உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தென்மாவட்ட ரயில்வே வளர்ச்சி பணிகள்: தேவை என்னென்ன... இதோ பட்டியல்

தென்மாவட்ட ரயில்வே வளர்ச்சி பணிகள்: தேவை என்னென்ன... இதோ பட்டியல்

ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் ஏப். 24 காலை 11:00 மணிக்கு மதுரையில் ரயில்வே துறை வளர்ச்சி பணிகள் குறித்து எம்.பி.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் தென் மாவட்ட மக்களுக்கு தேவையான கூடுதல் ரயில்கள் கிடைக்க எம்.பி.க்கள் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் மக்கள் தற்போது சென்னை, கோவை, பெங்களூரு, உட்பட பல்வேறு நகரங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் வந்து செல்ல போதிய ரயில் வசதிகள் இல்லை. எனவே, கூடுதல் ரயில் வசதிகள் செய்து தர வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகள்:

அந்தியோதயா ரயில்கள்

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு முழுமையும் முன்பதிவில்லா அந்தியோதயா ரயில் இயக்கப்படுகிறது. அதே போல், செங்கோட்டை, போடிநாயக்கனூர், திருச்சி- காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம், திண்டுக்கல், -பழநி-, பொள்ளாச்சி வழியாக கோவை, வேலூர், சேலம்-, ஈரோடு ,-திருப்பூர் வழியாக கோவை ஆகிய நகரங்களுக்கும் சென்னையில் இருந்து பகல் மற்றும் இரவு நேர அந்தியோதயா ரயில்களும் இயக்க வேண்டும்.

வந்தே பாரத் ரயில்கள் வேண்டும்

தற்போது மதுரை வழியாக சென்னை, பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன. இதில் பெங்களூரு ரயில் திருச்சி வழியாக சுற்றி செல்கிறது. எனவே நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக பெங்களூருக்கு மேலும் ஒரு வந்தே பாரத் இயக்க வேண்டும்.ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னை, பெங்களூருக்கு ரயில்கள் இயக்க வேண்டும்.

நிரந்தரமாக்க வேண்டிய சிறப்பு ரயில்கள்

அவ்வப்போது நீட்டிப்பு செய்து இயக்கப்படும் சிறப்பு ரயில்களான தாம்பரம் -- நாகர்கோவில், தாம்பரம் -- கொச்சு வேலி, திருநெல்வேலி --மேட்டுப்பாளையம், எர்ணாகுளம்- - வேளாங்கண்ணி ரயில்களை நிரந்தரமாக்கி தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.பல ஆண்டுகளாக வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயங்கும் செங்கோட்டை - -சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ், போடி - சென்னை, கன்னியாகுமரி -- ராமேஸ்வரம், 2 நாட்கள் இயங்கும் எர்ணாகுளம்-- வேளாங்கண்ணி, வாரத்தில் ஒரு நாள் இயங்கும் புதுச்சேரி- - கன்னியாகுமரி, வாரத்தில் 6 நாட்கள் சென்னைக்கு இயங்கும் தேஜஸ், வந்தே பாரத் போன்ற ரயில்களை தினசரி சேவையாக இயக்க வேண்டும்.

தேவை பயணிகள் ரயில்கள்

மதுரையில் இருந்து தினமும் துாத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விருதுநகர்- செங்கோட்டை வழியாக கொல்லம், ஓசூர், வேலூர், புதுச்சேரி நகரங்களுக்கு சென்று திரும்பும் வகையில் பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும்.

தினமும் 4 முறை பயணிகள் ரயில் சேவை

தற்போது செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு தினமும் 4 முறை பயணிகள் ரயில் இயங்கி வருகிறது.இதேபோல் மதுரையில் இருந்து தினமும் கோவை, போடி, ராமேஸ்வரம், செங்கோட்டை நகரங்களுக்கும் தினமும் 4 முறை பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.

மானாமதுரை வழியாக மதுரைக்கு ரயில்கள்

மதுரையில் இருந்து சிவகங்கை, கல்லல், தேவகோட்டை, காரைக்குடி, திருமயம், புதுக்கோட்டை, கீரனூர், திருச்சி, தஞ்சாவூர் கும்பகோணம் வழியாக மயிலாடுதுறைக்கும், காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக கடலூருக்கும் ரயில்கள் இயக்க வேண்டும்.செங்கோட்டை-- மயிலாடுதுறை, குருவாயூர்-- மதுரை, ராமேஸ்வரம்-- மதுரை, கோவை - -நாகர்கோவில், பாலக்காடு-- திருச்செந்தூர் உள்ளிட்ட பயணிகள் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்.

தேவை நான்கு முன்பதிவில்லா பெட்டிகள்

முன்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் இன்ஜின் அருகே 2, கடைசியில் இரண்டு என 4 முன்பதிவில்லா பெட்டிகள் இருந்தன. தற்போது 3 பெட்டிகள் மட்டுமே உள்ளன. மீண்டும் 4 பெட்டிகள் இணைக்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை ஆலோசனை கூட்டத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

hariharan
ஏப் 17, 2025 21:03

சையத் ஓமர் அவர்களே, சென்னை-கன்னியாகுமரி வரை இரட்டைப் பாதையில் ஏற்கனவே ரயில்கள் சென்றுகொண்டு இருக்கின்றன. நாகர்கோயில்- கன்னியாகுமரி இரட்டைப் பாதை கடந்த 1-4-24 அன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. செங்கோட்டை- மயிலாடுதுறை வண்டி தென்காசி தாண்டியதும் இடம் கிடைக்காமல் பயணிகள் தரையிலும் கழிப்பறை அருகிலும் பயணம் செய்யும் அவல நிலையை நமது மதிப்பிற்குரிய MP, MLA எவரும் கண்டு கொள்வதில்லை. விமானத்தில் பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்யும் அவர்களுக்கு நாம் படும் அவஸ்தை எங்கே தெரிய போகிறது.காசு கொடுத்தும் இந்த வண்டியில் கழிப்பிடம் அருகில் நமது இருக்கை.


Seyed Omer
ஏப் 17, 2025 19:28

முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் சேவை எப்போது முடிவு பெறும் மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும் மேலும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருசெந்தூருக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும்


suren
ஏப் 17, 2025 17:09

1 திருச்சி வரை வந்து திரும்பும் ரயில்களை முதலில் நீட்டிப்பு செய்யவேண்டும். உதாரணம் ஹௌரா எக்ஸ்பிரஸ் 2 மதுரை மட்டும் வந்து திரும்பும் ரயில்களை போடி / தேனீ வரையும் எக்ஸ்பிரஸ் மட்றும் பசங்கர் ரயில்களை நீட்டிப்பு செய்யலாம். உதாரணம் ராமேஸ்வரம் / கோவை / விழுப்புரம் / குருவாயூர் ரயில்கள். 3 சென்னையுடன் திரும்பும் பல ரயில்கள் நேரம் ஒன்ருசேரும் ரயில்களை நீட்டிப்பு/இணைத்து தென் தமிழகம் முழுவதும் வர வய்க்கலாம். இதனால் என்ஜின் மற்றும் பெட்டிகள் மிச்சமாகும் .உதாரணம் கன்னியாகுமாரி கோரமண்டல் எக்ஸ்பிரஸ். 4 ரயில்களின் பேட்டி எணிக்கை 26 வரயும் பல ரயில்கள் கூட்டலாம் . 5 அந்தியோத்திய ரயில்கள் அதிகரிக்கலாம். இன்னும் பல வாய்ப்புகள் இருந்தும் ரயில்வே தூங்கி கொண்டு இறுக்கிறது


Sivagiri
ஏப் 17, 2025 14:35

அதை விட முக்கியமா நம்ம எம்பி, எம் எல் ஏ க்களிடம் யோஜனை கேட்றாதீங்கப்பா, தமிழ்நாட்டுக்கு ரயிலே தேவை இல்லைனு, மொத்தமா க்ளோஸ் பண்ணிடுவாய்ங்க . . .


