உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துர்கா ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழா சோனியா, பிரியங்கா பங்கேற்க மறுப்பு?

துர்கா ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழா சோனியா, பிரியங்கா பங்கேற்க மறுப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா எழுதிய, 'அவரும் நானும்' இரண்டாம் பாகம் நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்க, சோனியா, பிரியங்கா ஆகியோருக்கு அழைப்பு விடுத்த நிலையில், அவர்கள் வர முடியாத நிலையில் இருப்பதாக கூறி விட்டனர். தேசியவாத காங்கிரஸ் - சரத்பவார் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.முதல்வர் ஸ்டாலினின் அக வாழ்க்கை மற்றும் புற வாழ்க்கையை ஆழமாக சித்தரிக்கும் வகையில், 'அவரும் நானும்' என்ற நுாலை, அவரது மனைவி துர்கா எழுதினார். இதன் முதல் பாகம் கடந்த 2018ல் வெளியானது; இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.

காங்., முதல்வர்

இதில், முதல்வர் ஸ்டாலின் தொடர்பாக, இதுவரை வெளிவராத பல்வேறு தகவல்கள், சுவாரசியமான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நுால் வெளியீட்டு விழா, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், நாளை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, காங்கிரஸ் பெண் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால், சில காரணங்களால் வர இயலாது என கூறி விட்டதால், தேசியவாத காங்கிரஸ் - சரத்பவார் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே பங்கேற்கிறார். இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதால், 'அவரும் நானும்' இரண்டாம் பாகத்தை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோர் வெளியிட்டால், தேசிய அளவில் நுாலிற்கு பெருமை கிடைக்கும்; தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்குவதாகவும் அமையும் என கருதி, அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், சோனியா தன் உடல் நலத்தை காரணம் காட்டி மறுத்துள்ளார். வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளதால், பிரியங்காவும் வர இயலாது என கூறி விட்டார். காங்கிரசை சேர்ந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அழைத்தபோது, அவரும் சில காரணங்களை கூறி நழுவியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் - சரத்பவார் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே மட்டும் வர சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் பங்கு

தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை கேட்க வேண்டும்; ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சில நிர்வாகிகள் டில்லி மேலிடத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், துர்கா எழுதிய நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்றால், தமிழக காங்., கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தி.மு.க.,விற்கு அழுத்தம் கொடுக்க முடியாது. அதனால், சோனியா, பிரியங்கா வரவில்லை; தெலுங்கானா முதல்வருக்கும், காங்., தலைமை அனுமதி அளிக்கவில்லை.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

S.kausalya
ஜூலை 19, 2025 17:49

அடுத்து இந்த கவிதாயினிக்கு இலக்கிய சார்பில் பொற்கிழி, தமிழக அரசின் சார்பில் வழங்க படும்


M Ramachandran
ஜூலை 19, 2025 01:06

வீட்டுக்குஞ்சு குளுவான் மூத்திரம் அடிப்பதென பெரியா சாதனையாக ஒரு புத்தகம் திருட்டு கிழட்டு பேரார்வழியை முஞ்சந்திக்கு முஞ்சந்திசிலையய் ரூபத்தில் மக்கள் கண்டு காண்டு ஆகி முகத்தியய மூடி கொண்டு செல்கிறார்கள். மக்களுக்காக அல்ல குடும்பத்திற்ற்க்கா இருக்கிறோம் என்று தம்பட்டம் அடிக்கும் கும்பல்


Anantharaman Srinivasan
ஜூலை 19, 2025 00:20

அந்த நூலில் ஸ்டாலின் முதல்வரானது பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையாலா ?அல்லது தான் கடவுள் மீது வைத்திருக்கும் ஆன்மீக நம்பிக்கையாலா ? என்பதை சொல்லியிருந்தால் பாராட்டலாம்.


சண்முகம்
ஜூலை 18, 2025 19:24

திரு சுப்பு, உதயநிதி மனைவியின் பெயர், கிருத்துகா ஆகும்.


Saai Sundharamurthy AVK
ஜூலை 18, 2025 18:13

இதென்ன புத்தகம் ! இதைப் படித்தால் அறிவாளியாகி விட முடியுமா ????


Anantharaman Srinivasan
ஜூலை 19, 2025 00:14

இதென்ன புத்தகம் இதைப் படித்தால் அறிவாளியாகி விட முடியுமா ? அறிவாலயத்தில் கேட்டால் ஆமாம் என்று சொல்லுவார்கள்.


theruvasagan
ஜூலை 18, 2025 18:06

அண்ணாதுரைக்கு பக்கோடா வாங்கிவந்த படலம் அதுல இருக்குமா.


C.SRIRAM
ஜூலை 18, 2025 17:40

வைர துருப்பிடித்த காமாந்தர தகர முத்து


RAAJ68
ஜூலை 18, 2025 16:31

வலுக்கட்டாயமாக எத்தனை பேர் தலையில் கட்டப் போகிறார்களோ


RAAJ68
ஜூலை 18, 2025 16:31

பட்டு நூலா பருத்தி நூலா?


HoneyBee
ஜூலை 18, 2025 16:07

அந்த நூலில் சுடலை அண்ணாசாலையில் துரத்தியதும் பாலிடால் எதுக்கு சின்ன வெங்காயம் குடித்தது என்பதும் இருக்குமா


SUBBU,MADURAI
ஜூலை 18, 2025 16:36

அதென்னமோ தெரியல கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அவரைப் போலவே, காப்பிக் கவிதை sorry காவியக் கவிதை மற்றும் அதாவது கட்டுமரம் எழுதுவது போல கட்டுக்கதை எழுதுவது கை வந்த கலையாகி விட்டது. ஆமா துர்க்காம்மா எழுதிய இந்த காதோடுதான் நான் பேசுவேன் என்ற நூலில், யோவ் அது சினிமா பாட்டுய்யா.. என்னாது அது சினிமா பாட்டா.. சரி நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் யோவ் இதுவும் முத்துராமன் ஜெயலலிதா நடித்த சினிமா பாட்டுய்யா சரி சரி இந்த நாவலில் என்னது நாவலா இல்லப்பா இந்த நூலில் இதுவரை வெளிவராத மௌண்ட் ரோடு சேசிங் அப்றம் மிசா கசமுசா என தத்தி பற்றி இதுவரை வெளிவராத தரமான சம்பவங்கள் இடம் பெற்று இருக்கின்றன என்று அவரோட மனைவி துர்க்காம்மாவே சொல்லியிருக்காங்களே.. ஆமா இந்த புஸ்தகத்திற்கு யாரு முகவுரை அணிந்துரை பொழிப்புரை? வேற யாரு செம்மொழிப் புலவி நம்ம கவிதாயினி கனிமொழியாக இருக்கும் என்னாது அவர் இல்லையா அப்படீன்னா வேற யாரு? நம்ம முதல்வரோட மருமகளும் உதயநிதியோட மனைவி கிருத்திகாவா இருக்கும் போல தெரியுது.. யார் புத்தகம் எழுதுவது என்கிற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.


சமீபத்திய செய்தி