உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காலை உணவு திட்டத்தை துவக்க வந்து அரசியல் பேசிய சபாநாயகர் அப்பாவு

காலை உணவு திட்டத்தை துவக்க வந்து அரசியல் பேசிய சபாநாயகர் அப்பாவு

திருநெல்வேலி : ''தமிழகம் வளரக்கூடாது; அதற்காக தமிழக அரசுக்கு எல்லா வகையிலும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது,'' என காலை உணவு திட்ட துவக்க விழாவுக்கு வந்த தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழக அரசின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை, திருநெல்வேலியில் செவன் டாலர்ஸ் பள்ளியில் நடந்த விழாவில், சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்.

அப்போது, அவர் அளித்த பேட்டி:

சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்காக, தமிழகத்திற்கு 2,152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு தர வேண்டும்; ஆனால், தரவில்லை. அதற்காக, தமிழக அரசு மக்கள் பணியில் சோர்ந்து விடவில்லை; தமிழக அரசு நிதி ஒதுக்கி, கல்வி வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், 'விண்வெளியில் முதன் முதலில் கால் வைத்தது அனுமன் தான்' என சொல்லி உள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் கொண்டவர்கள், பிற்போக்கு சிந்தனையான கருத்துகளை தான் பரப்பி வருகின்றனர். பா.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர். இதை பற்றி யாரும் பேசுவதில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் திருவாரூரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், கவர்னர் இதுவரை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது போன்று பல மசோதாக்கள் கவர்னரால் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. மத்திய அரசிடம் அனுமதி பெற்று, 3 சதவீதம் அதிகமாக கடன் வாங்கிக் கொள்ள அனுமதி கோரும் நிதி மசோதா அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் நிலுவையில் தான் உள்ளது. ஹிமாச்சல பிரதேசம், உ.பி., உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இது போன்ற நிதி மசோதாக்களுக்கு, 3 சதவீதத்திற்கும் அதிகமாக கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் வளரக்கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம். அமெரிக்க வரி விதிப்பால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, மத்திய அரசின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்டுள்ள தோல்வியே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

எவர்கிங்
ஆக 28, 2025 13:57

விவஸ்தை இல்லாத ஜென்மம்


S. Neelakanta Pillai
ஆக 27, 2025 17:56

இவர் சபாநாயகர் இல்லை சதிநாயகர்


Chandru
ஆக 27, 2025 17:52

இன்னும் 8 மாதம்தான் பேச முடியும்


panneer selvam
ஆக 27, 2025 16:53

Appavu never behaved as a speaker neutral to all subjects . In fact , he becomes an evangelist and spokesperson of Christian Churches .


VSMani
ஆக 27, 2025 16:18

அப்பாவு பேசிய அரசியல் செவன் டாலர்ஸ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புரியுமா? எந்த இடத்தில் எதை பேசவேண்டும் என்பதுமா சபாநாயகருக்கு தெரியாது. காமராஜர் புகழ் பாடியவர் பதவி பணத்திற்காக கலைஞர் புகழ் பாடுகிறார். எல்லாமே பணம்தான்.


T.sthivinayagam
ஆக 27, 2025 14:32

தமிழகத்தில் அனைத்து ஆலயங்களிலும் மடப்பள்ளி என்னும் சமையல் கூடங்கள் உள்ளன ஆனால் ஒரு ஹிந்து மாணவனுக்கு கூட உணவு கொடுத்து இல்லை சிலரே பரம்பரை பரம்பரையாக அனுபவிக்கிறார் என்று மக்கள் கூறுகின்றனர்


ஆரூர் ரங்
ஆக 27, 2025 16:24

திமுக அரசின் அறநிலையத்துறை க்கு சொந்தமான என்று எல்லா ஆலயங்களையும் குறிப்பிடுகிறார்கள். ஆலய வருமானங்களில் 14 சதவீதம்வரை அரசே எடுத்துக் கொள்கிறது. அப்புறம் யாரைக் குறைகூறுகிறீர்கள்?


தஞ்சை மன்னர்
ஆக 27, 2025 12:51

ஆனா நாங்க எங்க கும்பல் பி சே பி ஆர் எஸ் எஸ் வார்ப்புகள் எங்கே சென்றாலும் மத பிரச்சினை காங்கிரஸ் பற்றி மட்டுமே பேசுவோம்


vivek
ஆக 27, 2025 20:32

உண்மையை சொன்னா மன்னருக்கு புரியாது


Svs Yaadum oore
ஆக 27, 2025 11:11

காலை உணவு விரிவாக்க திட்டத்தை, திருநெல்வேலியில் செவன் டாலர்ஸ் பள்ளியில் சபாநாயகர் துவக்கி வைத்தாராம் ......செவன் டாலர்ஸ் என்பது தமிழ் பெயரா ??.....இந்த விடியல்தான் தமிழை வளர்த்தானுங்களாம் .........


Perumal Pillai
ஆக 27, 2025 09:29

மத வெறி நாயகர். ஹிந்துகள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர்களுக்கோ அல்லது ஹிந்துக்களுக்கோ எதுவும் செய்ய மாட்டார். 2016-21 வரை ராதாபுரம் MLA ஆக இருந்த இன்பதுரை ஜாதி மதம் பார்க்காமல் எல்லா ஊருக்கும் நல திட்டங்கள் கொண்டு வந்தார் ஆனால் இவர் மத வெறியர் .2026 ராதாபுரம் இவருக்காக காத்து கொண்டு இருக்கிறது .


ஆரூர் ரங்
ஆக 27, 2025 09:16

ஹிந்துக்கள் பூமி கோளம் போன்ற உருண்டை என கண்டறிந்து புவியியலுக்கு பூகோளம் எனப் பெயரிட்டனர். ஆனால் பூமி உருண்டை வடிவம் எனக் கூறியதற்காக கலிலியோ மீது கல்லெறிந்த கூட்டம் மதத்தை விட்டே விலக்கியது . மூணு கட்சி அப்பாவுக்கு இதெல்லாம் தெரியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை