உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விற்பனையாகாத மளிகை தொகுப்பை ரேஷன் ஊழியர் தலையில் கட்டுவதா?

விற்பனையாகாத மளிகை தொகுப்பை ரேஷன் ஊழியர் தலையில் கட்டுவதா?

சென்னை: ரேஷன் கடைகளில் விற்பனையாகாத, பொங்கல் மளிகை தொகுப்பில் உள்ள பொருட்களை, தனித்தனியே கார்டுதாரர் களிடம் விற்குமாறும், அதற்குரிய பணத்தை முன்கூட்டியே செலுத்துமாறும், கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்திருப்பது, ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.தமிழகத்தில், ஜனவரி, 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இனிப்பு பொங்கல்

இதற்காக, கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளில், 199 ரூபாய்க்கு இனிப்பு பொங்கல், 499 ரூபாய்க்கு சிறப்பு பொங்கல், 999 ரூபாய்க்கு பெரும் பொங்கல் என, மூன்று மளிகை தொகுப்புகள் விற்கப்பட்டன. இனிப்பு பொங்கல் தொகுப்பில், ஏழு பொருட்களும், சிறப்பு பொங்கல் தொகுப்பில் 19; பெரும் பொங்கல் தொகுப்பில், 34 பொருட்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றின் விற்பனை ரேஷன் கடைகளில், டிசம்பர், 18ல் துவங்கியது. கடைக்கு தலா, 50 - 100 என, அனுப்பப்பட்டன. பல கடைகளில் மளிகை தொகுப்புகள் முழுதுமாக விற்கப்படவில்லை.

இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:

மளிகை தொகுப்பு அனுப்பியதில் பல கடைகளில், 5 - 10 தொகுப்புகள் விற்கப்படவில்லை. அந்த தொகுப்பில் உள்ள பொருட்களை, தனித்தனியே ரேஷன் கார்டுதாரர்களிடம் விற்குமாறும், அதற்கு உரிய பணத்தை சங்கத்தில் செலுத்துமாறும், கூட்டுறவு பண்டகசாலை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

என்ன நியாயம்?

பொருட்கள் விற்ற பின்தான் பணம் செலுத்த முடியும். ஆனால், அதற்கு முன்னதாகவே கடைகளில் எத்தனை தொகுப்பு மீதம் உள்ளதோ, அதற்கு உரிய பணத்தை முன்கூட்டியே செலுத்துமாறு, ஊழியர்களிடம் சொல்வது எந்த வகையில் நியாயம்?இதுகுறித்து, உயரதிகாரிகள் விசாரணை நடத்தி, முன்கூட்டியே பணம் செலுத்த சொல்வதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை