வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தனியார் நிறுவனங்களுக்கு லாபம் தரும் கி.மீ 77 ரூபாய் ஆனால் அரசுக்கு நட்டம் தருமோ..
மத்திய அரசின் நிதியுதவியுடன் நடக்கும் திட்டம். ஸ்டிக்கர் மாடல் அரசு கட்டுமரம் பெயர் வைக்க முடியாது என்பதால் தாமதமா?.
சென்னை: தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு, ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், மின்சார பஸ்கள் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x3xn6s1q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நம் நாட்டில், பெட் ரோல், டீசலுக்கு மாற்றாக, பேட்டரி வாகனங்களை அதிகரிக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. 'தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில், முதற்கட்டமாக, 500 மின்சார பஸ்கள் இயக்கப்படும்' என்று, தமிழக அரசு அறிவித்து, 2020ம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டது.கே.எப்.டபிள்யு., ஜெர்மன் வங்கி உதவியுடன், மின்சார பஸ்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசு அறிவித்து ஐந்து ஆண்டுகளாகி விட்டன. இன்னும் மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதேநேரம், புதுடில்லி, குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துஉள்ளன. தமிழகத்தில் 39
நம் நாட்டில், கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, 5,300க்கும் மேற்பட்ட மின்சார பஸ்கள் பதிவாகி இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், 39 மின்சார பஸ்கள் பதிவாகி இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும், தனியார் பஸ்கள். மின்சார பஸ்கள் இயக்க, 1 கி.மீ.,க்கு 9 ரூபாய் முதல், 11 ரூபாய் வரை செலவாகிறது. டீசலில் இயக்கும் போது, 1 கி.மீ.,க்கு 25 ரூபாய் செலவுஆகிறது.எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கழகங்களின் செலவை குறைக்க, மின்சார பஸ்களை தாமதமின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போக்குவரத்து துறை வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். மூன்று முறை மாற்றம்
இது குறித்து, தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்க, மூன்று முறை டெண்டர் மாற்றப்பட்டது.தற்போது, டெண்டர் இறுதி செய்யப்பட்டு மின்சார பஸ்களை வாங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. நிர்வாகம் விரைவாக செயல்பட்டு, மின்சார பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.1,000 பஸ் இயக்க நடவடிக்கை
தமிழகத்தில் முதற்கட்டமாக, 100 'ஏசி' பஸ்கள் உட்பட, 500 மின்சார பஸ்களை இயக்க, தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பயன்பாட்டிற்கு வரும். ஒப்பந்தத்தின்படி, 12 ஆண்டுகள் பஸ்களை பராமரித்து இயக்குவது, உட்கட்டமைப்பை ஏற்படுத்துவது, ஓட்டுநரை பணியமர்த்துவது உள்ளிட்டவை ஒப்பந்ததாரரின் பணியாகும். ஒப்பந்ததாரருக்கு, கி.மீ., ஒன்றுக்கு, 'ஏசி' வசதி இல்லாத மின்சார பஸ்களுக்கு, 77.16 ரூபாய், 'ஏசி' பஸ்களுக்கு 80.86 ரூபாய் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, 1,000 பஸ்களை படிப்படியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.- அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள்
தனியார் நிறுவனங்களுக்கு லாபம் தரும் கி.மீ 77 ரூபாய் ஆனால் அரசுக்கு நட்டம் தருமோ..
மத்திய அரசின் நிதியுதவியுடன் நடக்கும் திட்டம். ஸ்டிக்கர் மாடல் அரசு கட்டுமரம் பெயர் வைக்க முடியாது என்பதால் தாமதமா?.