உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புலிகளை புகழும் வீடியோக்கள்: என்.ஐ.ஏ.,விடம் சாட்டை சமர்ப்பிப்பு

புலிகளை புகழும் வீடியோக்கள்: என்.ஐ.ஏ.,விடம் சாட்டை சமர்ப்பிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை புகழ்ந்து பேசிய, 1,500 வீடியோக்களை, என்.ஐ.ஏ., அலுவலகத்தில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி, 'சாட்டை' துரைமுருகன் சமர்ப்பித்தார்.சேலம் மாவட்டம் ஓமலுாரில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி துப்பாக்கி தயாரித்த, அதே பகுதியைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் மற்றும் கபிலர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளர்களாக செயல்பட்டனர்.தமிழகத்தில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி, பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டு செயல்பட்டு வந்தனர். மூவரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அப்போது, நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகியான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் மற்றும் இசை மதிவாணன், விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோர், வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சமீபத்தில் திருச்சியில் சாட்டை துரைமுருகன் வீடு உட்பட ஆறு இடங்களில் சோதனை செய்தனர். அப்போது, ஏழு மொபைல் போன்கள், எட்டு 'சிம் மற்றும் மெமரி' கார்டுகள், நான்கு 'பென்டிரைவ்' உள்ளிட்ட 'டிஜிட்டல்' ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதன் அடிப்படையில், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் ஆகியோரிடம், பல மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தனர். மேலும், விடுதலைப் புலிகள் தொடர்பாக, 'சாட்டை' எனும் 'யு -டியூப்' சேனலில் பதிவேற்றம் செய்துள்ள, அனைத்து வீடியோக்களையும் ஒப்படைக்க உத்தரவிட்டனர். அதன்படி, நேற்று சாட்டை துரைமுருகன் நேற்று, சென்னை என்.ஐ.ஏ., அலுவலகத்தில், 1,500 வீடியோக்களை சமர்ப்பித்தார். அவற்றை ஆய்வு செய்தபின், அதன் அடிப்படையில் விசாரணை தொடரும் என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

கிருஷ்ணதாஸ்
பிப் 16, 2024 18:37

சரியான சேட்டை போல் உள்ளதே!


செந்தமிழ் கார்த்திக்
பிப் 16, 2024 13:16

முளையிலையே கிள்ளி எறியா விட்டால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும். இந்திய இறையாண்மைக்கு பெரும் ஆபத்து. விடுதலை புலிகள் தற்போது இல்லை. ஆகையால் அவர்களை பற்றி பேசி, அப்பாவி மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு, வயிறு வளர்ப்பவர்கள் தான் இவர்கள். ஆமை கரி சாப்பிட்டோம், பூத பல் என்று இஷ்டத்துக்கு கம்பி கட்டும் கதைகளை சொல்வோர்களை எல்லாம் மக்கள் நம்ப கூடாது.


தமிழ்வேள்
பிப் 16, 2024 15:45

இதே தேச விரோதம் , தேச துரோகத்தை திமுக செய்தபோது அதற்கு ஆலவட்டம் வீசிய உங்கள் திராவிட கும்பல் , தற்போது ஆட்சியில் அமர்ந்து குறைவற கொள்ளையடிக்கும் திமுகவின் திருப்பணி பாத்திக்கப்படும் என்பதற்காக , உங்களைப்போன்ற தேச துரோகம் செய்து வயிறு வளர்க்கும் ,உங்கள் உடன்பிறவா சகோதரனை அழிக்க நினைக்கிறீர்கள் பாருங்க ,,,,,உங்கள் சகோதர பாசம் , சுய நலம் ,கொள்ளை வெறி புல்லரிக்கவைக்கிறது ..


Xavier,Tuticorin
பிப் 16, 2024 15:46

திமுகவுக்கு நீ கட்டுறியே 8mm ல முறுக்கு கம்பி அதவிட தம்பிக கட்டுற கம்பிஎவ்வளவோ பரவாயில்லை.


Sck
பிப் 16, 2024 13:06

தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்திற்கு சாதகமாக பேசியிருந்தால் தேச துரோக வழக்கு பதித்து உள்ளே தள்ளவும்.


Sampath Kumar
பிப் 16, 2024 12:26

விடுதலை புலிகளை வைத்து பிழைப்பு நடத்தும் ...ள் ஒன்றை புரிந்து கொள்ள வேடும் தமிழ் நாட்டில் இது யாடு படைத்து அதுக்கு பல்வேறு காரணம் உள்ளது இங்கு உள்ள அரசியில் வியாதிகள் அப்படை இருந்தால் பல லச்சம் பேரை கொன்று கோவிந்தா இலங்கை அரசின் நிலையை பாருங்கள் கூடிவ் விரைவில் அந்த பாவப்பட்ட மக்களின் துயரம் மாறும்


ranjan
பிப் 16, 2024 12:03

சங்கிகளுக்கு பயம் வந்துவிட்டது


Chandran,Ooty
பிப் 16, 2024 12:49

? விசாரனையில் இருப்பது உன் நாதக கட்சியின் தும்பி..


Sck
பிப் 16, 2024 13:02

செத்த புலிய வச்சுக்கிட்டு அரசியல் பண்ணுவது அசிங்கம். மற்றும் சர்வதேச தீவிரவாத இயக்கம் உலக முழுக்க தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு அவர்கள் போடுகிற பிச்ச காசுக்கு காவடி தூக்கி கூத்தாடும் நாம் டம்பளர் கட்சிக்கு வாக்காளத்து வாங்குவது மஹா கேவலம்.


Nagendran,Erode
பிப் 16, 2024 15:48

அதை ஒரு கொத்தடிமை உபிசொல்வதுதான் காமெடி.????


Sridhar
பிப் 16, 2024 12:01

விடுதலைப்புலிகளை ஆதரித்ததையோ பிரபாகரனை தலைவனாக கொண்டாடுவதிலேயோ இவர்கள் மறுப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லையே? ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் நடத்துவதற்கு இவர்கள் பங்கு என்ன என்பதுதானே NIA வின் விசாரணையாக இருக்கும். எந்தவிதத்தில், இவர்களின் விடீயோக்கள் ஆய்வுக்கு உதவும்?


duruvasar
பிப் 16, 2024 11:55

நாம் தமிழர் கட்சியின் ஆண்டிமுத்து ராசா.


Karuthu kirukkan
பிப் 16, 2024 09:25

நீதி வழங்கும் பொது, அண்ணன் , தம்பி ஏழை, பணக்காரன் எதையுமே பாக்க கூடாது நியாயத்தை மடித்தும் தாண்ட சொல்லணும் - சுழலட்டும் சாட்டை


Sck
பிப் 16, 2024 13:03

மயக்கம் தான் வரும்.


HoneyBee
பிப் 16, 2024 09:08

வாய் ரொம்ப அதிகம் இவனுக்கு


sridhar
பிப் 16, 2024 09:05

தமிழில் ஒழுங்காக பேசுவது தவிர வேறு ஏதாவது சிறப்பு இவங்களுக்கு இருக்கா. அறுபது வருடம் முன்பு அடுக்கு மொழியில் ஏமார்ந்தோம் , இன்று வரை மீள முடியாமல் தவிக்கிறோம். மீண்டும் ஒரு வாய் வியாபாரி வேண்டவே வேண்டாம். நல்லவனுக்கு , செயல் திறன் உள்ள தேச பக்தனுக்கு வாக்களிப்போம்.


kulandai kannan
பிப் 16, 2024 16:07

மிகச் சரி


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை