வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பாவம் ஒரு மாதிரி குழம்பிப் போய் இருக்கிறார்கள். யாரை நம்பி கட்சியை ஆரம்பித்தாரோ, அந்த திருமா ஒரேயடியாக கவிழ்த்து விட்டார். தனியாக போட்டியிட்டால் எங்கே விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் வரிசையில் சேர்ந்து விடுவோமோ என்கிற பயத்தில் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்து ஏலம் போடாத குறையாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்கள். ஏதோ ஒரு ஆர்வத்தில் எட்டிப் பார்த்த அதிமுக, இவர்கள் நிபந்தனையைக் கேட்டு தலை தெறிக்க ஓடி விட்டது. அந்த வயிற்றெரிச்சலும் சேரந்து இப்போது எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலைமையில் இருக்கிறார்கள். ஒப்பிட்டுப்பார்த்தால் விஜயகாந்த்தின் தன்னம்பிக்கை மலைக்க வைக்கிறது. இரண்டு தேர்தல்களை தனியாக சந்தித்து பத்து சதவீத வாக்குகள் பெற்ற பிறகு தான் கூட்டணி பற்றி யோசித்தார்.
தமிழக சட்டபேரவை தேர்தலில் ஓட்டுக்கு நோட்டு, குவார்ட்டர், கோழி பிரியாணி இல்லாமல் மக்கள் வாக்களிப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி? அந்த அளவுக்கு சலுகைகளுக்காக, திராவிட கட்சிகள் மக்களை மூளைச் சலவை செய்து வைத்தள்ளன,
இன்னும் செடியை நாடவில்லை. அது வரழ்ந்து காய் காக்க வெகு நாட்கள் ஆகும். ஏதற்கு இந்த பூவைத்துப். இடை வைத்து காமடி படம் எடுக்கலாம். வெட்டியாக நியூஸ் போட்டு பேப்பர் பக்கம் நிராபாத்திகீர்கள்
இது காமெடி அல்ல... மதுரை மேற்கு தொகுதி என்றில்லை தமிழகத்தில் எந்த தொகுதியில் விஜய் போட்டியிட்டாலும் கண்டிப்பாக அவருக்கு வெற்றி உறுதி. 2026 தேர்தல் முடிந்த பின் அவருக்கு தமிழக மக்களிடம் இருக்கும் மவுசைப் பார்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் மிரளப் போகின்றனர்... அப்போது படுதோல்வி அடைந்து பரிதாப நிலையில் இருக்கப் போகும் அதிமுக கூட பேசாமல் பிஜேபியுடன் கூட்டணி வைத்ததை விட தவெகவுடன் கூட்டணி வைத்திருக்கலாமோ என நினைத்துப் பார்க்கும்... தவெக வென்று ஆட்சி அமைப்பார்கள் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் விஜய் போட்டியிடும் தொகுதியில் வெற்றியும் மற்ற தொகுதிகளில் அதிமுக மற்றும் பிஜேபி கட்சிகளை விட அதிக ஓட்டுக்களும் பெறும்.
விஜய் மட்டும் அவர்கட்சியில் வெற்றி பெற்றால் மட்டும் போதுமா???
கள நிலவரம் தெரியாமல் பலர் இன்னும் ஒரு மாயையிலேயே இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அந்த மாயையே படுகுழியில் தள்ளிவிட்டது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும். சிறப்பாக நடனமாடுவது, பஞ்ச் டயலாக் பேசுவது, ரொமான்ஸ் செய்வது இவை மட்டுமே நாடாளும் தகுதியை கொடுத்து விடும் என்று மக்கள் நினைத்தால் தவிர விஜய் வெற்றி பெறுவதற்கு எந்த வாய்ப்பகளும் இல்லை. கட்சி ஆரம்பிப்பதற்கு முன் ஓரிரு ஆண்டுகள் கல்வி உதவி அளித்து விட்டு எம்ஜியாரை உதாரணமாகக் கொள்வது புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதை தான்.
இன்னும் இந்த மாதிரி நினைப்பு இருக்கிற கோமாளி நிறைய பேர் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்.. டவுசரை கழட்டி வீட்டுக்கு அனுப்ப போவது உறுதி.. தமிழ் நாட்டு மக்களை பற்றி இன்னும் தெரியவில்லை...
பிரச்சனையே இது தான்.... சினிமா துறையில் பலருக்கு தெரியும் விஜய் சினிமாவில் சுட்ட வசூல் வடை பற்றி... ஆனால் அப்பாவி ரசிகர்களுக்கு அவ்வளவு அறிவு இல்லை.... அரசியலில் அதே வேலை தான் நடக்கும்...
மன்னிக்கவும் மதுரை மேற்கு தொகுதியில் உள்ள இரண்டு லட்சம் வாக்குகளை விட அதிகமாக ஒரு லட்சத்து பத்தாயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று வாசிக்கவும்! அவர் தமிழகத்தில் மொத்தம் நான்கு தொகுதிகளில் போட்டி இட்டார் என்பது குறிப்பிடத்தக்கது