உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் காரணம் கேட்க தயாராவதால் அதிர்ச்சி

பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் காரணம் கேட்க தயாராவதால் அதிர்ச்சி

சென்னை : வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் அதற்கான காரணத்தை தெரிவிக்கும்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க உள்ளதால் தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த மாதம் 19ம் தேதி நடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டுச் சாவடிக்கு சென்றவர்களில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன. ஓட்டளிக்க முடியாமல் அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு இருப்பதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக பா.ஜ., சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தால் அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் பொது தகவல் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் என்ற முகவரிக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள், அதற்கான காரணத்தை கேட்டு மனு செய்யும்படி ஒரு தரப்பினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.தகவல் கோரி விண்ணப்பிக்க வேண்டிய படிவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி காரணத்தை கேட்டு விண்ணப்பிக்க பலரும் தயாராகி வரும் தகவல் வெளியாகி உள்ளது. இது தேர்தல் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் வழக்கமாக ஓட்டுப் பதிவோடு அதை மறந்து விடுவர். தற்போது பெயர் நீக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.அனைவரும் மனு செய்ய துவங்கினால் ஒவ்வொரு மனு மீதும் விசாரணை நடத்தி அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது சிக்கல்களை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sathyan
மே 03, 2024 20:35

This is a good ning Election commission officials cannot escape responsibility and accountability Getting the truth under RTI will ensure that these officials are suitably punished if they have removed some voters under political compulsion


Balasubramanian
மே 03, 2024 18:28

ஒரு காரியத்தை நல்லமுறையில் நடத்தி முடிப்பது எவ்வளவு சிரமம் என்பது அதில் ஈடுபட்டவர்களுக்கு தான் தெரியும்! அக்கறை உள்ளவர்கள் மூன்று மாதங்கள் முன்பிருந்தே பெயர் உள்ளதா என்பதை காண முயல்வார்கள்! இல்லை என்றால் பெயர் வர முயற்சி மேற்கொள்வார்கள்! அக்கறை இல்லாதவர்கள் பெயர் இருந்தும் மூன்று நாட்கள் லீவு என்று விடுமுறையில் சென்று விடுவார்கள்! வம்பு வழக்குகள் அரசியல் செய்ய விரும்புபவர்கள் பிறர் பெயரை நீக்க முற்படுவார்கள்! பெயரை சேர்க்கும் போது படத்துடன் தேர்தல் கார்டு அனுப்பும் ஆணையம் ஏன் பெயரை நீக்கும் போது நீக்க பட்டது என்று தெரிவிக்க கூடாது?


சிந்தனை
மே 03, 2024 14:59

பணியில் கவனக்குறைவாக செயல்படும் மக்கள்வரி ஊழியர்களுக்கு கடுமையான தண்டனை தந்தால்தான் நாடு நல்ல வளர்ச்சியை அடைய முடியும்.... சிந்திப்போம்...


ram
மே 03, 2024 13:08

புதிதாக சேரும் பொது, ஆதார், மொபைல் நம்பர், போட்டோ அது இது என்று வாங்கி கொண்டுதான் வோட்டர் கார்டு தருகிறார்கள், ஆனால் இவர்கள் நீக்குவது எதன் அடிப்படியில், கேட்டல் நாங்கள் நீக்கின நபர்களின் பெயர்களை வெப் சைட் வெளீட்டுள்ளோம் நீங்கள் பார்க்காதது உங்கள் கவனக்குறைவு என்று ஒரு தேர்தல் அலுவலக அதிகாரி சொல்லுவது வெட்கக்கேடானது, நீக்கிய நபர்களின் மொபைல் நம்பர் அவர்களிடம் இருக்குது அதில் உங்கள் பேர் நீக்கப்பட்டுள்ளது என்று குறுந் தகவல் அனுப்பலாமே


jayvee
மே 03, 2024 11:16

தேர்தல் கமிஷனில் பணி செய்யும் தேர்தல் அதிகாரிகள் என்று கணக்கெடுத்தால் மாநிலத்தில் வெறும் நூறு பேர் கூட தேறமாட்டார்கள் இந்த தவறை முன்னின்று செய்தவர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட மாநில அரசு ஊழியர்கள்


Subramaniyam N
மே 03, 2024 14:25

Yes you are absolutely correct in your statementElecction officials are orbitally d the names and never informed the concerned persons This is in support of certain political parties and state governments officials RFI is the correct tool to get the truth behind it


enkeyem
மே 03, 2024 10:47

//வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் வழக்கமாக ஓட்டுப் பதிவோடு அதை மறந்து விடுவர் தற்போது பெயர் நீக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது அனைவரும் மனு செய்ய துவங்கினால் ஒவ்வொரு மனு மீதும் விசாரணை நடத்தி அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படும்// அப்போ பெயரை நீக்கிவிட்டால் நம்மை யாரும் எதுவும் செய்துவிடமாட்டார்கள் என்கிற தைரியத்தியல் பூந்து விளையாடியுள்ளார்கள் என்பது உறுதியாகிறது


ஆரூர் ரங்
மே 03, 2024 10:28

பதிவேடுகளை கரையான் தின்று விட்டது. வைத்திருந்த பீரோக்களை கூவத்து முதலை விழுங்கிவிட்டது என பதில் வரும். பொன்முடி நாட்டு மன்றம் சரி என்று தீர்ப்பளிக்கும்.


M Ramachandran
மே 03, 2024 09:25

தமிழக தேர்தல் துறை ஆளும் கட்சிக்கு கை பாவையானா


karthik
மே 03, 2024 08:38

மொத்தமாக கொத்து கொத்தாக பெயரை நீக்கிவிட்டு இப்போ காரணம் கேட்பார்கள் என்று பயமா? காரணத்தை தெரிவித்தே ஆகவேண்டும்


Sriram V
மே 03, 2024 07:58

விடியல் அரசின் சாதனை கேமரா பழுது மற்றும் பெயர் இல்லாமல் இருப்பது


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