Sivagiri
ஏப் 17, 2025 14:32

லிஸ்ட் நீளமா இருக்கு? எல்லாவற்றுக்கும், மேலாக, தமிழ்நாட்டுக்கு தமிழ்நாட்டு அதிகாரிகளை, நியமிக்காத-வரை, தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு, ரயில்வேயால், ஒரு பிரயோஜனமும் இருக்காது - கேரளாக்காரன்தான் பெரும்பாலான அதிகாரிகளாக, இருக்கிறார்கள், அதனால் தமிழ்நாட்டு ரயில்கள் எல்லாமே கேரளா லிங்க் பண்ணி கேரளா மக்களுக்கு யூஸ் ஆகிறா மாதிரிதான் பண்ணுவான், தமிழ்நாட்டு மக்களுக்குன்னு யூஸ் ஆகும் நாலைந்து ரயில்களையும், அப்டியே பிளான் பண்ணி கேரளா லிங்கில் கொண்டு போயிருவான்... அல்லது யாருக்குமே பிரயோஜனப்படாதவாறு டேட் - டைமிங் வச்சிருவான், அப்புறம் கலெக்சன் இல்ல, மக்கள் ஆதரவு இல்ல - ன்னு அந்த சர்விசையே நிறுத்திடுவான்... இப்டி ஏதாவது போராட்டம் பண்ணினா, கொஞ்சம், பண்ணுவான், அடுத்து வர்ற மலையாளத்தான், அப்டியே மாத்திடுவான்


aaruthirumalai
ஏப் 17, 2025 13:50

பட்டுக்கோட்டை - தஞ்சாவூர். பட்டுக்கோட்டை- மன்னார்குடி. பணி எப்போது ஆரம்பிக்கபடும் எப்போது பணி நிறைவடையும் மக்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்?


Murali
ஏப் 17, 2025 12:14

Where is theni??? keka kuda aal illaya.. pls extend more trains from madurai to theni and do something good for theni people as well


N Sasikumar Yadhav
ஏப் 17, 2025 12:04

பாரதியஜனதா கட்சிக்கு வாக்களித்திருந்தால் இந்நேரம் இந்த ரயில்கள் அனைத்தும் வந்திருக்கும். இதை மனதில் கொள்ளாமல் ஓஷிக்கும் இலவசத்துக்கும் வாக்களித்த உங்களால் இப்படி புலம்பத்தான் முடியும் . தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெறாமல் சதா எந்நேரமும் மத்தியரசோடு சண்டை போடும் புள்ளிராஜா இன்டி கூட்டணியினருக்கு ஓட்டுப்போட்ட உங்களால் எந்தவித பிரயோஜனமும் இல்லை


R Hariharan
ஏப் 17, 2025 09:13

முதலில் செங்கோட்டை பெங்களூரு மைசூர் தினசரி ரயில் சேவை வேண்டும். செங்கோட்டை கன்னியாகுமாரி, திருச்செந்தூர், ராமேஸ்வரம் பயணில்கள் ரயில் வேண்டும். சிலம்பு, மேட்டுப்பாளையம் திருநெல்வேலி, வேலன்கண்ணை ஏற்னன்குளம் ரயில் சேவை தினசரி வேண்டும். திருச்சி செங்கோட்டை வலி புதுக்கோட்டை காரைக்குடி மானாமதுரை, விருதுநகர் இன்டெர் சிட்டி வேண்டும். தாம்பரம் செங்கோட்டை இன்னும் விடவில்லை. ரயில்வே தடவை டேபிளில் கிறுபட்டப்பறகு இன்னும் 5 வருடம் முக்கியம் விடவில்லை. மும்பை மதுரை, நியூ டெல்லி மதுரை செங்கோட்டை வரை நீடிக்க வேண்டும். ஹைதெராபாத் நாகர்கோவில்/madurai தினசரி விட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை