உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மக்கள் பார்வையில் கேலி பொருளாகிறோம்: பார்லி., அமளியால் ஜக்தீப் தன்கர் வேதனை

மக்கள் பார்வையில் கேலி பொருளாகிறோம்: பார்லி., அமளியால் ஜக்தீப் தன்கர் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பார்லிமென்ட் அலுவல்களை நான்காவது நாளாக, எதிர்க்கட்சியினர் நேற்றும் முடக்கினர். இதனால் வேதனையடைந்த துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர், “மக்களின் பார்வையில் நாம் அனைவரும் கேலி பொருளாகி வருகிறோம். இது மிகவும் தவறான முன்னுதாரணம்,” என்றார்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து பாதிக்கப் பட்டு வருகிறது. அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி, சபையை முடக்கி வருகின்றனர். நான்காவது அலுவல் நாளான நேற்று, காலையில் ராஜ்யசபா கூடியதும் சபை தலைவர் ஜக்தீப் தன்கர் பேசியதாவது:ஒத்திவைப்பு தீர்மானங்கள் கோரும், 267 விதியை சபை அலுவல்களுக்கு குறுக்கீடு செய்வதற்கான ஆயுதமாகவே எதிர்க்கட்சிகள் மாற்றி விட்டனர். மக்களின் பார்வையில் நாம் அனைவரும் கேலி பொருளாகி வருகிறோம். இது மிகவும் தவறான முன்னுதாரணம். இதை ஊக்கப்படுத்த முடியாது. நம் நடவடிக்கைகள் எல்லாமே பொதுமக்களின் நலன்களை மையமாக வைத்து செயல்பட வேண்டும்.ஆனால், தற்போது சபையில் நடப்பது அதுபோல் தெரியவில்லை. இது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.தினந்தோறும் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பல்வேறு முக்கிய விஷயங்கள், மக்களின் பிரச்னைகள் எல்லாவற்றையும் சபையில் விவாதிக்க வேண்டிஇருக்கிறது.ஆனால், அதை புறந்தள்ளிவிட்டு அமளியிலும், கூச்சல் குழப்பத்திலும் ஈடுபடுவது சரியல்ல. பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து விதி எண் 267ன் கீழ், 18 ஒத்திவைப்புத் தீர்மானங்கள் என்னிடம் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், சபை விதிகளுக்கு பொருந்தாது என்பதால் நிராகரிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான கோஷங்களை எழுப்பினர். சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்த சபை தலைவர், வேறு வழியின்றி சபையை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.லோக்சபாவிலும் காலையில் கேள்வி நேரம் அலுவல்கள் துவங்கியதும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபையை ஒத்திவைத்துவிட்டு, அதானி லஞ்ச விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பினர். இன்னும் சிலரோ, மணிப்பூரில் கலவரங்கள் ஓய்ந்த பாடில்லை; அதுகுறித்தும் வாதம் நடத்த வேண்டும் என்றனர். அவர்களை, சபாநாயகர் ஓம் பிர்லா எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்பதாக தெரியவில்லை. இதையடுத்து, பகல் 12:00 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.இடைவெளிக்குப் பின், மீண்டும் சபை கூடியபோதும் அமளி தொடரவே, திங்கட்கிழமை வரை லோக்சபாவும் ஒத்திவைக்கப்பட்டது. - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

K.n. Dhasarathan
டிச 01, 2024 11:47

பாராளுமன்றம் எதற்கு? விவாதம் நடத்தத்தானே? ஜால்ரா போட்டு பாட்டு பாடவா? எதிர்க்கட்சிகள் கேட்பதை விவாதியுங்கள், என்ன கஷ்டம், அல்லது என்ன பயம்? விவாதத்தை நெறி படுத்துவதற்குத்தான் அவை தலைவர், அவர் இஷ்டம் போல பேச அல்லது நடத்த இது ஒன்றும் பள்ளிக்கூடம் அல்ல, அவை நடத்த தெரியாமல், எதெற்கெடுத்தாலும் ஒத்தி வைப்பது அவை நடத்த தெரியாதது மட்டுமல்ல, அவையை கேவல ப்படுத்துவது ஆகும். அவை நடத்த தெரியவில்லை எனில் ராஜினாமா செய்யட்டும், கேலி கூத்து கூடாது.


மறு ஜென்மம்
நவ 30, 2024 16:30

ராகுல் கான் செயல்பாடும் அப்படி தான் இருக்கு


ஆரூர் ரங்
நவ 30, 2024 08:21

அதானி வழக்கு விஷயங்களில் INDI கூட்டணியின் முக்கிய தலை சரத் பவார்,அடக்கி வாசிக்கச் சொல்லுகிறார். லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட INDI கூட்டணியின் முன்னாள் இந்நாள் முதல்வர்களே மறுக்கின்றனர். ஆக ஆதாரமில்லாத பொய் வழக்குகளின் பின்னால் போட்டி அன்னிய பன்னாட்டு நிறுவனங்களின் தூண்டுதல் அப்பட்டமாக தெரிகிறது. பார்லிமெண்டில் கலாட்டா மூலம் ஏழை மக்களின் வரிப்பணம் வீணாகிறது.


anantharaman
நவ 30, 2024 07:48

தொடர் முடியும் வரை அமளியில் ஈடுபடும் எதிர்க் கட்சிகளை தடை செய்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். சபை நடக்காவிட்டால் கழுதைகளுக்கு சம்பளம் தரக் கூடாது.


ghee
நவ 30, 2024 07:13

ரவுடிகளின் கூட்டமாக எதிர்கட்சிகள்...ஒட் ஓட விராடவெண்டும்


அப்புசாமி
நவ 30, 2024 06:28

ஏன்? அதானி, மணிப்பூர் விவகாரங்களால் நாடே பெருமைப் படுதாக்கும்?


venugopal s
நவ 30, 2024 06:28

கோமாளிகள் கையில் நாட்டை ஆளும் பொறுப்பை ஒப்படைத்து விட்டால் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?


hari
நவ 30, 2024 07:16

இவன் இன்னொரு வீணா பொன் வேணுகோபால்


Kumar
நவ 30, 2024 06:12

ஏன் மத்திய அரசு அதானி மற்றும் மணிப்பூர் பிரச்சினைகளை பற்றி விவாதிக்க இரு சபைகளும் அனுமதி தரவேண்டியது தானே ஏன் மறுக்கிறது......


ghee
நவ 30, 2024 08:15

கரெக்ட் ....அதானி ஸ்டாலின் ரகசிய சந்திப்பு எதற்கு என்று எதிர் கட்சிகள் கேட்கிறார்கள்


ManiK
நவ 30, 2024 05:47

மோடி அரசு இன்னும் தைரியமாக செயல்பட்டு இந்த குழப்பவாத எதிர்கட்சி MP கும்பலை மக்களிடம் Expose செய்து strict action எடுக்கவேண்டும். அப்போது தான் மக்களுக்கும் நம்பிக்கை வரும்.


Balasubramanian
நவ 30, 2024 05:45

கேலியா? வெட்கக்கேடு! அதானி விவகாரம் வந்தவுடன் கூடவே மஹாராஷ்டிராவிலும் அடி பட்டவுடன் - மந்தி சாராயமும் குடித்து தேளும் கொட்டினால் எப்படி துள்ளுமோ- அப்படி குதித்து ரகளை பண்ணுவார்கள் என்று எதிர் பார்த்தது போலவே நடந்து கொண்டார்கள் ! ஒவ்வொரு நாளும் அவை ஒத்திவைக்கப்பட்டது! நிதானமாக நாகரீகமாக நடந்து கொள்ள தெரியாத இவர்கள் - நாட்டுக்கு என்ன நல்லது செய்து விடப் போகிறார்கள்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை