உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: ஸ்ரீராம் சேனா

நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: ஸ்ரீராம் சேனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓசூர் : “ஓட்டுக்காக ஹிந்துக்களை அவமதிப்பது சரியல்ல,” என, ஸ்ரீராம் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அவர் அளித்த பேட்டி:

தமிழக கிராமங்களில், கிறிஸ்துவர்கள் அதிகளவில் மதமாற்றம் செய்கின்றனர். முஸ்லிம்கள், ஜிகாதி மூலம் ஹிந்துக்களுக்கு எதிராக பயங்கரவாதிகளை வளர்த்து வருகின்றனர். அதற்கு தி.மு.க., அரசு துணை போகிறது. மாநிலம் முழுதும் கோவில்களை தாக்குவோரை, ஸ்ரீராம் சேனா தடுக்கும். நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். ஆனால், தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்புவோம். மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் ஹிந்துக்களுக்கு, குழந்தை பிறந்த நாளிலேயே, 1 லட்சம் ரூபாயும், நான்காவது குழந்தை பெற்றால், 2 லட்சம் ரூபாயும் டிபாசிட் செய்வோம். இது கர்நாடக மாநிலத்தில் நடந்து வருகிறது. விபூதி, குங்குமம், வளையல், பூ அணிவது ஹிந்துக்களின் தர்மம். வெறும் ஓட்டுக்காக சிலர், ஹிந்துக்களை அவமதிப்பது சரியல்ல. இதற்காக நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தஞ்சை மன்னர்
ஜூலை 22, 2025 12:55

"விபூதி, குங்குமம், வளையல், பூ அணிவது ஹிந்துக்களின் தர்மம். வெறும் ஓட்டுக்காக சிலர், ஹிந்துக்களை அவமதிப்பது சரியல்ல" இவர் யாரை சொல்லுகிறார் மத்திய ஒன்றிய அரசைய அவர்கள் தான் நீட் தேர்வுக்கு இப்படியெல்லாம் வரக்கூடாது என்று சொல்லுகின்றனர் தாலியை கூட கழட்ட சொல்லி இருக்கின்றனர்


Mettai* Tamil
ஜூலை 22, 2025 13:22

இந்து மத விரோத ஊழல் நாத்திகர்களைத்தான் சொல்லுகிறார்..


venugopal s
ஜூலை 22, 2025 11:40

நாட்டைக் கெடுத்து குட்டிச் சுவர் ஆக்காமல் இவர்கள் விட மாட்டார்கள் போல் உள்ளது! ஆனால் தமிழர்கள் அரசியல் வேறு ஆன்மீகம் வேறு என்பதை நன்கு புரிந்து கொண்டவர்கள்!


ஆரூர் ரங்
ஜூலை 22, 2025 12:50

ஆனால் பாதிரிகள் ஆசீர்வாதத்துடன் பிச்சை போட்டு அமைந்த ஆட்சி என ஒருவர் பேசினபோது அமைதி காப்பார்கள்.


Mettai* Tamil
ஜூலை 22, 2025 13:44

ஆமாம், இந்து தமிழர்கள் மட்டும் அரசியல் வேறு ஆன்மீகம் வேறு என்பதை நன்கு புரிந்து கொண்டவர்கள் ஆனால் பிற மதத்தை சேர்ந்த சமத்துவ தமிழர்கள் புரிந்து கொள்ள தேவை இல்லை ...


சிவன்பாலகுரு
ஜூலை 22, 2025 10:59

நாத்திக போர்வை போட்டுக்கொண்டு ஓட்டு பிச்சை கேட்க்கும் ஆத்திக அரசியல்வாதிகள்.


AMMAN EARTH MOVERS
ஜூலை 22, 2025 09:30

இவரை கொண்டுபோய் ...


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஜூலை 22, 2025 08:30

... இப்படி பேச தோணும் போல.


அப்பாவி
ஜூலை 22, 2025 07:46

ராமரே ரெண்டு குழந்தைகளோட நிறுத்திக்கிட்டாரு.


SUBBU,MADURAI
ஜூலை 22, 2025 11:47

இதுவரை நீ கேலி பண்ணாதது ...


அப்பாவி
ஜூலை 22, 2025 07:45

நாலாவது குழந்தைக்கு 2 லட்சமா? பிரசவ செலவு கூட கட்டுபடி ஆகாதே? அப்போ 14 குழந்தை பெற்றால் ஒரு கோடியா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை