உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காங்., செல்வப்பெருந்தகை சொல்லும் அயோக்கியன் யார்? அரசுக்கு அ.தி.மு.க., கேள்வி

காங்., செல்வப்பெருந்தகை சொல்லும் அயோக்கியன் யார்? அரசுக்கு அ.தி.மு.க., கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பொதுப்பணித் துறையில் ஒரு 'அயோக்கியன்' இருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யாரை சொல்கிறார்?' என அ.தி.மு.க., கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் சில நாட்களுக்கு முன், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்ததும், ஏரி அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதுார் தொகுதியின் எம்.எல்.ஏ.,வும், தமிழக காங்கிரஸ் தலைவ ருமான செல்வப்பெருந்தகை அங்கு சென்று, தனக்கு தெரியாமல் தண்ணீரை திறந்தது குறித்து அதிகாரிகளிடம் கேட்டார். மேலும், 'பொதுப்பணித் துறையில் ஒரு அயோக்கியன் உட்கார்ந்திருக்கிறான். ஜாதி வெறி பிடித்து போய், இந்த துறை இருக்கிறது. எப்போதுதான் ஜாதி வெறியில் இருந்து மீண்டு வரப் போகிறோமோ. 'ஏரியில் தண்ணீர் திறந்தால், அதை மக்களிடம் சொல்லி, பாதிக்கப்படுவோரை காப்பது மக்கள் பிரதிநிதிகள் தான். ஆனால், ஏரியில் நீர் திறப்பதை, தொகுதி எம்.எல்.ஏ.,வான எனக்குக் கூட சொல்லவில்லை' என கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அ.தி.மு.க., வெளியிட்ட பதிவு: தி.மு.க., கூட்டணி கட்சியான காங்கிரசின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தி.மு.க., அரசின் பொதுப்பணித் துறையை பார்த்து, 'வெறி பிடித்த துறை' என்கிறார். 'செம்பரம்பாக்கம் ஏரியை, நான் தொட்டு திறந்து விடக்கூடாதா?,' என அவர் கேட்கும் கேள்வியின் பின்னணி நமக்கு புரியாதா என்ன? இது தான், முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் சமூக நீதியா? தி.மு.க., கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியின் தலைவருக்கே கிடைக்காத சமூக நீதி, சாதாரண மக்களுக்கு, தி.மு.க., ஆட்சியில் எப்படி கிடைக்கும்? பொதுப்பணித் துறையில் ஒரு 'அயோக்கியன்' இருப்பதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அந்த அயோக்கியன் யார்? அதை ஊருக்கு சொல்ல வேண்டாமா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Venugopal S
அக் 24, 2025 21:43

பொழுது போகாமல் வெறும் வாயை மென்று கொண்டிருந்த சங்கிகளுக்கு கொஞ்சம் அவல் கிடைத்து விட்டது!


தினகரன்,இதம்பாடல் இராமநாதபுரம்.
அக் 24, 2025 23:05

அறிவாலய அடடிமையான ஜோம்பி வேணு உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை அடைப்பு எடுக்கிற வேலையை மட்டும் பார்...


Vasan
அக் 24, 2025 21:14

D_R_I M_R_G_N. is not the correct answer.


Venkat esh
அக் 24, 2025 20:46

ஒரு அயோக்கியனா?? போங்க சார்....


theruvasagan
அக் 24, 2025 18:06

ஈரவெங்காயம்தான் ஜாதியை எல்லாம் ஒழிச்சு கட்டிட்டுதாக மார்தட்டிக்கிறவர்களுக்கு அல்லும் பகலும் சாமரம் வீசி அடிமை சேவகம் செஞ்சுகிட்டிருக்கும்போதே தீடீர்னு சாதிவெறின்னு புலம்புனா எப்படி.


theruvasagan
அக் 24, 2025 17:56

தன்னை அழைக்கவில்லை என்ற உடனே இந்த மானஸ்தனுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்துடுச்சாக்கும். ஜாதிவெறி கண்ணுக்கு பட்டுதாக்கும். வேங்கை வயல் சம்பவத்துக்கு கோவம் ரோஷம் எதுமே வரலையே. அந்த அக்கிரமத்துக்கு யாருக்கும் ரத்தம் கொதிக்கவில்லையே. உணர்ச்சி கொந்தளிக்கவில்லையே. எதனால். அங்கே தனக்கு தனிப்பட்ட முறையில் எந்த அவமானமும் நடக்கவில்லை என்பதனால்தானே. அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு.


Vasan
அக் 24, 2025 15:18

திறக்கப்பட்ட ஏரியை மீண்டும் மூடிவிட்டு, திரு.செல்வப்பெருந்தகையிடம் சொல்லிவிட்டு, மறுபடியும் திறந்து வையுங்களேன். பிரச்னைக்கு முற்றுபுள்ளி வையுங்களேன்


thangam
அக் 24, 2025 14:06

துரைமுருகன்


Anantharaman Srinivasan
அக் 24, 2025 11:51

இப்படித்தான் மாற்றிமாற்றி கேள்வி கேட்பார்கள்.


theruvasagan
அக் 24, 2025 11:48

யார்னு கேட்டால் என்னத்த சொல்றது. திருப்பதிக்கு போய் மொட்டை தலையனை தேடு என்கிற மாதிரியில்ல இருக்கு.


Anand
அக் 24, 2025 11:23

ஒன்னு, ரெண்டு என்றால் தெரிய வாய்ப்புண்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை