உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூடுதல் நிதி ஒதுக்கவே இந்த ரூ.1,000 அட்வான்ஸ்! : சொல்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்

கூடுதல் நிதி ஒதுக்கவே இந்த ரூ.1,000 அட்வான்ஸ்! : சொல்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ரயில்வே திட்டங்களுக்கு தலா ரூ.1,000 ஒதுக்குவது ஏன் என்பது குறித்து, ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி என்பது குறித்த பட்டியலை, 'பிங்க்' புத்தகத்தில், ரயில்வே வாரியம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீபெரும்புதுார் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, அத்திப்பட்டு - புத்துார், ஈரோடு - பழநி, சென்னை - கடலுார் - புதுச்சேரி உள்ளிட்ட புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு தலா 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது பயணியர் மத்தியில், ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

ரயில்வேயில் பல்வேறு திட்டங்களுக்கு தலா, 1,000 ரூபாய் ஒதுக்குவது என்பது புதியது அல்ல. தமிழகம் மட்டுமல்ல, கர்நாடகா, உத்தர பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, பீஹார் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், சில திட்டங்களுக்கு தலா, 1,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் முடக்கப்படவும் இல்லை; முழுமையாக கைவிடப்படவும் இல்லை,அடுத்த பட்ஜெட்டுக்கு கொண்டு செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் தான் இந்த தொகை ஒதுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்ட சில திட்டங்களுக்கு, இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கி, செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.எனவே, அடுத்தடுத்து வரும் பட்ஜெட்டில், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவதற்கான, 'அட்வான்ஸ்' தான் அந்த 1,000 ரூபாய். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

edward
ஆக 25, 2024 09:36

9. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி 17.2 கி.மீ கடந்த ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்: 2024-25- 56.88 லட்சங்கள் 2023-24 - 385.90 கோடிகள் 2021-22- 75 கோடிகள் 2020-21- 2.70 கோடிகள் 2019-20- 1000 ரூபாய்


edward
ஆக 25, 2024 09:36

8. மொரப்பூர் - தர்மபுரி 36 கி.மீ - கடந்த ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்: 2024-25 - 49.78 கோடிகள் 2023-24 - 100 கோடிகள் 2021-22- 1000 ரூபாய் 2020-21- 1000 ரூபாய் 2019-20- 10 லட்சங்கள் 2018-19- 1 கோடி 2017-18- 10 லட்சங்கள்


edward
ஆக 25, 2024 09:35

7. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஈடுங்காட்டு கோட்டை ஆவடி வழியாக கூடுவாஞ்சேரிக்கு புதிய ரயில் வழித்தடம் 60 கி.மீ :- கடந்த ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்: 2024-25 - 1000 ரூபாய் 2023-24 - 57.99 கோடிகள் 2021-22- 1000 ரூபாய் 2020-21- 10 லட்சங்கள் 2019-20- 20 லட்சங்கள் 201-19- 50 லட்சங்கள் 2017-18- 10 லட்சங்கள்


edward
ஆக 25, 2024 09:35

6. மதுரை - தூத்துக்குடி வழி அருப்புகோட்டை 143.5 கி.மீ கடந்த ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்: 2024-25 - 18.72 கோடிகள் 2023-24 -114 கோடிகள் 2022-23 - 55 கோடிகள் 2021-22- 20 கோடிகள் 2020-21- 1000 ரூபாய் 2019-20- 30 கோடிகள் 2018-19- 20 கோடிகள் 2017-18- 100 கோடிகள்


edward
ஆக 25, 2024 09:35

5. சென்னை - மகாபலிபுரம் - கடலூர் துறைமுக சந்திப்பு புதிய ரயில் பாதை 178.28 கி.மீ :- கடந்த ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்: 2024-25 - 1000 ரூபாய் 2023-24 - 50 கோடிகள் 2022-23 - 66 லட்சங்கள 2021-22- 1000 ரூபாய் 2020-21- 1000 ரூபாய் 2019-20- 10 லட்சங்கள் 2018-19- 101 கோடிகள் 2017-18- 10 லட்சங்கள்


edward
ஆக 25, 2024 09:35

4. ஈரோடு - பழநி புதிய ரயில்வழித்தடம் 91.05 கி.மீ :- கடந்த ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்: 2024-25 - 1000 ரூபாய் 2023-24 - 50 கோடிகள் 2022-23- ஐந்து லட்சங்கள் 2021-22- 1000 ரூபாய் 2020-21- 1000 ரூபாய் 2019-20- 10 லட்சங்கள் 2018-19- 10 லட்சங்கள் 2017-18- 10 லட்சங்கள்


edward
ஆக 25, 2024 09:34

3. அத்திப்பட்டு - புத்தூர் கடந்த ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம் 88.30 கி.மீ : 2024-25 - 1000 ரூபாய் 2023-24 - 50 கோடிகள் 2022-23- 1000 ரூபாய் 2021-22- 1000 ரூபாய் 2020-21- 1000 ரூபாய் 2019-20- 2 கோடிகள் 2018-19- 6 கோடிகள் 2017-18- 5 லட்சங்கள்


edward
ஆக 25, 2024 09:34

2. திண்டிவனம் -நகரி புதிய ரயில் வழித்தடம் 180 கி.மீ :- கடந்த ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்: 2024-25- 153.27 கோடிகள் 2023-24 - 200 கோடிகள் 2022-23- 1000 ரூபாய் 2021-22- 1000 ரூபாய் பெப்ரவரி 2020-21- 1000 ரூபாய் 2019-20- 7.87 கோடிகள் 2018-19- 10 கோடிகள் 2017-18- 47 கோடிகள்


edward
ஆக 25, 2024 09:34

1. திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை புதிய யில் வழித்தடம் 70கி.மீ கடந்த ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்: 2024-25 1000 ரூபாய் 2023-24 50 கோடிகள் 2022-23- 1000 ரூபாய் 2021-22- 1000 ரூபாய் 2020-21- 1000 ரூபாய் 2019-20- 10 கோடிகள் 2018-19- 10 கோடிகள் 2017-18- 19 கோடிகள்


edward
ஆக 25, 2024 09:34

தமிழ்நாட்டில் நடைபெறும் 10 புதிய இருப்பு பாதை அமைக்கும் திட்டங்கள், 3 அகல பாதையாக மாற்றும் திட்டங்கள், 9 இருவழி பாதை திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டங்களுக்கு மொத்தம் 33, 467 கோடிகள் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 872 கி.மீ தொலைவில் 10 புதிய இருப்புபாதை திட்டங்களுக்கு தேவையான நிதி 14,669 கோடிகள் ஆகும். தமிழ்நாட்டில் 967 கி.மீ தொலைவிற்கு 09 இருவழி பாதை திட்டங்களுக்கு தேவையான நிதி 13,381 கோடிகள் ஆகும். தமிழ்நாட்டில் மூன்று இருப்பு பாதைகள் அகல பாதையாக மாற்றும் திட்டம் 748 கி.மீ நடைபெற்று வருகிறது. இந்த திட்டங்களில் மொத்த தேவை 5417 கோடிகள் ஆகும். இந்த திட்டத்தில் 604 கி.மீ பணிகள் முடிவு பெற்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 144 கி.மீ பணிகள் நடைபெற்று வருகிறது.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை