உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருச்சி கிழக்கில் விஜய் போட்டி சாதகமான தொகுதி பட்டியலில் முதலிடம்

திருச்சி கிழக்கில் விஜய் போட்டி சாதகமான தொகுதி பட்டியலில் முதலிடம்

சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிடுவதற்கான தொகுதியை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்படி, திருச்சி கிழக்கு, திருவாடானை, மதுரை மேற்கு உட்பட 15 தொகுதிகள், விஜய் போட்டியிடுவதற்கு சாதகமான தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. திருச்சி கிழக்கு தொகுதியில் ஆதி திராவிடர், கிறிஸ்துவர், முஸ்லிம், வெள்ளாளர் சமுதாய ஓட்டுகள் அதிகம் உள்ளன. எனவே, விஜய் அங்கு போட்டியிட்டால், வெற்றி பெறும் வாய்ப்பிருப்பதாக 'சர்வே'யில் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, அந்த தொகுதியில் போட்டியிட விஜய் முடிவு செய்திருப்பதாகவும், அங்குள்ள கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், திருச்சி கிழக்கு தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை விட 50,000 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிட, அமைச்சர் மகேஷ் விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால், திருச்சி கிழக்கு தொகுதி தற்போதே முக்கியத்துவம் பெற துவங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

chinnamanibalan
செப் 11, 2025 17:29

விலை கொடுத்து, வாக்குகளை வாரி அள்ளும் திராவிட கட்சியின் ஆட்சி காலம் இது. இதற்கு முன்பாக சாதி பலம், சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி பலம் எதுவும் எடுபடாது என்பதை தவெக தலைவர் விஜய் உணர வேண்டும். எதிர்கட்சிகள் அனைத்தும் நெல்லிக்காய் போன்று சிதறி கிடப்பதால், ஆதாயம் எல்லாம் திமுக வுக்குதான் என்பதை தேர்தல் முடிவுகள் நிச்சயம் உணர்த்தும்.


Venugopal S
செப் 11, 2025 11:05

சினிமா பைத்தியங்கள் அதிகம் என்ற பட்டத்தை மதுரை மக்களிடமிருந்து திருச்சி மக்கள் தட்டிப் பறித்து விடுவார்கள் போல் தெரிகிறது!


Sun
செப் 11, 2025 11:00

திருச்சி கிழக்கில் வெள்ளாளர் சமூக வாக்குகள் அதிகம். அதை நம்பி களம் இறங்குவார் போலிருக்கு


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 11, 2025 10:53

தான் ஒரு சுத்தமான திமுக காரன் என்பதை இந்த ஜாதி பார்த்து நிற்பதில் இருந்து நிரூபித்து விட்டார். இளைஞர்களே சினிமாவில் நீங்கள் காண்பதெல்லாம் நிஜத்தில் நடக்காது என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். சினிமாக்காரர்கள் முதல் திராவிட கட்சிகள் அனைத்தும் ஜாதி பார்த்து மக்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரித்து வைத்துள்ளது. தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட அல்லது தனது ஜாதி மக்கள் தொகை அதிகம் இருக்கும் தொகுதி பார்த்து நின்று வாய்க்கு வந்த வாக்குறுதிகள் கொடுத்து ஜெயித்த பின்னர் தனது சொந்த இலாபங்களுக்காக மக்களை தாழ்ந்த ஜாதி சாதிகாரனை தாழ்ந்தவனகாவே காட்டியும் பிற்படுத்தப்பட்டவனை பிற்படுதபட்டவனகாவே வைத்து தங்களது வாரிசுகளும் பதவி அதிகார சுவை ராஜபோக வாழ்க்கை அனுபவிக்க வைத்து இருப்பார்கள். நேபாளத்தில் வாரிசுகள் ராஜபோக வாழ்க்கை அனுபவிக்க போய்த் தான் அங்கு இளைஞர்கள் விழித்துக் கொண்டு கலவரம் வெடித்தது. இங்கு கலவரம் எல்லாம் வேண்டாம் ஜாதி அரசியல் வாரிசு அரசியலை ஒழிக்க தேர்தலை பயன்படுத்துங்கள்.


ஆரூர் ரங்
செப் 11, 2025 10:43

கல்லறைக்கு நடுவே தீண்டாமைச் சுவர். இது திருச்சியின் அதிசயமாம். . பிஷப் பதவிகளில் பட்டியலின இடஒதுக்கீட்டுக்கு விஜய் குரல் கொடுக்க வேண்டும்.


பிரேம்ஜி
செப் 11, 2025 07:35

ஏன்? திண்டிவனம் மேற்கு, தில்லையாடி வடக்கு, சாணார்பட்டி தெற்கு, நியூயார்க் சென்ட்ரல் இங்கும் போட்டியிடலாமே!


ராமகிருஷ்ணன்
செப் 11, 2025 06:39

திருச்சி மன்னர் நேருவுக்கு தெரியுமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை