உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதுமைக்கான திட்டமிடலை இளமையிலேயே துவங்குங்கள்!

முதுமைக்கான திட்டமிடலை இளமையிலேயே துவங்குங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முதுமைக்கான நிதி திட்டமிடல்களை, இளமையிலே துவங்கினால் தான், எதிர்பாராத செலவினங்களை சமாளிப்பதோடு, நிம்மதியாக பணி ஓய்வு நாட்களை கழிக்க முடியும் என்கிறார், நிதி ஆலோசகர் நிவாஸ்.குடும்பம், வீடு, குழந்தைகள் என பிறரது தேவைகளை பூர்த்தி செய்ய ஓடி ஓடி திரும்பிப்பார்த்தால், வயது 50 தாண்டி இருக்கும். மூட்டு வலியும், முதுகு வலியும், அழையா விருந்தாளிகளாக வந்து பல்லிளிக்கும். அடிக்கடி மயக்கம் வரும். அதுவரை ஓடிக்கொண்டிருந்த கால்கள், தன் ஓட்டத்தை குறைத்துக்கொள்ளும்.இச்சூழலில், பொருளாதார சுதந்திரம் இல்லாமல் இருந்தால், நிலைமை தலைகீழாக மாறிவிடும். இதனால் இளமையோடு இருக்கும் போதே, முதுமைக்கான திட்டமிடலை துவங்க வேண்டுமென்கிறார், நிதி ஆலோசகர் நிவாஸ்.அவர் கூறியதாவது:வேலைக்கு செல்பவர்கள், சுய தொழில் செய்வோர் என யாராக இருந்தாலும், வயது, பணிச்சூழல் என்ற இரு காரணிகள் அடிப்படையில், ஓய்வு பெறும் வயதை முன்கூட்டியே தீர்மானித்து விடலாம். இந்த முடிவுக்கு வந்த பிறகு, சேமிப்பை துவங்குவதால்தான், பொருளாதார சுதந்திரம் கேள்விக்குறியாகிறது.பணியில் சேர்ந்ததில் இருந்தே, மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் சேமித்தாலே, பணி ஓய்வுக்கு பின், கை மேல் பலன் கிடைக்கும். வயது அதிகரித்த பின் சேமிக்க துவங்கினால், தொகையும் அதிகமாக சேமிக்க வேண்டியிருக்கும்.நிறைய நிதி திட்டங்களை வங்கிகள், அஞ்சலகங்கள், எல்.ஐ.சி., தனியார் நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன. இதில் ஒவ்வொருவரின் தேவைக்கேற்ற திட்டங்களை தேர்ந்தெடுத்து, சேமிக்க துவங்கலாம்.உலக நிதி அமைப்பு (world financial forum), இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த 25 ஆண்டுகளுக்கு, 8-12 சதவீதம் உயரும் என கணித்துள்ளது.எஸ்.ஐ.பி.,களில்(SIP) முதலீடு செய்யலாம். தங்க பத்திரங்களில் முதலீடு செய்து, எட்டு ஆண்டுகளுக்கு பின், அதை நிதியாக மாற்றும் பட்சத்தில், வரி விலக்கு கிடைக்கிறது. மத்திய அரசு சார்பிலும், முதியோர்க்கான தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா போன்ற திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.நிதி சார்ந்த கூடுதல் தகவல் தேவைப்படுவோர், 0422 4388 333 என்ற எண்ணிலோ, srccafirm.comஎன்ற இ-மெயில் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.பணியில் சேர்ந்ததில் இருந்தே, மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் சேமித்தாலே, பணி ஓய்வுக்கு பின், கை மேல் பலன் கிடைக்கும். வயது அதிகரித்த பின் சேமிக்க துவங்கினால், தொகையும் அதிகமாக சேமிக்க வேண்டியிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

g.s,rajan
மார் 17, 2024 20:23

In our Country Getting a Good Job with good Salary is Very difficult nowdays for Every one ,only if there is Income one can Survive ,Spend and Save for the Future.


rama adhavan
மார் 17, 2024 16:34

உண்மை. முதுமை என்றாலே தனிமை, வெறுமை. எனவே தன் கையே தனக்கு உதவி. தெரிந்த வரை ஒருவரது கடைசி காலத்தில் நண்பர்களே சொந்தங்களை விட வேகமாக உதவுகிறார்கள். சொத்துக்குத் தான் சொந்தங்கள் வருகிறார்கள்.


Ramesh Sargam
மார் 17, 2024 22:34

சரியாக கூறினீர்கள்.


raghavan
மார் 17, 2024 09:55

பணத்தைவிட நல்ல சொந்தங்களை சம்பாதிக்க வேண்டும். இது ஓரளவு மட்டுமே நம் கையில். நல்ல சுற்றம் அமைவது முன் செய்த கர்மவினைப்படியே அமையும். வெறும் பணம் மட்டுமே கையில் அல்லது சொத்தாக இருப்பது வயதான காலத்தில் இன்னும் ஆபத்தில் முடியும். விஷம் வைத்து கொல்லவும் பண வெறி பிடித்த உறவினர்கள் தயங்க மாட்டார்கள். அப்பேற்பட்ட சொந்தங்களிடமிருந்து விலகிச் சென்று முடிந்தவரை நல்லோர் சூழ வாழ வேண்டும். கடைசி காலம் நிம்மதியாக அமையும்.


குமார்
மார் 17, 2024 17:08

முதுமைக்கான முனேற்பாடு என்பது பணம் சேர்ப்பது ம மட்டும் இல்லை. நமது சமூகத்தில் LKG->UKG->SSLC->Plus two-> Engineering/Medical colleges -> Foreign/ MNC job / Marriage / Kids/ Save Money/Kids college / Their wedding/ retirement வரை பிளான் இருக்கும். ஆனால் retirement இற்கு பிறகு என்ன என்பதை தயார் செய்வதில்லை.


Ramesh Sargam
மார் 17, 2024 08:02

முதுமைக்கான நிதி திட்டமிடல்களை, இளமையிலே துவங்கினால் தான், நாம் வயது முதிர்ந்த பிறகு நமக்கு ஏற்படும் எதிர்பாராத செலவினங்களை சமாளிப்பதோடு, ஒரு சில தறுதலை பிள்ளைகளை (மன்னிக்கவும், ஒரு சில பெற்றோர்களுக்கு பிள்ளைகள் தருதலைகளாக உள்ளனர். ஆகையால் அப்படி குறிப்பிட்டேன்) நம்பி இருக்க தேவையில்லை. பிள்ளைகளை பெற்று அவர்களுக்கு நாம் செய்யவேண்டியவை நல்ல படிப்பு மற்றும் நல்ல அறிவுரைகள், அவ்வளவுதான். அவர்களே நம் தியாகங்களை மதித்து, நாம் வயது முதிர்ந்தவுடன் நமக்கு செய்யவேண்டியதை செய்தால் மிக மிக சந்தோஷம். இல்லையென்றால், அவர்களிடம் இருந்து ஒதுங்கி நாம் சேமித்து வைத்ததில் இருந்து நம் முதுமை காலத்தை ஓட்டவேண்டும். ஏன் இப்படி கூறுகிறேன் என்றால், இந்த காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் முதியோர் இல்லம். அங்கு வசிப்பவர்கள் எல்லாம் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை