உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமைகளை காக்கும் வரலாற்று சாசனம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமைகளை காக்கும் வரலாற்று சாசனம்

சென்னை : தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட, சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, கவர்னரிடம் நிலுவையில் இருந்த 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.மேலும், கவர்னர், ஜனாதிபதி ஆகியோர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கு வெற்றிக்கு காரணமான, மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, வில்சன் ஆகியோருக்கு, தமிழக அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில், முகுல் ரோஹத்கி தவிர மற்றவர்கள் கலந்து கொண்டனர்.விழாவில், அவர்களுக்கு செங்கோல் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, கவர்னர் என்ற நியமன பதவி வாயிலாக கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு, போட்டி அரசுகளை நடத்த, தொல்லை கொடுக்கின்ற காலத்தில் மிக முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

மகத்தான வெற்றி

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்த்திவாலா, மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பு, தமிழகத்திற்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல. மக்களாட்சிக்கும், மாநில சட்டசபைகளின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப் பெரிய வெற்றி. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வில், மாநில அரசுகளின் உரிமைகளை எக்காலத்திலும் பாதுகாக்கும் வரலாற்று சாசனமாக, இந்த தீர்ப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இது இந்திய மாநிலங்களுக்கு, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பெற்று தந்திருக்கக்கூடிய மாபெரும் விடுதலை.

கூட்டாட்சி இந்தியா

இந்திய அரசியல் உரிமையை, சட்டப்பூர்வமான வாதங்கள் வாயிலாக, தமிழக அரசு முன்வைத்து வாதாடியது. அந்த அறிவார்ந்த வாதங்களுக்கு சொந்தகாரர்களான வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன்.மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற இலக்கை வென்றெடுக்க, இந்த தீர்ப்பு வழிகாட்டி இருக்கிறது. மாநில சுயாட்சியை பெறுவோம். கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

kumarkv
ஏப் 28, 2025 23:09

இதுக்கு ஏன் மூஞ்சியை இவ்வளவு கோணலாக. அதுக்குதான் ஒரு லிட்டர் விளக்கெண்ணை குடிக்ககூடாது.


krishna
ஏப் 28, 2025 21:42

DHINAM ORU URUTTU THARPERUMAI PHOTO SHOOT. ULAGA MAHA KODUMAI.


Ramesh Sargam
ஏப் 28, 2025 21:22

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கள் திமுக அரசுக்கு சாதகமாக இருந்தால் உச்சநீதிமன்றத்தை ஓஹோ என்று புகழ்வார்கள். தீர்ப்புக்கள் திமுக அரசுக்கு எதிராக இருந்தால், பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது, மோடியின் விரல் அசைவில் உச்சநீதிமன்றம் செயல்பாடு உள்ளது என்று இகழ்வார்கள். தலையில் முடியும் இல்லை. தலைக்கு உள்ளே மூளையும் இல்லை.


Tetra
ஏப் 28, 2025 19:40

மார் தட்டிக்கொள்ளும் தீர்ப்பு மேல்முறையீட்டில் பொடியாகப்போகும்


saravan
ஏப் 28, 2025 15:40

செந்தில் பாலாஜி பொன்முடி மற்றும் ஐ பெரியசாமி வழக்குகளா அப்புறம் கதிர் ஆனந்த் நேரு இருக்காங்க வாழ்க தமிழகம்


N Srinivasan
ஏப் 28, 2025 14:45

உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டால் கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன ? காரியம் செய்தால் என்ன?


R Barathan
ஏப் 28, 2025 14:01

மாநிலத்திலும் கூட்டாட்சி இருந்தால் என்ன தவறு. அது என்ன சூத்திரம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி. ஏன் மாநிலத்தில் ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுப்பதில்லை. தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள். திமுக தவறு செய்தால் கூட எதிர்த்து பேச/கேள்வி கேட்க திரானி இல்லை. பகல்காமில் என்ன மதம் என்று கேட்டு சுட்டு கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகளை மதவாதிகள் என்று கூறாமல் பாஜகவை மதவாதிகள் என்று கூறும் திமுக அடிமை விசிக திருமாவை எந்த ஜந்து வில் சேர்ப்பது. இவர்களுக்கு வெற்றி வந்தால் அது தக்காளி சட்னி. அதுவே எதிர்த்து தீர்ப்பு வந்தால் அது ரத்தம். இந்த மாதிரி வெற்றி கொண்டாட்டம் மாபெரும் தவறான முன் உதாரணம். இவ்வாறு செய்வது மத்திய அரசையும் மாநில கவர்னரையும் வெறுப்பேற்றும் செயலாகும். இது எற்க தக்க தில்லை. இதற்கு நீதிமன்றம் தான் தக்க பதில் சொல்ல வேண்டும்.


sridhar
ஏப் 28, 2025 13:54

உள்ளூர் நீதிமன்றத்தில் தினமும் குட்டு வாங்குவது என்ன சாசனம் , சிரசாசனமா


Bharathi
ஏப் 28, 2025 11:06

Game not over yet it has gone for an appeal wait and see then you can celebrate well


Bharath Balasubramanian
ஏப் 28, 2025 08:58

சாதகமாக தீர்ப்பு வந்தால் வாழ்த்து. இல்லை என்றால் கடுமொழி வசவு. வந்தது இறுதி தீர்ப்பு அல்ல.


Senthil
ஏப் 28, 2025 09:21

ஏன் இறுதி தீர்ப்பு வரட்டுமே, பார்ப்போமே என்ன நடக்குதுனு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை