உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இரு துணை முதல்வர்கள்? தி.மு.க.,வில் ஆலோசனை

இரு துணை முதல்வர்கள்? தி.மு.க.,வில் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'தி.மு.க.,வில், இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என பிரித்து, 117 மாவட்ட செயலர்களை நியமிக்கலாம்' என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பு குழுவில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vdz05na0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கான, தி.மு.க., ஒருங்கிணைப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.மொத்தமுள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் என, மொத்தம், 117 மாவட்ட செயலர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதியின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப, வேகமாக செயல்படக் கூடியவர்களை மாவட்ட செயலர்களாக நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், அமைச்சர் உதயநிதியுடன் சேர்த்து, துரைமுருகனுக்கும் துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்தும்,கட்சி மேலிடம் ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, துரைமுருகனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ''துணை முதல்வர் பதவி கொடுத்தால், யார்தான் வேண்டாம் என்பர். நிர்வாகத்தில் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்ற ஒன்று உள்ளது. கூட்டு மந்திரி சபையாகவே இயங்குகிறோம். தலைவர் என்ன முடிவு எடுத்தாலும், சாதகமாகவே செயல்படுவோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Sargam
ஜூலை 23, 2024 18:03

பதவிகள் வேறு. ஆனால், பணி ஒன்றே… ஆம் ஊரை கொள்ளையடிப்பது. அவரவர்கள் “தகுதிக்கு” ஏற்ப கொள்ளையடித்து” கொல்லலாம்


Govindarajan Somasundaram
ஜூலை 23, 2024 16:56

கண்துடைப்பு. உதயநிதியை உதவி முதல்வர் ஆக்குவதை மக்கள் எதிர்ப்பதால் இப்படி ஒரு யோசனை. திமுக வில் ஜனநாயகம் இருப்பதை நிரூபிக்க ஸ்டாலினை விட மூத்த அரசியல்வாதி துரைமுருகனை ஒரே துணை முதல்வராக ஆக்குவாரா இன்றைய முதல்வர்?


ஆரூர் ரங்
ஜூலை 22, 2024 21:01

இரண்டு வைத்துக் கொள்வது தலைவர் காட்டிய வழியில்லையா?


Delhi Balaraman
ஜூலை 22, 2024 16:47

மா செ க்கள் கட்சி தலைமையை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறைப்படி சட்ட மன்ற உறுப்பினர்கள் தான் முதல்வர் மற்றும் துணை முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும்.


Ethiraj
ஜூலை 22, 2024 13:08

Senior MLA s are not competent like Uday. There is reservation policy for CM post Social justice only ex CM family can occupy


venugopal s
ஜூலை 22, 2024 12:58

வாழைப்பழம் வேண்டாம் சொல்லுமா?


Kuppan
ஜூலை 22, 2024 12:50

இப்படித்தான் செய்திகளை பரப்பி பரப்பி கட்சிக்குள் கொண்டுவந்து இளைஞர் அணி தலைவர் பின் துணை முதல்வர் சென்னை மேயர் கட்சி தலைவர் முதல்வர் என்று வேறு யாரையும் அந்த இடத்துக்கு நினைத்து பார்க்க கூட முடியாமல் தொடர்ந்து ஊடக கூலிபான்களை வயித்து செய்தி பரப்பி கட்சியை பிடித்தார் அதே பாணியில் தன் மகனுக்கும்.


elavarasan rajagopal
ஜூலை 22, 2024 12:21

It is better to give Deputy CM post only to Mr Udayanithi if it necessary, Mr DuraiMurugan is not not sui for any post because his age and knowledge factor.


மோகனசுந்தரம்
ஜூலை 22, 2024 12:01

பார்ப்பதற்கு ஒரு மூஞ்சியும் சரியில்லையே. அதுக்கு இவனுங்க சரிப்பட்டு வர மாட்டானுங்க. வடிவேலு காமெடி.


மோகனசுந்தரம்
ஜூலை 22, 2024 12:00

அதுக்கு இவனுங்க சரிப்பட்டு வர மாட்டானுங்க. வடிவேலு காமெடி.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை