உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இன்றைய அ.தி.மு.க., அமித் ஷா அ.தி.மு.க.,வாக மாறி வருகிறது: காங்., - எம்.பி.,

இன்றைய அ.தி.மு.க., அமித் ஷா அ.தி.மு.க.,வாக மாறி வருகிறது: காங்., - எம்.பி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநகர்: ''சமீப காலமாக அ.தி.மு.க., அமித் ஷா அ.தி.மு.க.,வாக மாறி வருகிறது. விரைவில் பா.ஜ., உடன் அ.தி.மு.க., இணைப்பு விழா நடக்கும்'' என விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார். மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி: பார்லிமென்ட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதுவரை துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படவில்லை. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், நான்கு முறை பேச வாய்ப்பு கேட்டும், அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. பா.ஜ., தலைவர் அண்ணாமலை, '100 நாட்கள் வேலை திட்டத்தில் முறைகேடு' என்கிறார். அத்திட்ட பயனாளர்களை நேரில் சந்தித்தால்தான், அவர்களது நிலை அண்ணாமலைக்கு புரியும். இத்திட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு நான்கு மாதங்களாக மத்திய அரசு சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து அண்ணாமலை பேசாதது ஏன்? தமிழகத்திற்கு பா.ஜ., அரசு செய்யும் துரோகங்கள் அ.தி.மு.க., தலையில்தான் விழும். மக்கள் அ.தி.மு.க.,வைதான் தண்டிக்கப் போகின்றனர். ராமேஸ்வரம் விமான நிலையம் அறிவிப்போடு நின்று விடக்கூடாது. அதற்கான பணிகள் விரைவில் துவக்கப்பட வேண்டும். சமீப காலமாக அ.தி.மு.க., அமித் ஷா அ.தி.மு.க.,வாக மாறி வருகிறது. விரைவில், பா.ஜ., உடன் அ.தி.மு.க., இணைப்பு விழா நடக்கும். த.வெ.க., விரைவாக வளர்ந்து வருகிறது. அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து வந்தவர்களும் இனி அக்கட்சிக்கு ஓட்டளிக்காமல் வேறு பக்கம் நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. அ.தி.மு.க., கடைசி காலத்தை நெருங்கி வருகிறது. எம்.ஜி.ஆர்., வளர்த்தெடுத்த கட்சி, அமித் ஷாவால் அழிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

RAMESH
மார் 31, 2025 22:23

தனித்து நின்றால் ஒரு தொகுதியில் டெபாசிட் பெற முடியாது.....பேச்சை பாரு...


Sarachandran Harikrishnan
மார் 31, 2025 19:51

Tmk அடிமை


Murugesan
மார் 30, 2025 23:37

திமுகக்காரன் உருப்படாத திருட்டு அயோக்கியனுங்க


Pollachi tamilan
மார் 30, 2025 22:54

இவரை பாராளுமன்றதிற்கு அனுப்பியவர்களை எத கொண்டாவது அடிக்க வேண்டும்..


sankaranarayanan
மார் 30, 2025 21:31

இன்றைய அ.தி.மு.க., அமித் ஷா அ.தி.மு.க.,வாக மாறி வருகிறது: காங்., - எம்.பி., மாணிக்கம் தாக்கூர் சொல்வது சரி அல்ல காங்கிரசு என்றோ திமுகவின் அடிமையாகி தலையாட்டும் பொம்மையாகவே இருந்து வருகிறது காங்கிரசுக்கு என்றும் திராவிடத்தில் சொல்லும்படியாக எந்த செயலும் இல்லை. அது திமுகவின் கொத்தடிமையாகும் .தனக்கென்று ஒரு கொள்கையே கிடையாது .இது ஊரறிந்த உண்மை...


sankaranarayanan
மார் 30, 2025 21:24

இன்றைய அ.தி.மு.க., அமித் ஷா அ.தி.மு.க.,வாக மாறி வருகிறது என்று கூறிய காங்., - எம்.பி. மாணிக்கம்தாகூரின் அவர்களே மாறினால் உமக்கு ஏனய்யா வயிற்றெரிச்சல். காங்கிரசு மட்டும் என்ன திமுகவுடன் கொஞ்சி குலாவி ஆட்டம் போடுவது இல்லையா தி.மு.க. தலைவர் என்ன சொன்னாலும் தலையாட்டும் பொம்மையாக இருந்து கொண்டு மற்றவர்களை ஏளனமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.


0 அப்பாவி
மார் 30, 2025 14:27

முதலில் உங்கள் கட்சி எந்த நிலையில் உள்ளது என்று யோசித்து விட்டு மற்ற கட்சியை குறை கூறவும் உங்கள் தலைவர் காமராஜர் ஆட்சி என்றாரே அதைவிட ஒன்றும் இது கேவலம் இல்லை


Haja Kuthubdeen
மார் 30, 2025 14:26

அஇஅதிமுக பற்றி இவனுங்க கருத்து கூற தகுதியே இல்ல...திமுக கொத்தடிமையா இருந்து கொண்டு எகத்தாலம்...


குமரன்
மார் 30, 2025 14:09

அதிமுக பிஜேபி யாக மாறுவது ஒருபுறம் இருக்கட்டும் அவர்கள் பார்த்து கொள்வர் காங்கிரஸ் முஸ்லிம் லீக்காக மாறிவிட்டது அதையும் கொஞ்சம் சொல்லுங்கள்


மங்களாம்பாள்
மார் 30, 2025 13:19

இவர் தொகுதியிலுள்ள திருப்பரன்குன்றம் ரயில்நிலையத்தில் இரண்டாவது பிளாட்பாரத்திற்குச் செல்ல பாலத்தில் ஏறி செல்ல வேண்டும். முதியவர்களும், உடல் உபாதை உள்ளவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆக்கபூர்வமான பணிகளில் இவர் என்றுமே அக்கரைப்படுவதில்லை. மற்றவர்கள் முதுகில் எவ்வளவு அழுக்கு இருக்கிறது என்பதே இவரது அக்கறை. பராளுமன்றத்திலும் இவருடைய செயல் பாடு மிகக் குறைவு. தன் கட்சி தலைவர்களிடம் நல்ல பெயர் வாங்குவது ஒன்றே இவர் பணி. ஏன் இவர் ரயில்வே அமைச்சரை சந்தித்து ரயில் நிலையங்களில் மின் தூக்கி அமைக்க நிர்பந்திக்கக்கூடாதா? இவரும் யாரோ எழுதிக்கொடுப்பதை தவறுகளுடன் வாசிப்பதை பல முறை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை