உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 2022 - 23ல் மாநில கட்சிகளின் நன்கொடை ரூ.200 கோடி! தி.மு.க., உட்பட 5 கட்சிகளுக்கு கிடைத்தது

2022 - 23ல் மாநில கட்சிகளின் நன்கொடை ரூ.200 கோடி! தி.மு.க., உட்பட 5 கட்சிகளுக்கு கிடைத்தது

புதுடில்லி: மாநில கட்சிகளுக்கு, 2022 - 23ம் நிதியாண்டில், 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான நன்கொடைகள் கிடைத்துள்ளன. இதில், பி.ஆர்.எஸ்., எனப்படும், பாரத் ராஷ்ட்ர சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம், தி.மு.க., - இ.கம்யூ., ஆகிய ஐந்து கட்சிகள், 90.56 சதவீத நன்கொடைகளை பெற்றுள்ளன.அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில கட்சிகளும், ஒவ்வொரு நிதியாண்டிலும் திரட்டிய நன்கொடை விபரங்களை தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்க வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=43dga1dq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட நன்கொடை விபரங்களை ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், 2022 - 23ல் மாநில கட்சிகள் பெற்ற நன்கொடை விபரங்கள், யாருக்கு அதிக வசூல், எத்தனை கட்சிகள் முறையாக விபரங்களை தாக்கல் செய்தன என்பது உள்ளிட்ட விபரங்களை ஏ.டி.ஆர்., வெளியிட்டுள்ளது.முதலிடம்அதன் விபரம்:ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 57 மாநில கட்சிகளில், 18 கட்சிகள் மட்டுமே தங்கள் நன்கொடை விபரங்களை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளன. மொத்தம், 28 கட்சிகள், 2,119 பேரிடம் இருந்து 216.765 கோடி ரூபாய் நன்கொடைகள் பெற்றுள்ளன. பிஜு ஜனதா தளம், ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சிகள் அந்த நிதியாண்டில் நன்கொடைகள் எதுவும் பெறவில்லை. 17 கட்சிகள் நன்கொடை விபரங்களை 2 முதல் 164 நாட்கள் தாமதமாக சமர்ப்பித்துள்ளன.கடந்த, 2022 - 23ல் ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவுக்கு, 3,685 சதவீதமும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு, 1,997 சதவீதமும், தெலுங்கு தேசம் கட்சிக்கு, 1,795 சதவீதமும் நன்கொடை விகிதம் உயர்ந்துள்ளன.  அதிக நன்கொடை வசூலித்த கட்சிகளின் பட்டியலில், தெலுங்கானாவின் பாரத் ராஷ்ட்ர சமிதி முதலிடத்தில் உள்ளது. இக்கட்சிக்கு 154.03 கோடி ரூபாய் கிடைத்துஉள்ளது அடுத்தபடியாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 16 கோடி ரூபாயும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 11.92 கோடி ரூபாயும் கிடைத்துள்ளன. தி.மு.க.,வுக்கு, 7.22 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 7.13 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது பாரத் ராஷ்ட்ர சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம், தி.மு.க., இந்திய கம்யூ., கட்சிகள் அதிகபட்சமான நன்கொடைகளை பெற்றுள்ளன. மொத்த நன்கொடையில், 90.56 சதவீதம் இந்த ஐந்து கட்சிகளுக்கு கிடைத்துள்ளன மொத்த நன்கொடையில் 169 கோடி ரூபாய் பெருநிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. தனிநபர்களிடம் இருந்து 45 கோடி ரூபாய் பெறப்பட்டு உள்ளன  டில்லியில் இருந்து தான் அதிகபட்ச நன்கொடை வழங்கப்பட்டுள்ளன. இங்கிருந்து மட்டும் 107.09 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தெலுங்கானா மற்றும் ஆந்திரா இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தாக்கல்அதோடு பல்வேறு மாநில கட்சிகள், தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ள நன்கொடை விபரங்களில், நன்கொடையாளர்களின் பான் எண், முகவரி உள்ளிட்ட விபரங்கள் இடம் பெறவில்லை. இது போல வெளிப்படை தன்மை இல்லாமல் விபரங்களை சமர்ப்பிப்பது கவலை அளிப்பதாக ஏ.டி.ஆர்., தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
ஜன 11, 2025 11:34

பில்ப்படி திராவிட மாடலுக்கு வந்த நன்கொடை டீ செலவுக்கு கூட போதாது விஞ்ஞானரீதியாக வந்த ஊழல்ப்பணத்தை வைத்துதான் தேர்தல்களில் ஓட்டுக்களை வாங்கி ஜெயிக்கிறது திருட்டு திராவிட மாடல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை