுகத்திற்காக பேசும் இந்த பேச்சை உங்கள் தந்தை ஆன்மா நிச்சயமாக மன்னிக்காது உங்களை


vivek
அக் 25, 2025 16:57

நீ என்ன சொன்னாலும் உனக்கு அலுமினிய தட்டு தான் முருகா


பாபு
அக் 25, 2025 16:22

RSS = Relentless Social Service. தளராத, இடைவிடாத சமூக சேவை. சரியாக கூறியுள்ளார்.


Oviya Vijay
அக் 25, 2025 14:38

தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைத் தவிர...


vivek
அக் 25, 2025 16:57

இதயம் பத்திரம் ஓவியம்


Abdul Rahim
அக் 25, 2025 13:14

ஒரு ராஜ்ஜியசபை சீட்டுக்காக சோரம்போனவன்....


vivek
அக் 25, 2025 16:59

நீ கமல்ஹாசனை சொல்கிறாய்


Abdul Rahim
அக் 25, 2025 13:13

உனக்கெல்லாம் ஒரு முழம் கயிறு கிடைக்கலையா ஜால்றா வாசா ...


vivek
அக் 25, 2025 16:58

உனக்கு இவளோ.....


நிக்கோல்தாம்சன்
அக் 25, 2025 18:57

கட்சி தலைவருக்கு கூட பேச்சுரிமை மறுக்கப்படும் மாநிலமாக மாற்றிய பெருமை ஸ்டாலினுக்கு சேரும்? இல்லை கருத்துரிமை மறுக்கப்படும் அளவிற்கு வன்மையாக பேசிய உமது மீது வழக்கு பதிவு செய்யுமா ஸ்டாலின் கீழ்வரும் காவல்துறை ?


ராஜா
அக் 25, 2025 12:52

இப்போது இருந்தா இப்படி எல்லாம் பேச மாட்டார்


Sun
அக் 25, 2025 12:15

நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணே! எல்லோருக்குமே இது ஏற்கெனவே நன்றாகவே தெரியும். அரசியலை பணம் சம்பாதிக்கும் ஒரு கருவியாக, இயந்திரமாக இல்லாமல் நாட்டின் நலன்தான் முக்கியம் என எண்ணும் அரசியல் தலைவர்களில் தலையானவர் நீங்கள் ! செல்வப் பெருந்ததை போன்ற பல கட்சிகள் மாறி வந்தவர்கள் இன்றைய காங்கிரசின் தலைவராக இருக்கும் போது காங்கிரஸ் என்ற போர்வை உங்களுக்கு தேவையே இல்லை! முதலில் காங்கிரஸ் என்ற போர்வையில் இருந்து வெளியே வாருங்கள்!


Rathna
அக் 25, 2025 11:55

உண்மையை பேசி உள்ளார்.


முக்கிய வீடியோ