உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பழநியில் திருமாவளவன் காத்திருந்து விஸ்வரூப தரிசனம் செய்த பின்னணி! பவர் கிடைக்கும் என வி.சி.க., தொண்டர்கள் நம்பிக்கை

பழநியில் திருமாவளவன் காத்திருந்து விஸ்வரூப தரிசனம் செய்த பின்னணி! பவர் கிடைக்கும் என வி.சி.க., தொண்டர்கள் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை; பழநி கோயிலில் நேற்றுமுன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விஸ்வரூப தரிசனம் செய்தார். அவருக்கு 'பவர்' கிடைக்கவே காத்திருந்து தரிசனம் செய்ததாகவும், நிச்சயம் 2026 சட்டசபை தேர்தலில் 'பவர்' கிடைக்கும் எனவும் அக்கட்சி நிர்வாகிகள் நம்புகின்றனர்.தி.மு.க., கூட்டணியில் உள்ள வி.சி.க., சமீபகாலமாக ஆட்சியில் பங்கு, திருமாவளவனுக்கு முதல்வராகும் தகுதி உண்டு எனக்கூறி வருகிறது. அதை திருமாவளவனும் ஆமோதித்து வருகிறார். இந்நிலையில் அவர் நவ.,20ல் பழநிக்கு வந்தார். இரவு தங்கியவர் நேற்றுமுன்தினம் அதிகாலை விஸ்வரூப அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை தரிசித்தார். அப்போது அவருக்கு சிலையில் இருந்து வடியும் அபூர்வமான கவுபீகம் தீர்த்தம் வழங்கப்பட்டது. தரிசனம் செய்த திருப்தியுடன் மலைக்கு கீழே வந்தவர், 'பழநியாண்டவரை தரிசிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. இன்று முதல் புள்ளியை துவக்கியுள்ளோம்' என 'பொடி' வைத்து பேசினார்.பழநி முருகனின் விஸ்வரூப தரிசனம் என்பது அதிகாலை நடை திறப்பதற்கு முன், அரைமணி நேரத்திற்கு முன்னதாக சுவாமி வெள்ளை நிற ஆடையுடன் மட்டுமே காட்சித்தருவார். இதை 'ஆண்டி கோலம்' என்பர். உள்ளூர் மக்கள் இதை 'விஸ்வரூப தரிசனம்' என்கிறார்கள். ஏனெனில் இந்த அலங்காரத்தில் முருகனை தரிசிக்கும்போது 'பவர்' கிடைக்கும் என நம்புகிறார்கள். முருகனை தரிசித்தவுடன் சிலையை வடிவமைத்த போகர் சித்தர் மற்றும் புலிப்பாணி ஆசிரமத்தில் தரிசனம் செய்தால் 'பவர்புல்' நபராக மாற அதிக வாய்ப்புள்ளதாக திருமாவளவனுக்கு நெருக்கமான சிலர் கூறியதை தொடர்ந்தே அவர் பழநிக்கு வந்துள்ளார்.அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகளுக்கு தரும் முக்கியத்துவம் எங்களுக்கு தருவதில்லை. இன்னும் எங்களை 'இரண்டாம் இடத்தில்'தான் வைத்துள்ளனர். எங்களுக்கென்று ஓட்டு வங்கி உள்ளது. லோக்சபா தேர்தலில் கணிசமான ஓட்டுகளை பெற்றோம். தி.மு.க., போட்டியிட்ட இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற எங்களது ஓட்டு வங்கியும் காரணம். கூட்டணி தர்மத்திற்காக பொறுமை காத்து வருகிறோம். திருமாவளவனும் 'முதல்வர் கனவு எனக்கும் உண்டு' என தெரிவித்துள்ளதால் 2026 சட்டசபை தேர்தலின்போது அப்போதைய சூழலை பொறுத்து பேச்சுவார்த்தை அமையும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

krishnamurthy
நவ 23, 2024 21:23

முருகா இந்த நாட்டை காப்பாற்று


Dharmavaan
நவ 23, 2024 18:41

இந்த ஏமாற்று பேர்வழியை கபட புத்தியை ஹிந்துக்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும் ஒட்டு போட கூடாது.


Dharmavaan
நவ 23, 2024 18:39

மானம் கெட்ட குருமா .பதவிக்காக எதையும் செய்யும்,கிடைத்துவிட்டால் அந்த ஹிந்து கடவுளையே தூற்றுவார்


caster
நவ 23, 2024 17:57

Such a lier, selfish , double standard guy who does caste politics for his survival and to make money and fame


குமரி குருவி
நவ 23, 2024 16:38

தேர்தல் தரும் பயம் சனா தனம் தரப்போகும் சரிவு பழனிக்கு ஓட வைத்துள்ளது....திருமா வை


Palanisamy T
நவ 23, 2024 14:30

Power கிடைக்குமென விசிக தொண்டார்கள் நம்பிக்கை பகுத்தறிவு பேசும் தொண்டர்களிடம் பணிவன்போடு கேட்பதெல்லாம் இந்த நம்பிக்கை மட்டும் மூட நம்பிக்கையில்லையா? இப்போது எங்கே போனது உங்களின் பகுத்தறிவு சிந்தனை?


venkates
நவ 23, 2024 14:23

கடவுள் முருகனை ஏளனமாக பேசியபோது ,பாடிய போது கண் தெரியவில்லையா ?? தமிழரே யாரை ஏமாற்றுகிறார்? கடவுள் முருகன் பக்தர் வழி செய்வராவ்.


Shunmugham Selavali
நவ 23, 2024 13:32

இந்து கோவில்களை பழித்து ஊளையிடுவது, பின்பு சூடு சொரனை இல்லாமல் கோவில் வாசலில் கையேந்துவது. பச்சோந்தி.


raja
நவ 23, 2024 11:57

இந்த யோக்கியவான் தான் அசிங்கமான சிலைகள் உள்ளது கோவில் என்ற விளக்கத்தை சொன்னார்? ஹிந்து விரோத போக்கை வைத்துக்கொண்டு எப்படித்தான் இப்படியெல்லாம் நடிக்கிறார்களோ இவர்களையும் திருந்தாத ஜென்மங்கள் நம்புகின்றனர்..


Nandakumar Naidu.
நவ 23, 2024 10:57

இந்த ஹிந்து விறோதியை யார் உள்ளே விட்டது. துரத்தி அடித்திருக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை