உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தெரு நாய்களை கட்டுப்படுத்தும் விவகாரம்; மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்பார்ப்பு

தெரு நாய்களை கட்டுப்படுத்தும் விவகாரம்; மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்பார்ப்பு

திருப்பூர்: தெரு நாய்களை கட்டுப்படுத்தும் விவகாரத்தில், மத்திய அரசு சரியான கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை, விவசாயிகள் முன்வைக்கின்றனர்.'நாட்டில், கடந்தாண்டு (2024) 22 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர்' என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் ஆடு, கோழி, மாடு ஆகியவற்றையும் தெரு நாய்கள் கடிக்கின்றன.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தெரு நாய்களின் கடிக்கு பலியான ஆடு, கோழிகளின் எண்ணிக்கை ஏராளம்.'நாய்கடிபட்டு இறக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற விவசாயிகளின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து, மாநில அரசு, நாய் கடிபட்டு இறக்கும் ஆடுகளுக்கு, 6,000 ரூபாய், கோழிகளுக்கு, 200, மாடுகளுக்கு, 37,500 ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அரசாணைக்கு விவசாயிகள் காத்துள்ள நிலையில், தெரு நாய்கள் விவகாரத்தில் நாடு முழுக்க நிலவும் பிரச்னைக்கு, தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.விலங்குகளுக்காக ஏ.பி.சி., எனப்படும் விலங்கு கருத்தடை, பிராணிகள் நல வாரியம் உள்ளிட்டவை மத்திய அரசின் கண்காணிப்பில் இருப்பதால், தெருநாய்கள் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் வெள்ளகோவில் பி.ஏ.பி., கிளைக்கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:மாநில அரசு இழப்பீடு அறிவித்தது வரவேற்கத்தக்கது.அரசாணை வெளியிடுவதற்கு முன், எங்களின் எதிர்பார்ப்பை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். விலங்கு கருத்தடை திட்டம், விலங்கு நல வாரியம், பிராணிகள் வதை தடுப்புச்சட்டம் என, விலங்குகள் நலன்சார்ந்த சட்ட திட்டங்களை கையாளும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது என்ற நிலையில், இவ்விவகாரத்தில் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை என்பது ஏற்புடையதல்ல; அதற்கான கட்டமைப்பு, மருத்துவர்கள் போதியளவில் இல்லை.மாறாக, தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கேற்றவாறு, மத்திய அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என, மத்திய கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோரை சந்தித்து முறையிட உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Bhaskaran
மார் 26, 2025 09:07

இதுங்க பேரை சொல்லி நல்லா சாப்பிடலாம்


எவர்கிங்
மார் 25, 2025 18:46

மாநில அரசின் இயலாமையை திசை திருப்புறாங்க


Ramesh Sargam
மார் 25, 2025 18:39

தெரு நாய்களை கூட கட்டுப்படுத்தலாம். ஆனால் சென்னையில் சுற்றித்திரியும் அந்த ரெண்டு கால் காமுக நாய்களை யார் கட்டுப்படுத்துவார்கள்?


என்றும் இந்தியன்
மார் 25, 2025 16:17

தன் இனத்தவர் ஆதலால் ரூ 4500 கோடி திமுக அரசியல் வியாதிகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது தெருநாய்களால்


Kulandai kannan
மார் 25, 2025 13:04

இவ்விஷயத்தில் ஸ்டாலின் மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டி,/டீ, பஜ்ஜி, பிஸ்கட் சாப்பிடலாம்.


கார்த்திக்
மார் 25, 2025 09:54

இழப்பீடு மற்றும் பராமரிப்பு செலவை விலங்கு நல ஆர்வலர்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.


அப்பாவி
மார் 25, 2025 09:27

ஒருத்தன் ஒரு பொறையை நாயிடம் காட்டி தோ தோ ந்னானாம். அந்த நாய்க்கு இந்தி தெரியும்.போலிருக்கும் ஒரு பொறையைக் காட்டி ஏக் ஏக் நு சொல்லாம ஏமாத்தறியான்னு கடிச்சிருச்சாம். அது மாதிரி இருக்கு இவிங்க சப்பக்கட்டு.


Rama Meiappan
மார் 25, 2025 08:43

ஆஸ்திரேலியாவில் இது போல கங்காரு ஜனத்தொகை அளவுக்கு அதிகமாக வளர்ந்த பொழுது அதிகபட்ச கங்காருகளை நெற்றியில் சுட்டு கொன்றார்கள். கங்காருவை விட மனிதர்கள் வாழ்க்கை மேலானது என்ன நினைத்தார்கள் நமது நாட்டில் அரசியல்வாதிகள் வாங்கும் லஞ்சத்திற்கு ஏற்ப மனிதர்களை விட நாய்கள் வளர்ச்சி நல்லது என்று நினைக்கிறார்கள்


அப்பாவி
மார் 25, 2025 08:12

இதுக்கு மட்டும் மத்திய அரசுக் கொள்கை எதிர்பாக்குறாங்களாம். கட்டிங், வெட்டிங், கமிஷன், மும்மொழிஎதிர்ப்பு இதுக்கெல்லாம் யார் தயவும் தேவையில்லியாம்.


நாஞ்சில் இந்தியன்
மார் 25, 2025 07:53

விலங்கு நல ஆர்வலர்கள் எல்லோரும் AC வாகனத்தில் செல்கின்றனர். ஒரு மாதம் ஊருக்குள் நடந்து சென்று பாருங்கள், அப்போ தெரியும் தெரு நாய்களின் தொல்லை. அது போகட்டும் தெரியாமல்தான் கேட்கிறேன் நாயை விட சாதுவான ஆடு முதலான விலங்குகள் இறைச்சிக்காக, தினமும் லட்சக் கணக்கில் கொல்லப்படுகிறது. அதை கண்டு கொள்ளாத விலங்குகள் அமைப்பு, நாய்க்கு மட்டும் கரிசனம் காட்டுவது ஏன்... எல்லாம் உயிர்தானே... கொஞ்சம் சிந்தியுங்கள்...பிளீஸ்...


முக்கிய வீடியோ