உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஈ.டி.,க்கும் பிரதமர் மோடிக்கும் பயப்பட மாட்டோம்: உதயநிதி

ஈ.டி.,க்கும் பிரதமர் மோடிக்கும் பயப்பட மாட்டோம்: உதயநிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் அருணா உள்ளிட்ட 13 துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், எந்த அளவுக்கு நடந்துள்ளது; மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதா; விடுபட்டவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறுவது எந்த நிலையில் உள்ளது?' என பல்வேறு கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்டு, அவர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டார் உதயநிதி. பணிகளை விரைந்து முடிப்பதற்கும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகளை விரைந்து சேர்ப்பதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரையும் வழங்கிய துணை முதல்வர் உதயநிதி, பின் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் உள்ளது. மாநில அரசின் நிதி உரிமையை மதிக்காமல் நடந்து கொள்கின்றனர். அதனால், நம்முடைய நிதி உரிமையை நிலை நாட்டவும், தமிழகத்துக்கு தேவையான நிதியை உரிமையோடு கேட்டுப் பெறவும், நம்முடைய முதல்வர் டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்துக்கு சென்றார். அங்கு, நம்முடைய உரிமையை நிலை நாட்டிப் பேசி உள்ளார். தமிழகத்தின் நலன்களுக்காக ஒரு நாளும் பாடுபடாத தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி, தி.மு.க.,வைப் பார்த்து கேள்வி மட்டும் கேட்பார். தி.மு.க.,வை யாரும் மிரட்டவும் முடியாது; அடிமையாக்கவும் முடியாது. அமலாக்கத்துறை என சொல்லப்படும் ஈ.டி.,க்கெல்லாம் நாங்கள் ஒரு நாளும் பயப்பட மாட்டோம்; ஏன், பிரதமர் மோடிக்கும் கூட பயப்பட மாட்டோம். தமிழகத்தின் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே தான் இருப்போம்.ஒரு நாளும் மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் தி.மு.க.,வைச் சேர்ந்தோர் அஞ்ச மாட்டோம். ஏனென்றால், தி.மு.க., என்பது அடிமை கட்சி அல்ல. கருணாநிதி உருவாக்கிய சுய மரியாதை இயக்கம். எங்கள் மீது பொய் வழக்குப் போட்டால், அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

கண்ணா
மே 25, 2025 22:34

எப்பொழுதெல்லாம் அப்பன் டில்லிக்கு போனாலும் பையன் நாடகம் போடுவார். அப்பத்தான் மக்களை முட்டாளாக்க முடியும்.அவரு போனது காலை பிடிக்க இல்லைன்னு மக்கள் நம்பிடுவாங்க.


ஜெகதீசன்
மே 25, 2025 20:54

ஒவ்வொரு முறையும் திமுக மீது பெரிய ஊழல் குற்றச்சாட்டு வந்ததும் ஒருவர் டில்லி சென்று வருகிறார்: அதோடு அந்த பிரச்சினை வலுவிழந்து போகிறது. என்ன தான் நடக்கிறது? ஊருக்கே தெரியும் ஊழல்களில் ஒன்றறைக் கூடவா EDயால் தண்டனை பெற்று கொடுக்க முடியல?


venugopal s
மே 25, 2025 19:42

இது உண்மை என்றால் நாங்கள் கூடத்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைக் கண்டு பயப்பட மாட்டோம்!


Balasubramanian
மே 25, 2025 18:17

கொசுக்கடி க்கு பயப்படும் இவர் பேசும் பேச்சை பார்! தேர்தல் தோல்வி காணும் வரையில் கொட்டும் மழையில் பிறக்கும் நிஜ கொசுக்கள் இவரை கடித்து தீரக்கட்டும்


தேஸ நேசன்
மே 25, 2025 14:40

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை வெறி பிடித்த கேடு கெட்ட ஒரு கூட்டம். இவர்கள் கொடுக்கும் காசை வாங்கி ஓட்டு போடும் மக்கள். இந்த கூட்டம் இனியும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.


h
மே 25, 2025 14:20

பரிதாபகரமான நிர்வாகம். மோசமான சட்டம் ஒழுங்கு. பெண்கள் பாதுகாப்பாக இல்லை. போதைப்பொருள் மாஃபியா


xyzabc
மே 25, 2025 13:20

மோடி சாரிடம் இருந்து அப்பாவுக்கு எவ்வளவு ரூபாய் கிடைத்தது?


Ramesh Sargam
மே 25, 2025 12:57

ஆனால் இவர் அப்பா டெல்லிக்கு சென்று மோடியிடம் தமிழகத்துக்கு நிதி தாருங்கள் என்று யாசகம் கேட்கிறார். இந்த சின்னது வாயை முதலில் அடக்கவேண்டும்.


h
மே 25, 2025 12:46

that's why delhi visit is?


essemm
மே 25, 2025 12:01

நீங்க எதுக்கு பயப்படப்போறிங்க. பத்து தலைமுறைக்கான சொத்துகளை சேர்த்துவச்சிடீங்கல்லா அப்புறம் திமிரா பேசாம என்ன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை