உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., கூட்டணியில் 25 சீட் : திருமாவளவன் அடுத்த மூவ்

தி.மு.க., கூட்டணியில் 25 சீட் : திருமாவளவன் அடுத்த மூவ்

தி.மு.க., கூட்டணியில், 25 தொகுதிகள் பெற, விடுதலை சிறுத்தைகள் கட்சி இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், சிதம்பரத்தில் நேற்று நடந்த விழாவில், முதல்வர் முன்னிலையில் பேசிய திருமாவளவன், ''தி.மு.க., வாங்குகிற, 4 ஓட்டுகளில் ஒன்று வி.சி., ஓட்டாக இருக்கும்,'' என, தன் இலக்கை இலைமறை காயாக சுட்டிக்காட்டினார்.கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், திருப்போரூர், நாகப்பட்டினம், காட்டுமன்னார் கோவில், செய்யூர், வானுார், அரக்கோணம் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளில், வி.சி., போட்டியிட்டு, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

சிறுத்தை ஓட்டு

கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர். இரண்டு தேர்தல்களிலும் பெற்ற வெற்றியால், வரும் சட்டசபை தேர்தலில், 'சீட்' பெற, அக்கட்சியினரிடம் ஆர்வமும் போட்டியும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளையபெருமாள் நுாற்றாண்டு அரங்கத்தை, சிதம்பரத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் திருமாவளவன் பேசுகையில், ''வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு விழுகிற 4 ஓட்டுகளில், ஒரு ஓட்டு வி.சி., ஓட்டாக இருக்கும். ''நுாறு ஓட்டுகளில், 25 ஓட்டுகள் சிறுத்தைகள் ஓட்டாக இருக்கும். ஒரு ஓட்டு கூட சிந்தாமல் சிதறாமல், தி.மு.க., கூட்டணிக்கு கொத்துக்கொத்தாக விழும் அளவில் பணியாற்றுவோம். தி.மு.க., ஆட்சி மீண்டும் மலருவதற்கு பாடுபடுவோம்,'' என்றார்.

இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக, வட மாவட்டங்கள் மட்டுமல்லாமல், தென் மாவட்டங்களிலும் வி.சி., வளர்ந்துள்ளது. கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் கட்சி துவக்கப்பட்டுள்ளது. வெளி மாநில சட்டசபை தேர்தலிலும் வி.சி., போட்டியிட்டுள்ளது.திருமாவளவன் சுற்றுப்பயணத்தின்போது, மாவட்டச்செயலர்கள் மட்டுமல்லாமல், ஒன்றியச் செயலர்களும் 'சீட்' கேட்டு, அவருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தவர்களும், 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களும், வரும் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர். அவர்களை தவிர, மாநில, மாவட்ட நிர்வாகிகளும் வாய்ப்பு கேட்பதால், இந்தமுறை தி.மு.க., கூட்டணியில், 25 தொகுதிகளை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் திருமா உள்ளார். அதற்காக, அந்த எண்ணிக்கையையே இலக்காக நிர்ணயித்துள்ளார்.

கணிசமான ஓட்டு

அதை சுட்டிக்காட்டும் வகையிலேயே, சிதம்பரத்தில் நடந்த விழாவில், முதல்வர் முன்னிலையில், 'தி.மு.க., பெறும் நான்கு ஓட்டுகளில் ஒன்று வி.சி., கட்சிக்கு உரியது' என பேசியுள்ளார். தமிழகம் முழுதும் கணிசமாக ஓட்டுகளை வைத்திருக்கிற பெரிய கட்சியாக, வி.சி., உள்ளதால், சட்டசபை தேர்தலில், அதிக சீட்டுகளை எதிர்பார்க்கிறோம் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Thiyagarajan S
ஜூலை 22, 2025 07:38

தொகுதிகளை அதிகப்படுத்தி கேட்பதற்கு திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு மட்டுமே தகுதி உண்டு. திமுகவிற்கு அடுத்தபடியாக ஆக்டிவாக உள்ள கட்சி திருமாவளவன் கட்சி மட்டுமே எனவே திருமாவளவன் 25 தொகுதிகள் கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. நிச்சயமாக திமுகவின் வெற்றிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓட்டுக்கள் மிகவும் முக்கியமானவை எனவே ஸ்டாலின் திருமாவளவன் கோரிக்கையை நிச்சயமாக பரிசீலனை செய்வார்... செய்ய வேண்டும்....


Anand
ஜூலை 17, 2025 15:59

காங்கிரஸ் ஓடு மத்தியில் சேர்ந்து இருந்தால் மல்லிகார்ஜுன கார்கே போல இருந்திருக்கலாம். பிஜேபி ஓடு இருந்தால் கூட எல். முருகனை போல முன்னேற்றம் இருந்திருக்கும். திருமால்வளவனை சிறுமை படுத்துகின்ற கட்சியோடு சேர்ந்து இருந்தால் வைகோ போல திமுக விக்கு பம்பரமாய் சுற்றி உழைத்து பிறகு காணாமல் போய் விடுவார்.


UTHAYA KUMAR
ஜூலை 17, 2025 13:54

8 கிடைக்கதே சிரமம். ஒட்டுண்ணி போல ஒரு கட்சி .


Kudandhaiyaar
ஜூலை 16, 2025 22:20

12 சீட் கிடைக்க வாய்ப்பு . அதில் அவர் 12 வெற்றி பெற்றால் தன அவருக்கு எம் பி கிடைக்க வாய்ப்பு. 12 சீட் வெற்றி பெறுவாரா.


Balasubramanian
ஜூலை 16, 2025 20:31

திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்கிறார் முதல்வர்! இவரோ நாலில் ஒன்று விசிக வினால் என்கிறார்! ஐம்பது தொகுதிகளில் திமுக வெற்றி பெற காரணமாக இருக்கும் இவர் கேட்பது என்னவோ வெறும் 25 தொகுதிகள்! சரியான ஆடி தள்ளுபடி! அப்படியே போட்டு அமுக்குங்க தலைவரே! மிச்சம் மீதிககு ஆட்சியில் பங்கு கேட்பாரோ என்கிற கவலை வேண்டாம்! ஜெயித்தால் பார்த்துக் கொள்ளலாம்!


Ramesh Sargam
ஜூலை 16, 2025 19:35

திருமாவுக்கு 25 பிளாஸ்டிக் சீட் கூட கிடைக்காது.


Subburamu Krishnasamy
ஜூலை 16, 2025 19:06

That means 234 divided by four seats So they are aiming for 58 to 59 seats. Welcome move by Thiruma. Please keep it up your demand. Your party deserves it.


வண்டு முருகன்
ஜூலை 16, 2025 19:02

தலைவரே நீங்க 200 சீட்டு கேளுங்க தலைவரே. நம்மால் தான் அவங்க ஜெயிக்கிறாங்க. நம்மள நம்பித்தான் அவனுங்க இருக்கானுங்க. நீங்க தைரியமா கேளுங்க தலைவரே.


T.sthivinayagam
ஜூலை 16, 2025 15:49

பாஜாகா அதிமுகா கூட்டணியில் பாமாகாவிற்கு துணை முதல்வர் பதவி தர நைனார் நாகேந்திரன் முன்மொழிய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


vivek
ஜூலை 16, 2025 16:25

நீ திமுகவுக்கு மட்டும் சொம்பு தூக்கு சிவநாயகம்


visu
ஜூலை 16, 2025 17:08

துணை முதல்வர் என்பது அங்கீகாரமற்ற பதவி சேரும் எல்லா கூட்டணிக்கட்சிக்கும் ஆளுக்கு ஒன்று கூட கொடுக்கலாம் அதனால் என்ன நட்டம்


theruvasagan
ஜூலை 16, 2025 15:43

234 ல் 25 சதவிகிதம் என்றால் 58 சீட் குடுக்கணும். அப்புறம் அதே விகிதத்தில் மந்திரிசபையில் பங்கு. இந்த ரெண்டு கண்டிஷனுக்கும் ஒத்துகிட்டாதான் கூட்டணி கழித்தலணி எல்லாம் என்று கறாராக சொல்லிடுங்க.