உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செயல் அலுவலர் நியமன ஆவணங்கள் எங்கே? கேட்கிறது அறநிலையத்துறை; தேடுகிறது கோவில் நிர்வாகம்

செயல் அலுவலர் நியமன ஆவணங்கள் எங்கே? கேட்கிறது அறநிலையத்துறை; தேடுகிறது கோவில் நிர்வாகம்

நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக, 47 கோவில்களின் முதல் செயல் அலுவலர் நியமன உத்தரவு நகல்கள்; சொத்துப் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்கும்படி, அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கான ஆதாரங்கள் இல்லாமல், கோவில் நிர்வாகத்தினர் தவித்து வருகின்றனர்.அறநிலையத் துறை கமிஷனர் தன் கட்டுப்பாட்டில் உள்ள, 47 கோவில்களின் மண்டல இணை கமிஷனர்களுக்கு, சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

நியமன உத்தரவு

அதில், நீதிமன்றத்தில் செயல் அலுவலர் நியமனத்தை எதிர்த்து வழக்கு உள்ளதால், அந்தந்த கோவில்களுக்கு முதன் முதலில் செயல் அலுவலர் நியமனம் செய்யப்பட்ட உத்தரவு நகல்; 1951ம் ஆண்டுக்கு முன், ஹிந்து சமய வாரியம் பிறப்பித்த உத்தரவு; கோவிலின் சொத்துப் பதிவேடு போன்றவற்றை அளிக்குமாறு கூறியுள்ளார்.இந்த அவசர சுற்றறிக்கைக்கான காரணம் குறித்து, ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 43,283 கோவில்கள் இருந்தாலும், அதன் வலைதளத்தில், 668 செயல் அலுவலர்கள் தான் என்று கூறப்பட்டுள்ளது. இவற்றில், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட, 11 கோவில்களின் செயல் அலுவலர்கள், இணை கமிஷனர்கள் நிலையில் உள்ளனர்.சுவாமிமலை, மருதமலை உள்ளிட்ட, ஒன்பது கோவில்களில் துணைக் கமிஷனர் நிலையிலும்; மலைக்கோட்டை, ஆலங்குடி உள்ளிட்ட, 27 கோவில்களில் உதவி கமிஷனர் நிலையிலும் உள்ளனர். இது இல்லாமல் நிலை 1ல் இருந்து நிலை 4 வரை உள்ள செயல் அலுவலர்கள் பணிபுரியும், 621 கோவில்கள் உள்ளன. இருப்பினும், ஆயிரக்கணக்கான கோவில்கள், செயல் அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதற்கு, அறநிலையத்துறை அளிக்கும் விளக்கம், ஒரு செயல் அலுவலரின் கீழ் பல கோவில்கள் வருகின்றன என்பது தான்.செயல் அலுவலர் நியமன உத்தரவே இல்லாமல், பல கோவில்கள் செயல் அலுவலர்களின் கீழ், 30, 40 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இது சட்டத்திற்குப் புறம்பான செயல்.இதற்கு சில உதாரணங்களாக, ஸ்ரீரங்கம், மதுரை, சமயபுரம். திருவண்ணாமலை கோவில்களில் செயல் அலுவலர் நியமன உத்தரவுகளை, அறநிலையத் துறையால் காட்ட முடியவில்லை.

சட்ட மோசடி

நிர்வாகத் திட்டம் இயற்றப்பட்டு, செயல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மயிலை கபாலீஸ்வரர், காஞ்சி காமாட்சி அம்மன், திருநாகேஸ்வரம் உப்பிலிப்பன் போன்ற கோவில்களில், செயல் அலுவலர் நியமன உத்தரவுகளைக் காட்ட முடியவில்லை.சட்டப் பிரிவு, 45ன் கீழ் செயல் அலுவலர் நியமனம் செய்யப்பட்ட நெல்லையப்பர், கள்ளழகர், பார்த்தசாரதி, பேரூர் கந்தசுவாமி, திருவொற்றியூர் தியாகராஜர் கோவில்களில், ஐந்து ஆண்டுகள் மேல் ஆகிவிட்டதால், அந்த நியமன உத்தரவுகளும் செல்லாததாகி விட்டன.கடந்த, 2022ல் சென்னை உயர் நீதிமன்ற அமர்வில், என் சார்பில், 47 கோவில்களை குறிப்பிட்டு, அங்கே செயல் அலுவலர் நியமனம் செய்யப்படவில்லை; எனவே, அங்கு செயல் அலுவலர்கள் நிர்வாகம் செய்வது சட்ட மோசடி என்று வழக்கு தொடரப்பட்டது.'மனுதாரரின் கோரிக்கையை ஏன் ஏற்கக் கூடாது; இதற்கு அரசு விளக்கம் தர வேண்டும்; ஆவணங்களை அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.அறநிலையத் துறை கமிஷனர் பதிலுரையில், ஒரு கோவிலின் செயல் அலுவலர் நியமன உத்தரவு குறித்து கூட, எந்த விளக்கமும் தரவில்லை. மேலும், ஒரு செயல் அலுவலர் நியமன உத்தரவையும் அளிக்கவில்லை.இந்த வழக்கு, ஜன., 19ம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக, இறுதி விசாரணைக்கு வந்தது.

47 கோவில்

தலைமை நீதிபதி, 'இந்தக் கோவில்களில் உத்தரவு நகல்கள் இருந்தாலும், செயல் அலுவலர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இருக்க முடியாது; மனுதாரரின் வழக்கறிஞர் ராகவாச்சாரி, 47 கோவில்களின் பட்டியல் கொடுத்துள்ளார். இவற்றின் நியமன உத்தரவுகள் என்ன சொல்கின்றன?' என்று கேட்டார்.தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இதுகுறித்த அரசின் நிலைப்பாடை தெரிவிக்க அவகாசம் கோரினார். நீதிமன்றம், வழக்கை மார்ச் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.இந்த வாதங்களின் அடிப்படையில், நீதிமன்றத்தில் செயல் அலுவலர் நியமனங்கள் சட்டப்பூர்வமாகத் தான் செய்யப்பட்டன என்று காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில், அறநிலையத்துறை உள்ளது. இதற்காகவே, இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், கமிஷனர் கேட்டுள்ள ஆவணங்கள், ஆதாரங்கள், சம்பந்தப்பட்ட கோவில்களில் இல்லாததால், நிர்வாகத்தினர் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

நகல் கிடைக்கவில்லை

செயல் அலுவலர்கள் சிலர் கூறியதாவது:செயல் அலுவலர் நியமன உத்தரவை பிறப்பிப்பவர் கமிஷனர் தான். அதனால், அவரது அலுவலகத்தில் தான் அதற்கான நகல்கள் இருக்கும்.அங்கு இல்லாத உத்தரவு நகல்கள், கோவில்களில் இருக்க வாய்ப்பில்லை. பணி செய்த செயல் அலுவலர் பெயர்கள், பணிக்காலம் ஆகியவற்றை மட்டுமே, எங்களால் தர முடியும். ஆனால், முதன்முதலில் செயல் அலுவலர் நியமனம் செய்த உத்தரவு நகல் கிடைக்கவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர்- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sivagiri
பிப் 23, 2024 21:58

இதுநாள் வரை கோவில் பணத்தில் இருந்து எடுக்கப் பட்ட சம்பளம் /பேட்டா / கார் காபி டிபன் / இதர படிகள் இத்யாதிகளை கணக்கிட்டு தமிழ்நாடு அரசிடம் வசூலித்து கோவில் கணக்கில் சேர்க்க வேண்டும் ,


sankar
பிப் 23, 2024 21:31

இருந்தாதானே வரும்


Nachiar
பிப் 23, 2024 18:47

இந்துக்களின் சுதந்திரத்தை தவமாக ஏற்று அறப்போர் நடத்தும் திரு ரமேஷ் ரங்கராஜன் போன்றோருக்கு தாழ் வணங்கி வாழ்த்துகிறேன். உங்கள் போர் வெளி நாடுகளில் வாழும் என்னை போன்ற இந்துக்களுக்கும் தான். வெல்க உங்கள் அறப்போர் உங்கள் தவம் ஈடேற எனது ப்ரார்தனைகள். ஜெய் சிவராம்


N Annamalai
பிப் 23, 2024 15:50

அரசு ஒன்றும் செய்யாமல் வாய்தா வாங்கிக்கொண்டு காலத்தை ஒட்டி விடுவார் .நீதிபதி மாற்றப்படுவார் .அப்புறம் மறுப்பு[அடியும் முதலில் இருந்து ஆரம்பிப்பார்கள்.அதற்குள் நியமன ஆணைகளை தார் செய்து விடுவர்.கிரிப்டோ ஆட்கள் கோவில்கள் முழுவதும் கொள்ளை அடிக்க உத்தரவு பிறப்பித்து உள்ளார்கள் .இந்த துறையை ஊத்தி மூடி விடலாம் .அந்த அந்த ஊர் பெரியவர்கள் நடத்த விடலாம் .கொள்ளை அடிப்பது உள்ளூர் காரர் ஆகட்டும் .அதில் நல்லவர்கள் இருக்கலாம் அல்லவா ?.அவர்கள் பள்ளி கல்லூரி இலவச உணவுக்கூடம் இலவச செருப்பு காப்போர் இலவச கழிப்பறை என எல்லா வசதியையும் செய்யட்டும் வரும் மக்களுக்கு .


ஆரூர் ரங்
பிப் 23, 2024 15:03

சட்டப்படி எந்த ஆலய நிர்வாகத்தையும் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் மேற்பார்வையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு கிடையவே???? கிடையாது ஆனால் 50 ஆண்டுகளுக்குப் பின்னும் உள்ளே உட்கார்ந்து அதிகாரம் செல்கிறார்கள். ஆலய வருமானத்தில் 14 சதவீதம் ஆடிட் கட்டணமாக எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். ஆனால் EXTERNAL தணிக்கை நடப்பதில்லை.


duruvasar
பிப் 23, 2024 14:53

ருட்ரட்சஷ பூனை எங்கேயாவது ஓடி ஒளிஞ்சுக்கும்


jayvee
பிப் 23, 2024 14:06

திமுக மற்றும் எடப்பாடி திமுக இரண்டுமே கோவில்களை வளைத்து வளைத்து சுரண்டியுள்ளன


GMM
பிப் 23, 2024 13:51

செயல் அலுவலர் நியமன உத்தரவு போடுவது, கமிஷனர். தேர்வு செய்து யார்? உத்தரவு பெற்று பின் தான் செயல் அலுவலர் பொறுப்பு ஏற்க வேண்டும். அனைத்து உத்தரவும் செயல் அலுவலரிடம் / கோவில்களில் இருக்க வேண்டும். உத்தரவு ஆவணம் இல்லாமல் எப்படி பணியேற்பு, விடுவிப்பு செய்ய முடியும்? மேலும் இதன் நகல் சம்பந்தப்பட்ட நிதி, ஓய்வு ஊதிய அரசு துறைகளுக்கு செல்லும். செயல் அலுவலர் 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்க முடியாது. அநேக கோவில்களில் சட்டம் படித்தவர்கள் நியமிக்க காரணம் என்ன? கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ் ஆட்சி, பனகல்… என்று குழப்ப தகவல்கள் உள்ளன. 18 ம் நூற்றாண்டில் தெய்வ பக்தி, பயம் அதிகம். இப்போதுள்ள கொள்ளை கூட்டம் இருந்து இருக்காது? கோஹினூர் வைரம் திருடியது யார்? கோவில் தமிழகம் சொத்து அல்ல. தென்னிந்திய இந்து மக்கள், இந்திய மக்கள் சொத்து. மத்திய அரசு உரிய சட்டம் போட்டு, அறநிலைய துறையாக நீக்க வேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
பிப் 23, 2024 13:37

இவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் ..... இவருக்கு பாதுகாப்பு தேவை ......


sankar
பிப் 23, 2024 13:05

எல்லாமே டம்மிதானா - அடப்பாவமே


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை