உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கொள்கை கூப்பாடு போட்டு ஏமாற்றுவோர்; முதல்வர் மீது விஜய் பாய்ச்சல்

கொள்கை கூப்பாடு போட்டு ஏமாற்றுவோர்; முதல்வர் மீது விஜய் பாய்ச்சல்

சென்னை: 'விஜய் வெளியே வரவே மாட்டான்; மக்களை சந்திக்கவே மாட்டான் என்றவர்கள், இப்போது வெவ்வெறு விதங்களில் புலம்ப துவங்கி உள்ளனர்' என, த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

'உங்கள் விஜய்; நான் வரேன்' என்ற மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்து தந்த, திருச்சியில் துவங்கினோம். எளிதாக கடந்து விடும் துாரத்தை கூட, மக்கள் கடலில், பல மணி நேரம் நீத்தியே, கடக்க வேண்டிய சூழல் இருந்தது. இதை, நாடும் நன்றாகவே உணர்ந்தது. நம் கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளும், இன்னும் ஆழமாக உணர்ந்திருப்பர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a3gmlfcs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 'விஜய் வெளியே வரவே மாட்டான்; மக்களை சந்திக்கவே மாட்டான்' என, ஆள் வைத்து கதையாடல் செய்தவர்கள், இப்போது, வெவ்வேறு விதங்களில் புலம்பத் துவங்கி உள்ளனர். இதை, முன்கூட்டியே ஒப்புக் கொள்வது போலத்தான், தங்களது கதறலை, முப்பெரும் விழா என்ற கடிதம் வாயிலாக, வெளிப்படுத்தி இருந்தனர். புதிய எதிரிகள் என்று பெயர் சொல்லாமல், அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை காண முடிந்தது. வெறுப்பையும், விரக்தியையும் வடிவமைத்த வார்த்தைகள், அந்த கடிதத்தில் அழுது கொண்டிருந்தன. வெளியே கொள்கை என்று பேசுவதும், உள்ளுக்குள்ளே பா.ஜ.,வோடு உறவாடுவதும் யார் என, மக்கள் புரிந்து கொள்ள துவங்கி விட்டனர். எனவே, கொள்கை கூப்பாடு போட்டு ஏமாற்றிக் கொண்டே, கொள்ளை அடிப்போர் யார் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன. எம்.ஜி.ஆரை, அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் என்றும், வெறும் கவர்ச்சியை மாத்திரம் வைத்துக் கொண்டிருப்பவர் என்றும், தங்கள் மனதில் மண்டி கிடந்த வெறுப்பு, நெருப்பை கக்கியவர்கள், இன்று மட்டும் மாறிவிடுவரா? மக்கள் சக்தியுடன் களம் காணும், த.வெ.க.வை எப்படி குறை கூறாமல் இருப்பர். யார், எத்தனை கூப்பாடு போட்டாலும், எப்படி கதறினாலும், எத்தகைய வெறுப்பை கக்கினாலும், நாம் முன்னேறி செல்வோம். உயரிய அடிப்படை கோட்பாட்டோடு, மத சார்பற்ற, சமூக நீதி என்ற மகத்தான கொள்கையோடு, பாதை வகுப்போம். 2026 சட்டசபை தேர்தலில் 1967 மற்றும் 1977 தேர்தல்களில், நிகழ்ந்ததை போல, மிகப்பெரிய வெற்றியை மக்கள் சக்தியின் பேராதரவுடன், த.வெ.க. நிச்சயம் நிகழ்த்திக் காட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெரம்பலூருக்கு மீண்டும் வருவேன்

விஜய் வெளியிட்ட மற்றொரு அறிக்கை: நமது மக்கள் சந்திப்பு பயணம், தித்திப்புடன் திருச்சியில் துவங்கியது. தொடர்ந்து, அரியலுார், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பு, மனம் நெகிழச் செய்தது. அனைவருக்கும் கோடானு கோடி நன்றி. இந்த உணர்வுமிக்க நிகழ்ச்சிக்கான பணிகளை மேற்கொண்ட, த.வெ.க., மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. வழிநெடுகிலும், மிக நீண்ட துாரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலை. எனவே, நேற்று முன்தினம் நள்ளிரவு கடந்தும், பெரம்பலுாரில் நம்மை சந்திக்க கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளைக் காண இயலாத சூழல் ஏற்பட்டது. எனவே, மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலுார் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உருவானது. பேரன்பு கொண்டு காத்திருந்த, பெரம்பலுார் மக்களிடம், என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக, உங்களை சந்திக்க மீண்டும் வருவேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rajah
செப் 15, 2025 18:55

பேராசை என்றால் அது உதயநிதிக்கும் பொருந்தும். இன்றைய முதல்வரும் ஒரு நடிகர்தான். தமிழகத்தின் சினிமா உலகமே திமுக கையில்தான். சினிமா, கூத்தாடிகள் மூலம்தான் திராவிடம் பிரபல்யம் அடைந்தது.


ram
செப் 15, 2025 16:14

மக்களிடம் கொள்ளை அடித்த லாட்டரி பணம் இப்போது தண்ணீராக செலவு செய்கிறார்கள், மக்களே அந்த பணம் உங்களுடையது கூச்சப்படாமல் வாங்கி கொள்ளுங்கள்.


Mr Krish Tamilnadu
செப் 15, 2025 14:31

கேள்வி கேட்கும் அரசியலால் தான், நலத்திட்டங்கள் மெருகு ஏறும். அரசியல் தூய்மை படும். விஜய் அவர்கள், மற்ற மாநிலங்களின் செயல்படும் நல்ல திட்டங்களை கூறி, இங்கு ஏன் செயல் படுத்த பட வில்லை என கேள்வி எழுப்பினால், இன்னும் நன்றாக இருக்கும். அதே போல், மாவட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி, இதற்கு இத்தனை ஆண்டுகளாக ஏன் தீர்வு தர வில்லை என கேள்வி எழுப்பினால், அவரின் அரசியல் ஞானம், மக்கள் பணி ஆர்வம் மக்களுக்கும் தெரியும்.


Anand
செப் 15, 2025 13:58

இந்த கூத்தாடிக்கு பேராசை, பெரு நஷ்டத்தில் முடியும்


Tamilan
செப் 15, 2025 11:36

இவர் எப்படி ஏமாற்றுகிறார்? பாஜவிடம் தவமிருந்து அரசியல் சட்ட குண்டர்களை தானமாக பெற்றது முதல் இன்றுவரை மக்களை எப்படி ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் ?


muthuvel
செப் 15, 2025 11:03

கண்டிப்பாக இந்த சதிகாரனை பாருங்கள் அனைத்தும் தொலைத்து நடு தெருவில் வரவில்லை என்றால் கேளுங்கள்


சாமானியன்
செப் 15, 2025 08:12

அதிமுகவிற்கு இன்னமும் 35−40% சதவீதம் ஓட்டு வங்கி பலமாக உள்ளது. திமுக தோற்க வேண்டுமென்றால் பேசாம அதிமுக, பாஜகவோடு கூட்டு சேரவும்.


Velayutham rajeswaran
செப் 15, 2025 12:23

திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க வந்தவன் எப்படி அஇஅதிமுக உடன் கூட்டணி வைப்பார்கள்


மாபாதகன்
செப் 15, 2025 12:53

சாமானியன் சமீபமாக வந்த ராமராஜன் படம் பயங்கர பிளாப்பு?? காரணம் இன்னும் தனக்கு ஹீரோ மவுசு இருக்குன்னு தப்பு கணக்கு போட்டதுதான் சாமானியன் சறுக்குனதுக்கு காரணம். இதுவே பகுத்தறிவு கொண்ட சத்யராஜ் பழம்பெருமையை பற்றி நினைக்காமல் தனது வயது மற்றும் சூழ்நிலைகளுக்கு தகுந்தமாதிரி தன்னை வடிவமைத்து கொண்டதால் இன்னும் திரையில் பிரகாசிக்கிறார். ஜே ஜெ இருக்கும்போதே வாக்கு சதவீதம் 34% என்றால் இப்போது நாலு கந்தலாக மாறி நிற்கும் அதிமுக வாக்கு சதவீதம் இருபது இருந்தாலே பெரிய விஷயம் அதிலும் பாஜக கூட்டணி என்பதால் சிறுபான்மையினர் வாக்குகளிலும் பெரிய ஓட்டை விழுந்து விட்டது தையல் போட வந்த கவுண்டர் செங்கோட்டையன் அவர்களையும் துரத்தியாச்சு இந்த நிலைமையில திமுகவை ஜெயிக்கிறதுல்லாம் நெனைக்க கூட முடியாது.


krishnamurthy
செப் 15, 2025 07:32

அளவுக்கு மீறிய ஆசை. நாட்டை கெடுக்க அடுத்த தலைவலி


தனவேல்
செப் 15, 2025 07:22

வெட்டி விசை


vivek
செப் 15, 2025 08:06

நீ தான் அந்த சொம்பு வேலா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை