உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது: விஜய் மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய போலீஸ் உத்தரவு

சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது: விஜய் மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய போலீஸ் உத்தரவு

மதுரை: மதுரையில் ஆக., 21ல் நடக்கும் தமிழக வெற்றிக் கழக இரண்டாவது மாநில மாநாட்டில், 'சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது. ஜாதி, மத மோதலை துாண்டும் விதமாக பேசக்கூடாது' என்பது உட்பட 27 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். 'மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார்' என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர், தி.மு.க., அரசை விமர்சித்து பேசக்கூடாது என்பதற்காகவே, இப்படி நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாக த.வெ.க.,வினர் கூறுகின்றனர். மதுரை பாரபத்தியில் ஆக., 21ல் த.வெ.க., இரண்டாவது மாநில மாநாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் இரவு, பகலாக நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம், 27 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்தனர். நிபந்தனைகள் விபரம் l மாநாட்டிற்கு வருபவர்கள் மதியம் 3:00 மணிக்குள் திடலுக்கு வர வேண்டும் l யார் தலைமையில் வருகின்றனர் என்ற விபரத்தை போலீசிற்கு தெரிவிக்க வேண்டும் l மாநாட்டு வளாகத்தில் பாதைகள் மேடு, பள்ளமாக இருக்கக்கூடாது l விஜய் வந்து செல்லும் வழியில் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். l கொடி, அலங்கார வளைவு, பேனர், பட்டாசுகள் போன்றவற்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அதை தவிர்க்க வேண்டும் l மாநாட்டிற்கு வரும் போதும், செல்லும் போதும் ஊர்வலமாக செல்லக்கூடாது l நெடுஞ்சாலையிலும், அதன் இருபுறமும் பேனர், அலங்கார வளைவுகள், கொடி கம்பிகள் வைக்கக்கூடாது l மாநாட்டில் கலந்து கொள்வோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது l ஜாதி, மத மோதலை துாண்டும் விதமாக பேசக்கூடாது. இப்படி, 27 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு த.வெ.க., சார்பில் போலீசில் அனுமதி கேட்டபோது 'மேடையில் விஜய் மட்டுமே பேசுவார்' என தெரிவிக்கப்பட்டது. இச்சூழலில், போலீசார் 26வது நிபந்தனையாக, 'சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது' என கட்டுப்பாடு விதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

xyzabc
ஆக 13, 2025 23:09

No freedom of speech in dravida model rule? If the central government imposes any rule, it is termed as BJP aggression. Dravida government has too much of dictatorial power. Where is kuruma?


ராம் சென்னை
ஆக 13, 2025 23:07

இதற்கு பேசாம பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே


முருகன்
ஆக 13, 2025 22:16

திமுகவை மட்டும் விமர்சித்து விஜய் இரட்டை வேடம் போடுவது ஏன் தேர்தலில் நின்று தான் ஓட்டு சதவிகிதத்தை நிருபிக்க வேண்டும்


guna
ஆக 14, 2025 04:19

திருட்டு திமுகவிற்கு கள்ள ஒட்டு போடும் முருகன்


Rajan A
ஆக 13, 2025 09:33

இதற்கு பேசாம பனையூரிலயே இருக்கலாம்


SUBBU,MADURAI
ஆக 13, 2025 13:34

இந்த ஜோசப் விஜய்க்கு முட்டுக் கொடுக்க முண்டியடிச்சிகிட்டு வருவானே ஏன் இன்னும் ஆளை காணோம்!


SUBBU,MADURAI
ஆக 13, 2025 17:29

Oviya vijay


SUBBU,MADURAI
ஆக 13, 2025 22:13

ஜோசப் விஜய் அங்கிள் திங்கட்கிழமை அன்று மாநாடு வச்சிருக்கீங்க அன்னைக்கு எங்களுக்கு பள்ளிக்கூடம் அதனால மாநாடை எங்களுக்கு லீவு அன்னைக்கு மாத்தி வைங்க


vivek
ஆக 14, 2025 04:18

ஓவிய விஜய். பல போலி பெயர்களில் கருத்து போட்டுக்கொண்டு இருக்கிறது


VENKATASUBRAMANIAN
ஆக 13, 2025 08:09

திமுக விஜய்யை வளர்த்து விடுகிறது.


angbu ganesh
ஆக 13, 2025 12:13

எவ்ளோ வளர்ந்தாலும் ....


Padmasridharan
ஆக 13, 2025 07:50

தடுக்க தடுக்க மேலும் மேலும் உயரும் மா நாடு.. வெற்றிக்கு இதுவே ரோடு..


Appan
ஆக 13, 2025 06:57

இந்த சினிமாக்காரர்கள் இன்னும் அரசியல் எம்ஜியார் காலம் போல் உள்ளது என்று நினைத்து அரசியலில் இறங்குகிறார்கள். தமிழகத்தில் எம்ஜியார் காலத்தில் ஏழ்மை, அறியாமை அதிகம் இருந்தது. இந்த 75 வருட ஆட்சியில் தமிழகம் வளர்ந்து விட்டது.. கல்வியில் அதுவும் உயர்கல்வியில் வளர்ந்த அமெரிக்காவை விட தமிழகம் அதிக சாதத்தில் படிக்கிறார்கள். எம்ஜியாரின் சத்துணவு திட்டம் தமிழகத்தில் கிராமப்புற ஏழை எளியவர்களின் குழந்தைகள் பெரிய அளவில் பள்ளிக்கு வந்தார்கள். அதனால் தமிழகம் கல்வியில் முன்னணியில் உள்ளது. இந்த மக்களிடம் கனவு உலக நடிகர்கள் ஆட்சிக்கு வரடியாது. எம்ஜியார் தன் வாழ்க்கையை வறியவர்களுக்காக வாழ்ந்தவர். இந்த விஜய் எந்த காரில் வருகிறார். எம்ஜியார் அம்பாசிட்டரை தவிர வேறெந்த காரிலாவது வந்துள்ளாரா. சரத்குமார். சிவாஜி, ராஜேந்தர், விஜயகாந்த் ..என்ன நடந்தது? முதலில் இந்த விஜயின் தமிழக கனவு என்ன என்று சொல்ல முடியுமா. .. ?.


Mani . V
ஆக 13, 2025 06:33

இதுக்கு எதுக்குடா வெள்ளையும், சொள்ளையுமா திரியணும்? அப்பனும், மகனும் எங்கும் அரசியல் பேசலாம். மற்றவர்கள் பேசக்கூடாதா? ஆமா, தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சிதான் நடைபெறுகிறதா?


Raj
ஆக 13, 2025 06:13

கட்சி மாநாடு என்பது காமெடி செய்யவா கூடுகிறார்கள், அரசியல் விமர்ச்சனம் பேசுவதற்கு தான், ஏன் கழக ஆட்சியில் கல்யாண மண்டபத்திலே பேசுகிறார்கள் அரசியலை பற்றி.


suresh Sridharan
ஆக 13, 2025 05:39

ஒரே வார்த்தை மாநாடு நடத்தக்கூடாது இதற்கு மேல் இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை